375 திரையரங்குகளுக்கு மேல் திரையிடப்படும் ’திரௌபதி’!

தமிழ் சினிமாவில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை குறைந்தபட்சம் இரண்டு படங்கள் முதல் 7 படங்கள் வரை ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. பிப்ரவரி 28 அன்று வெளிவரவிருக்கின்ற படங்களின் பட்டியலில் அனைத்து தரப்பினராலும் கூர்ந்து கவனித்துவரக்கூடிய திரைப்படமாக திரௌபதி இடம்பெற்றுள்ளது. இயக்குனர் மோகன்.G தயாரித்து இயக்கியிருக்கும் குறைந்த பட்ஜெட் படம் திரெளபதி. இந்தப்படத்தின் முதல் டிரெய்லர் “ஜாதிகள் உள்ளதடி பாப்பா” என்கிற அடைமொழியோடு வெளியானபோது ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ச்சிக்குள்ளானது. சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான ரஜினியின் தர்பார் பட டிரெய்லர் பரபரப்பை பின்னுக்குத்தள்ளி அனைத்து சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் விவாத பொருளாக முதலிடத்தை ஒரு வார காலம் ஒன்றரை கோடியில் தயாரான திரெளபதி ஆக்கிரமித்து தக்கவைத்துக்கொண்டது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. படம் எந்த மாதிரியான கருத்தை முன்வைத்தது தயாரிக்கப்பட்டுள்ளது என்பது இயக்குநரை தவிர்த்து வேற யாருக்கும் தெரியாது.…

Read More

மீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்!

மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன்’. இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை,வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார். இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குனர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். படத்திற்கு ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்கிறார். பிண்ணனி இசை அமைப்பாளராக அலிமிர்சாக் பணியாற்றுகிறார். தயாரிப்பு நிர்வாகியாக அப்பு…

Read More

5 மொழிகளில் ‘சைலன்ஸ்’ – உலகமெங்கும் ஏப்ரல் 2ம் தேதி டிரைடன்ட் ஆர்ட்ஸ் வெளியீடு

பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி, கோனா பிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, மாதவன் – அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்க, இயக்குனர் ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் 5 மொழிகளில் ‘சைலன்ஸ்’ – உலகமெங்கும் ஏப்ரல் 2ம் தேதி டிரைடன்ட் ஆர்ட்ஸ் வெளியீடு பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி சார்பாக டி ஜி விஷ்வபிரசாத் மற்றும் கோனா பிலிம் கார்பரேஷன் சார்பாக கோனா வெங்கட் ஆகியோர் தயாரிப்பில், ‘ஏ ஃபிளாட்’, ‘வஸ்தாடா நா ராஜு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹேமந்த் மதுக்கர் இப்படத்தை கதை எழுதி இயக்குகிறார். இப்படத்தில் நாயகனாக மாதவன் நடிக்க, நாயகியாக அனுஷ்கா ஷெட்டி நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு பிரம்மாண்டான வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை, டிரைடன்ட் ஆர்ட்ஸ்…

Read More

கைபா பிலிம்ஸ், கோ ஸ்டுடியோஸ், மற்றும் நாஸிக் ராவ் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஹாலிவுட்டில் தயாரித்துள்ள படம் Trapcity

கைபா பிலிம்ஸ், கோ ஸ்டுடியோஸ், மற்றும் நாஸிக் ராவ் மீடியா ஆகிய நிறுவனங்கள்  இணைந்து ஹாலிவுட்டில் தயாரித்துள்ள படம் Trapcity.  பிராண்டன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஜிவி பிரகாஷும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ரிக்கி பர்செல் இப்படத்தை எழுதி இயக்கி யுள்ளார். இன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு, தயாரிப்பாளர் பேசியதாவது, டெல்.கணேசன் பேசியதாவது, “இந்தப்படம் எடுப்பதற்கான ஐடியா 2019-ல் வந்தது. ஒரு சவுண்ட் ட்ராக்  வேலைக்காகத் தான் ஜிவியைச் சந்தித்தேன்..அப்போது தான் அவரை ஹாலிவுட் அழைத்தேன். இப்படத்தில் சர்ஜனாக ஜிவி நடித்துள்ளார். படத்தின் ஹீரோ பிராண்டன் ஒரு பெரிய ராப் சிங்கர். அவர் அவரது வறுமை காரணமாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட போலிசாரால் சுடப்படுகிறார். அவருக்கு ட்ரீட்மெண்ட் செய்பவராக ஜீவி வருகிறார். இந்தச் சம்பவம் நடக்கும் போதே பிராண்டன் வெளியிட்ட…

