துல்கருக்கு கோடியக்கரை படக்குழு வைத்த செக்

தமிழ்த்திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கப் போராடி வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். அவர் சமீபத்தில் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் சக்கைப்போடு போட்டது. அதனால் தமிழில் தனக்கென ஒரு இடம் இருக்கும் என சந்தோசப்பட்டார். ஆனால் அவரே அதை க் கெடுத்துக்கொண்டார். மலையாளத்தில் வரனே அவஷ்யமுண்டு என்ற படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப்படத்தில் ஒரு நாய்க்குப் பிரபாகரன் எனப்பெயர் வைத்திருந்தனர். இதனால் தமிழர்கள் கொந்தளித்தனர். அந்தப்படம் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தில் துல்கரும் சிக்கினார். நிச்சயமாக துல்கர் நினைத்திருந்தால் அப்படியொரு பெயரை நாய்க்கு வைக்க வேண்டாம் எனத்தடுத்திருக்கலாம். ஏனோ அவர் செய்யவில்லை. அந்தக் காரணமா என்னவென்று தெரியவில்லை. இப்போது கோடியக்கரை என்ற பெயரில் தயாராகியுள்ள படத்தில் ஒரு நாய்க்குப் பெயர் துல்கர் என வைத்துள்ளனர். இந்தக் கோடியக்கரைப் படத்தை பாயின்ட் காலிமர் பிலிம்ஸின் ருத்ரம்…

Read More

தமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா

தமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5 ஆம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது. தமிழர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் இக்கோவில் அமைந்திருக்கும் தஞ்சை மண்ணில் பிறந்த பலர், தமிழகத்திற்கு மட்டும் இன்றி இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக பல்வேறு துறையில் பணியாற்றி வருகிறார்கள். அரசியல், கலை, சினிமா, தொழில்த்துறை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தஞ்சை மண்ணை சேர்ந்தவர்கள் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்கள். இசைத் துறைக்கு எம்.கே. தியாகராஜ…

Read More

கடல் கடந்து கண்டங்கள் கடந்து ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் சித்தார்த் குமாரன்!

பல ஆண்டுகளாகச் சின்னத்திரையுலகில் விஜய் மற்றும் ஜீ தொலைக்காட்சிகளின் மூலம் இல்லங் கள் தோறும் சென்று பிரபலமானவர் சித்தார்த் குமாரன். ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ் என்று பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை மகிழவைத்தவர். என் பெயர் மீனாட்சி, ஆபீஸ், சரவணன் மீனாட்சி என்று தொடர்ந்து பலர் மனசில ரெக்க கட்டி பறக்கும் அழகிய தமிழ் மகன், சூப்பர் டான்சர், Mr. கில்லாடி, என்று தொடர்ந்து இன்று வருகிற தேன்மொழியில் ஊராட்சி மன்றத் தலைவராக என்று எத்தனையோ வேடமேற்று ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்தவர். சின்னத்திரை மூலம் பலரது இல்லங்களில் அறிமுகமாகி உள்ளங்களில் நுழைந்து கடல் கடந்து, கண்டங்கள் கடந்து ரசிகர்களைப் பெற்றிருக்கும் சித்தார்த் குமாரன் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். சித்தார்த்துக்கு Sidharth_kumaaran_fanclub என்ற பெயரில் கனடா, அமேரிக்கா, ஐரோப்பா,…

Read More