தாராளபிரபு- விமர்சனம்!

முதல் வரியிலே சொல்லிவிடலாம்..பக்கா எனர்ஜிடிக் படம் இது. ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை தேடும் இளைஞனான ஹீரோ ஹரிஷ் கல்யாண் ஸ்போம் (உயிரணு) டோனராக மாறுகிறார். அவரை டாக்டரான விவேக் அந்த வேலைக்குப் பயன்படுத்துகிறார். இடையில் ஹீரோவுக்கு ஒரு காதல் வர, அந்தக் காதலி மனைவியாக அந்த மனைவிக்கு உண்மை தெரிய அடுத்து என்னானது என்பதே தாராளபிரபு.. முன்பாதி முழுதும் தாராளமாக காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். குறிப்பாக விவேக் அத்தனை காட்சிகளையும் அல்டிமேட் காட்சிகளாக்கி இருக்கிறார். பின்பாதி படத்தை அப்படியே செண்டி மெண்ட் ஏரியாவிற்குள் கொண்டு நிறுத்தி நறுக்கென்று முடித்துள்ளார் இயக்குநர். படத்தின் வசனங்கள் எல்லாம் 2K கிட்ஸ் மட்டும் அல்லாமல் எல்லாராலும் கொண்டாடப்படும்.. ஹரிஷ் கல்யாணுக்கு இப்படம் ஒரு கமர்சியல் ஹிட் படமாக அமைய வாய்ப்பு நிறையவே உள்ளது. அவரும் ஒரு கமர்சியல் ஹீரோவிற்கான தரத்தோடு தயாராகி…

Read More

கன்னிமாடம்-விமர்சனம் !

ஆணவக்கொலை சம்பந்தப்பட்ட கதை என்றால் பத்தடி தள்ளி நிற்கும் சினிமா ரசிகனை “இதையும் பார் நண்பா” என நட்போடு அழைக்கிறது கன்னிமாடம். இப்படம் பார்ப்பவர்களுக்கு சாதி வெறியர்கள் மேல் கோபம் வரும் என்பது முன் அறிவிப்பு. சென்னையில் தஞ்சம் புகும் காதல் ஜோடிக்கு அடைக்கலம் தருகிறார் ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக். அவர் கொடுக்கும் அடைக்கலத்தையும் மீறி அந்த ஜோடிகளுக்கு சில விபரீதங்கள் நடக்கின்றன. முடிவு என்ன என்பதே கன்னிமாடம். இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்திலே ஆணவக்கொலை என்ற மேட்டரை கையில் எடுத்துள்ள போஸ் வெங்கட்டின் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள். சமூகக் கருத்துள்ள படத்தைத் தயாரிக்க முன்வந்த ஹசீருக்கும் வாழ்த்துகள். அன்பு கேரக்டரில் வரும் ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக் நல்ல தேர்வு. விஷ்ணு ராமசாமியின் நடிப்பிலும் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. படத்தின் முக்கிய அம்சமே நாயகியின் கேரக்டர் தான். அதை…

Read More

ஓ மை கடவுளே- விமர்சனம்!

கடவுள் கையில் என்ன தந்திருக்கிறார் என்பதை உற்றுப் பார்க்காமலே கடவுளை குறை சொல்வதோடு அல்லாமல் நமக்கான சோகத்தை நாமே தேடிக்கொள்கிறோம் என்பதை கமர்சியலாக சொல்லி இருக்கிறது ஓ மை கடவுளே.. துறுதுறு அஷோக்செல்வனுக்கு ரித்திகா சிங் நல்ல தோழி. ஒருநாள் ரித்திகா சிங் அஷோக் செல்வனிடம் நாம் திருமணம் செய்துகொள்ளலாமா? என்று கேட்க அஷோக்கும் சரி என்கிறார். ஆனால் கல்யாண லைப் எதிர்பார்த்தது போல அமையவில்லை. அஷோக் கடவுளிடம் முறையிட கடவுள் அஷோக்கிற்கு என்ன செய்தார்? இதுதான் கதை. வெகு சாதாரண லைனை வைத்து ஒரு கலகல ட்ரீட்மெண்டால் படத்தை என்கேஜ்டாக வைத்து இருக்கிறார் இயக்குநர் அஸ்வத். சின்னச் சின்ன வசனங்கள் ஒவ்வொரு காட்சிகளுக்குமான தொடர்பு. எதிர்பாராத சிறுசிறு ட்விட்ஸ்கள் என படம் பிசிறடிக்காமல் பயணிக்கிறது. இதுதான் படத்தின் முதல் ப்ளஸ் பாயிண்ட். அடுத்து நடிகர்களின் பங்களிப்பு.…