Read More

‘ஸ்டுடியோ யூனோ ரெக்கார்ட்ஸ்’ – வடபழனியில் உலகதரத்தில் ஒரு ஆடியோ ஸ்டுடியோ உதயம்

உலக தரத்தில், அதிநவீன தொழிட்நுட்ப வசதிகளுடன், ஆடியோ சார்ந்த உங்களது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் உதயமாகி இருக்கிறது. பிரத்யேகமாக ஆடியோ தரவரிசையில் முன்னணியில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களின் உபகரணங்களை நுட்பமாகத் தேர்ந்தெடுத்து, மிகச் சிறந்த முறையில் தரமான பதிவேற்றங்களை தரவல்ல ஒரு அதிநவீன தொழில்நுட்ப கட்டமைப்புகளை வடிவமைத்திருக்கிறது. சுமார் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, சர்வதேச ஆடியோ உபகரணங்கள் தரவரிசை பட்டியலில் உயரத்தில் இடம் பெற்றிருக்கும்  ‘டைன்ஆடியோ’ நிறுவனத்தின் ‘கோர் சீரீஸ்’ இங்கு நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகச்சிறந்த வார்னர் ஸ்டுடியோஸ், பிபிசி லண்டன், மும்பையின் யாஷ்ராஜ் ஸ்டுடியோஸ்,  இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பலர் ‘டைன் ஆடியோ’ உபகரணங்களை பயன்படுத்தி வருவதே அதன் தரத்திற்கு சான்றாக அமைகிறது. இங்கு கதை, இசை குறித்தும் விவாதிப்பதற்கு வசதியேற்படுத்தி இருக்கிறார்கள். திரைப்படத்துறையினருக்கு அதிநவீன உபகரணங்களுடன், மிகவும் துல்லியமான…

Read More

தமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா

தமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5 ஆம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது. தமிழர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் இக்கோவில் அமைந்திருக்கும் தஞ்சை மண்ணில் பிறந்த பலர், தமிழகத்திற்கு மட்டும் இன்றி இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக பல்வேறு துறையில் பணியாற்றி வருகிறார்கள். அரசியல், கலை, சினிமா, தொழில்த்துறை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தஞ்சை மண்ணை சேர்ந்தவர்கள் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்கள். இசைத் துறைக்கு எம்.கே. தியாகராஜ…

Read More

ஓ மை கடவுளே – சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி & கௌதம் மேனன் !

காதல் கதைகள் என்றும் அழியா தன்மை கொண்டது. உலகில் எந்த மூலையிலும் வசிக்கும் எவரும் காதல் கதைகளை தன்னுடன் எளிதில் தொடர்பு படுத்தி கொள்வார்கள். எத்தனை காலம் கடந்தாலும் காதல் கதைகள் ஜெயித்து கொண்டே இருக்கும். மனிதன் உள்ளவரை காதலும் அழியாது. திரையில் சரியான விதத்தில் சொல்லப்படும் காதல் கதைக்கு மவுசு எப்போதும் அதிகம். அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் “ஓ மை கடவுளே” இன்றைய நவ நாகரீக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்கிறது. இப்படத்தின் டீஸர், புரமோ பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது. ஏற்கனவே விஜய்சேதுபதி இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்கிற நிலையில், இப்போது அடுத்த ஆச்சர்யமாக, இயக்குநர் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் எனும்…

Read More

ஆக்‌ஷன் கலந்த காமெடிப் படம்தான் ‘டகால்டி’ – டைரக்டர் விஜய் ஆனந்த் பேட்டி!

