எம்பிரான்’ – ஒரு சஸ்பென்ஸ் கலந்த ரொமாண்டிக் திரில்லர் படம்!

தனது புதுமையான கதை சொல்லல்  மூலம் புதிய ‘திகில்’ மற்றும் ‘சஸ்பென்ஸ்-மிஸ்டரி’ வகை திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு  கொடுத்தவர் இயக்குனர் மகிழ் திருமேனி. நிச்சயமாக, அவரது முதல் படம் ‘முந்தினம் பார்த்தேனே’ மெல்லிய காதல் கதை, அதுவும் நல்ல பாராட்டுக்களை பெற்றது. தற்போது அவரது சிஷ்யரான கிருஷ்ணா பாண்டி இந்த அனைத்து வகை படங்களின் கலவையாக, தான் இயக்குநராக அறிமுகமாகும் ‘எம்பிரான்’, படத்தை ஒரு சஸ்பென்ஸ் கலந்த ரொமாண்டிக் திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறார். “உண்மையில், என்னை ஒரு தயாரிப்பாளராக அல்லாமல், ஒரு பார்வையாளராக உடனடியாக கவர்ந்த விஷயம் இது தான். காதல் மற்றும் திகில் வகை படங்கள் என்பவை தான் நம்மை உடனடியாக தொடர்பு படுத்தி பார்க்க வைப்பவை. ‘காதல்’ என்பது  வாழ்க்கையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். ​​’திரில்லர்’ என்பது உற்சாக உலகத்துக்கு நம்மை அழைத்து…

Read More

இருட்டு அறையில் முரட்டு குத்து ’. அடல்ட் ஹாரர் காமெடி படம்தான்!.

மே மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் ஹாரர் காமெடி படத்தை பொழுதுபோக்கு படமாகத்தான் பார்க்கவேண்டும் என்று அப்பட இயக்குநர் சந்தோஷ் P.ஜெயகுமார் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நாயகன் கௌதம் கார்த்திக், நாயகிகளுள் ஒருவரான யாஷிகா ஆனந்த், நடிகர் சாரா, இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகை யாஷிகா ஆனந்த் பேசுகையில்,‘ இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கௌதம் கார்த்திக், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றிய போது என்னுடைய கனவு நனவானது போல் இருந்தது. அத்துடன்…

Read More

வனமகன் விமர்சனம்

சாயிஷா சிறுவயதில் இருக்கும்போது அவளுடைய பெற்றோர் ஒரு விபத்தில் இறந்துவிட, அதன்பிறகு சாயிஷாவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பிரகாஷ் ராஜ் வசம் வருகிறது. அதன்பின்னர், பிரகாஷ் ராஜ் சாயிஷாவின் பெயரில் நிறைய தொழில்கள் தொடங்கி சாயிஷாவை பெரிய தொழிலபதிர் ஆக்குகிறார். சாயிஷா பெயரிலேயே எல்லா சொத்துக்களும் இருப்பதால், தன்னுடைய மகனான வருணுக்கு அவளை திருமணம் செய்துவைத்து சொத்துக்களை தன்வசமாக்க நினைக்கிறார் பிரகாஷ் ராஜ். இந்நிலையில், அந்தமானுக்கு சுற்றுலா செல்லும் போது, காட்டுவாசியான ஜெயம் ரவியின் மீது கார் ஏற்றிவிடுகிறார்கள். அடிபட்டு கிடக்கும் ஜெயம் ரவிக்கும் சிகிச்சை அளிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்கிறார்கள். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்க முடியாததால் இந்தியா கொண்டு வந்துவிடுகிறார்கள். அவருக்கு சிகிச்சை அளித்து நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறார்கள். ஆனால், அவர் பழைய நினைவுகளை இழந்துவிடுகிறார். காடுதான் எல்லாமே என்று வாழ்ந்துவந்த ஜெயம்…

Read More

ப.பாண்டி விமர்சனம்

சினிமா ஸ்டண்ட் மாஸ்டரான ராஜ்கிரண், தன் மகன் பிரசன்னா, மருமகள் சாயா சிங், பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வருகிறார். வயதானாலும் இவர் வசிக்கும் பகுதியில் நடக்கும் தவறுகளை துணிச்சலுடன் தட்டிக் கேட்கிறார். இதனால் போலீஸ் இவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்கிறது. இது பிரசன்னாவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் ராஜ்கிரணிடம் பிரசன்னா கடுமையாக நடந்துகொள்கிறார். எனவே, இவர்களுக்கு இனிமேல் தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று நினைக்கும் ராஜ்கிரண், வீட்டைவிட்டு வெளியேறி தனது புல்லட்டில் நீண்ட தூரம் பயணம் செய்கிறார். அப்போது வழியில் அவரது வயதையொட்டிய சிலபேர் நண்பர்களாக கிடைக்க, அவர்களிடம் தனது முதல் காதலியை பார்க்க செல்வதாக கூறுகிறார். அவள் எங்கிருக்கிறாள்? என்பது தெரியாத ராஜ்கிரணுக்கு, நண்பர்கள் பேஸ்புக் பற்றி அவருக்கு தெரியவைத்து, அதன்மூலம் அவரது காதலியை தேட துணை புரிகிறார்கள். அதன்படி, ராஜ்கிரணும் தனது காதலி…

Read More

கடம்பன் நல்ல முயற்சி..! விமர்சனம்

கார்ப்ரேட்டுக்களின் பார்வையிலும், தொழில் முனைவோர்களின் பணத்தாசையிலும் சிக்கி பாடுபடும் இயற்கை கொடையான காடு பற்றிய படம் கடம்பன். பிரமாண்ட வெற்று விளம்பரங்கள், பில்டப் அதிரடி ஆக்‌ஷன் படங்களுக்கு மத்தியில் ஒரு வாழ்வியலை வலியோடு சொல்ல முயற்சித்ததற்காக இயக்குனர் ராகவா பாராட்டப்படலாம். கதா நாயகனாக ஸ்டைல் காட்டி ரொமான்ஸ் நாயகனாக வலம் வந்த ஆர்யாவை மாற்றி உடல் மொழிகளில் வித்தியாசம் காட்டி நடித்திருக்கும் ஆர்யா கேரியரில் கடம்பன் முக்கியமானவன். கதை என்று பார்த்தால் அடர்ந்த காடு. அதற்குள் காலம் காலமாக வசிக்கும் மலைவாழ் மக்கள். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்றி விட்டு காட்டை சூரையாட முயற்சிக்கும் ஒரு கோஷ்டி. கடம்பன் ஆர்யா காட்டை காப்பாற்றினாரா… காதல் ஜெயிச்சதா என்பது மீதிகதை. கதையின் மையகரு மிக அற்புத்மாமானது திரைக்கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் நலம். ஒளிப்பதிவு பல இடங்களில் பிரமிப்பு.…

Read More