Read More

ஹீரோ விமர்சனம்!

தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்ற ஒரு பேச்சு வழக்கு உண்டு, அப்படி அந்த தேவையை கண்டுபிடிப்பவரை அழிக்காமல் அவரது அறிவையும், அவர்கள் அறிவை வளர்க்க உதவி செய்யும் பேரறிவாளனையும் அழிக்க முயற்சி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலிகளை, திருட்டுத்தனம் பண்ணி திருந்திய ஒருவன் எப்படி எதிர் கொண்டு காப்பாற்றுகிறான் என்பதே இந்த ஹுரோ படத்தின் ஒரு வரிக்கதை. ஆசிரியராக வரும் அர்ஜுன், மார்க் வாங்காத மக்கு மாணவர்கள் என்று புறந்தள்ளப்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர்கள் இவர்களுக்கு இடையில் சிவகார்த்திகேயன் எப்படி நுழைந்தார் என்பது இயக்குனரின் கைவண்ணம். கார்ப்பரேட் கைக்கூலியாக வரும் அபய் தியோல் அசால்ட்டாக நடித்து அப்ளாஸ் வாங்குகிறார். அரவிந்த் சாமி பின் குரல் கொடுத்தது கூடுதல் பலம். புது முகம் கல்யாணி ப்ரியதர்ஷன் இயல்பாக நடித்திருப்பது இனிமை. ஜார்ஜ் வில்லியம்ஸ்ன் ஒளிப்பதிவு மிக அருமை. யுவனின் பாடல்கள்…

Read More

கேப்மாரி- விமர்சனம்!

எத்தனையோ சமுதாய கருத்துள்ள படங்களை இயக்கி புரட்சி இயக்குநர் எனப்பெயரெடுத்த எஸ்.ஏ சந்திரசேகர் சென்ற வருடம் ட்ராபிக் ராமசாமி என்ற கருத்தாழமிக்க படத்தை எடுத்திருந்தார். இளைஞர்களிடையே அது போதுமான வரவேற்பைப் பெறவில்லை. தற்போது இளைஞர்களின் பல்ஸ் பிடித்து ஒருபடம் எடுத்துள்ளார். அதுதான் கேப்மாரி. நான் இப்பவும் யூத்டா என்று யூத்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு படமெங்கும் துள்ளலான விசயங்களை அடுக்கி இருக்கிறார் எஸ்.ஏ.சி. நாயகன் ஜெய் நாயகி வைபவி சாண்ட்லியா இருவரும் ரயிலில் மீட் செய்து ஒருவருக்கொருவர் தங்களையே பரிமாறிக்கொள்கிறார்கள். அதோடு இரு வருடம் கழித்து இருவரும் மறுபடியும் மீட் பண்ண அவர்களுக்கு கல்யாணம் நடக்கிறது. இவர்களின் இல்லறத்திற்குள் படத்தின் இன்னொரு நாயகி அதுல்யாரவி நுழைகிறார். அதன் பின் ஜெய்யின் கல்யாண லைப் என்னானது என்பது தான் கேப்மாரி கதை. கேப் கிடைக்கிற இடத்தில் எல்லாம் மாறிமாறி…

Read More

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்!