18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்த்த பிரபல திரைப்பட வினியோகஸ்தர் எஸ்.பி. செளத்ரி தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள ” டகால்டி ” என்னும் முழுமையான காமெடி படம் இம்மாதம் 31ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது. சந்தானம், யோகி பாபு , பெங்காலி திரை உலகக சார்ந்த முன்னணி நடிகை ரித்திகா சென், தெலுங்கு பட உலகை சார்ந்த பிரம்மானந்தம், இந்திப் பட உலகை சார்ந்த தருண் அரோரா, ஹேமந்த் பாண்டே, ராதாரவி, ரேகா, மனோபாலா, சந்தானபாரதி, நமோ நாராயணா, ஸ்டண்ட் சில்வா, என தமிழ், தெலுங்கு, பெங்காலி, இந்தி என நான்கு மொழி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த டகால்டி குறித்து இயக்குநர் இயக்குநர் விஜய் ஆனந்த்- திடம் கேட்ட போது, “இது ஆக்‌ஷன் கலந்த காமெடிப் படம். ஜாக்கிசான் படங்களைப் போல சண்டைக் காட்சிகள்…

Read More

எனது அதிகபட்ச ஆசை என்ன தெரியுமா? – ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி பேட்டி!

சில வருடங்களுக்கு முன்பு யூடியூபில் வைரலாக பரவிய குறும் படத்தின் மையக் கருவை அடிப்படையாகக் கொண்டு ‘நான் சிரித்தால்’ படத்தை உருவாக்கினோம். இதற்கு முன் வெளிவந்த ‘மீசைய முறுக்கு’ படத்திலும் யூடியூப் பிரபலங்கள் சிலருக்கு வாய்ப்புக் கொடுத்திருந்தோம். திறமை வாய்ந்த அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். ‘நட்பே துணை’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே எனக்கு ‘கெக்க பிக்க’ குறும்படம் மிகவும் பிடித்திருக்கிறது இதைத் திரைப்படமாக மாற்ற விரும்புகிறேன் என்று கூறினேன். ஒரு மாதத்தில் முழு கதையையும் எழுதி கொடுத்தார். அப்படித்தான் ‘நான் சிரித்தால்’ படம் உருவானது. இப்படம் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் என்பதால் படத்தில் வலிமையான கருத்து இருக்க வேண்டும். குறும்படத்தை போல திடீரென்று ஆரம்பித்து உடனே முடித்துவிட முடியாது. ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு விளக்கம் கூறியாக வேண்டும்.…

Read More

“ காவல்துறை உங்கள் நண்பன் “ பட விநியோக உரிமையை Creative Entertainers சார்பில் தனஞ்செயன் கைப்பற்றியுள்ளார் !

தயாரிப்பிலும், விநியோகத்திலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை குவித்து பெருமையுடன் வலம் வரும் Creative Entertainers நிறுவனர் G தனஞ்செயன் அவர்கள்  சுரேஷ் ரவி – ரவீனா நடிப்பில் உருவாகியிருக்கும் “காவல் துறை உங்கள் நண்பன்” படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளார். தயாரிப்பாளர் G. தனஞ்செயன் கூறியதாவது… நாங்கள் Creative Entertainers சார்பில் தரமான கதைகள் கொண்ட படங்களையே  தயாரிப்பதையும்,  விநியோகிப்பதையும் முதல் நோக்கமாக கொண்டு இயங்கி வருகிறோம். ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெறும் அதே நேரம் அவர்களுக்கு தரமான கதைகளை தரவேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கிறோம். இந்த நோக்கம் 2020 ஆம் வருடத்தில் பல நல்ல தரமான படங்களை  விநியோகிக்கும் பயணத்தில் எங்களை கொண்டுவந்திருக்கிறது. இப்பயணத்தில் “காவல்துறை உங்கள் நண்பன்” படம் ஒரு அற்புதமான தேர்வாக எங்கள் முன்னால் வந்தது. இப்படத்தை பார்த்தபோது தயாரிப்பு மற்றும்  விநியோகத்தில்…

Read More