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு- இந்த தலைப்பிற்கும் தமிழ் நாட்டிற்கும் என்ன தொடர்பு என்று யோசிப்பவர்களுக்கு ஆரம்பத்திலேயே ஒரு ஆவணப்படத்தை எடுத்து அமைதிப் படுத்தி விட்டார் அதியன் ஆதிரை. கடற்கரையில் ஒதுங்கிய குண்டு ஏன் காயிலாங்கடைக்கு செல்ல வேண்டும். அதை ஏன், தான் உண்டு தன் காதல் உண்டு என்று யோசிக்காமல் தன் டிரைவர் வேலையை நேசிக்கும் தினேஷ், பாண்டி சேரிக்கு எடுத்து செல்ல வேண்டும், அதை ஏன் ஆதிக்க வர்க்கம் அபகரிக்க முயற்சிக்க வேண்டும், அதே குண்டைப் பற்றி உலகத்திற்கு எடுத்து சொல்ல பொதுவுடைமை சமூகம் ஏன் முயற்சிக்க வேண்டும் என்று எந்த கேள்வியையும் மனதில் எழுப்ப விடாமல் கதையை நகர்த்தி சென்றிருப்பது இயக்குனரின் தனிச்சிறப்பு. தினேஷ் மீண்டும் ஒரு நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கயல் ஆனந்தி, முனீஷ்காந்த் ஆகியோரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி…

Read More

மகாமுனி- விமர்சனம்

ஒரு துறவி மனநிலை கொண்டவனின் வாழ்வும், கூலிப்படை மனநிலை கொண்ட மற்றொருவனின் வாழ்வும் ஒரு நேர்க்கோட்டில் சந்திக்கும் போது நிறைய சுவாரசியமான நிகழ்வுகள் அரங்கேறும் தானே! அதுதான் மகாமுனி. இயக்குநர் சாந்தகுமாரின் எட்டாண்டு உழைப்பு படத்தின் மேக்கிங்கில் அற்புதமாக தெரிகிறது. மேலும் படத்தின் கூர்மையான வசனங்கள் அவரின் பயண அனுபவத்தை பறை சாற்றுகிறது. ஏ மச்சான்… என இழுத்து ஒரே ஸ்லாங்கில் பேசி நம்மை கடுப்படித்து வந்த ஆர்யாவா இது? அடடா என்னாவொரு நடிப்பு!! மகா+முனி இரண்டு கேரக்டர்களிலும் துல்லியமான நடிப்பை வழங்கி இருக்கிறார். அவருக்கு சற்றும் சளைக்காத ஹீரோயின்கள் இந்துஜா மற்றும் மகிமா நம்பியார். வெளுத்து கட்டி இருக்கிறார்கள். இளவரசு, அவரது மச்சான் கேரக்டர் என படத்தில் வரும் எல்லாக் கேரக்டர்களும் வெகுவாக ஈர்க்கிறார்கள். தமனின் மெல்லிய மற்றும் அதிரடியான இசையும் அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவும்…

Read More

மோசடி – விமர்சனம்!

2017-ஆம் ஆண்டு டிமானிடேசன் என்ற ஒன்று நாட்டை அதகளப்படுத்தியது. அந்த மேட்டரை கதையோடு கோர்த்து விட்டதில் மோசடியின் இயக்குநர் ட்ராஸடி இல்லா பயணத்தைத் தொடங்கி விட்டார். படத்தின் ஆரம்பக் காட்சிகள் சதுரங்கவேட்டை படத்தை கண்முன் கொண்டு வந்து காயப்படுத்தினாலும் நாயகன் போலீஸ்டேசனில் தான் மக்களை ஏமாற்றுவதற்கான காரணத்தைச் சொல்லும் இடம் ஆறுதலைத் தருகிறது. போகிற போக்கில் இதுவும் ஒருபடம் என்ற அலுப்பைத் தரும் விசயங்கள் படத்தில் இல்லாமல் இல்லை. அதே சமயம் வொர்த்தான சில விசயங்களும் படத்தில் இருக்கவே செய்கறது. முக்கியமாய் கருப்புப் பணத்திற்கு எதிராக நாயகன் க்ளைமாக்ஸில் சொல்லும் விசயங்கள் எல்லாம் யோசிக்கக் கூடியவை. நடிகர்களின் நடிப்பு உள்பட பின்னணி இசை, டப்பிங், சவுண்ட் எஃபெக்ட் போன்ற விசயங்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். கூடுமான வரை இடைவேளைக்குப் பிறகான காட்சிகள் படத்தைக் காப்பாற்றி…

Read More

தேவி + 2- விமர்சனம்!

ரொம்ப நாட்களுக்குப் பிறகு சொல்லி அடித்திருக்கிறார் இயக்குநர் விஜய். குழந்தைகளை கொண்டாட வைக்கும் அளவில் ஒருபடம் வந்துவிட்டால் நிச்சயம் அப்படங்களை குடும்பங்களும் கொண்டாடும். தேவி படத்தில் தமன்னாவை பெண் பேய் வந்து ஆட்டும். தேவி+2-வில் பிரபுதேவாவை இரண்டு ஆண் பேய்கள் வந்து ஆட்டுகின்றன. அந்தப் பேய்களிடம் இருந்து தமன்னா எப்படி கணவனை மீட்டு எடுக்கிறார், பேய்கள் போடும் கான்ட்ராக்ட் என்னாச்சு என்பது தான் 2 மணி நேர தேவியாட்டம். நடிகர் பார்த்திபன் குரலில் தேவி முதல்பாகத்திற்கும் இந்த பாகத்திற்கும் உள்ள தொடர்போடு கதை துவங்குகிறது. அதனால் முதல் காட்சிக்கு முன்பே நாம் படத்தோடு ஒன்றி விடுகிறோம். மொரீசியஸ்க்கு தமன்னாவோடு செல்லும் பிரபுதேவாவிற்கு அங்கு தான் இரண்டு பேய்கள் பிடிக்கின்றன. அந்த இரண்டுப் பேய்களுக்கும் உள்ள மோட்டிவேஷன் ஒரு காதல் என்பது தான் கலாட்டா ஏரியா. தமன்னா பிரபுதேவாவின்…

Read More

என் ஜி கே – விமர்சனம்!

மிகப்பெரிய எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களை என்.ஜி.கே எந்தளவில் சந்தோஷப்படுத்தி இருக்கிறது? ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்கானிக் விவசாயம் செய்யும் சூர்யாவிற்கு நல்லது செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். செய்யும் நல்லவைகளை அதிகாரத்தில் இருந்தால் இன்னும் அதிகப்படுத்தலாம் என்று அரசியலுக்கு வர முனைகிறார் சூர்யா. அரசியலில் சூர்யா வாகை சூடினாரா? சோடை போனாரா? என்பது தான் என்.ஜி.கே. நெருப்பாக உழைத்திருக்கிறார் சூர்யா. படம் நெடுக எந்தப் பில்டப்பும் இல்லாமல் மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் அபார உழைப்பு தெரிகிறது கங்ராட்ஸ்! சாய்பல்லவி செய்யும் சின்ன சின்ன மேனரிசமும் நடுத்தர இல்லத்தரசிகளை கண் முன் கொண்டு வருகிறது. இளவரசு கதாபாத்திரம் ஒரு அதகள எம்.எல்.ஏவை நினைவுப்படுத்துகிறது. ரகுல் ப்ரீத்தி சிங் அழகாக இருக்கிறார். சில இடங்களில் தேவ் படத்தின் பாடிலாங்வேஜை காபிபேஸ்ட் பண்ணி இருக்கிறார். சூர்யா நண்பராக வரும் கேரக்டர், பொன்வண்ணன்…

Read More