2019-ம் வருடத்துக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2019-ம் ஆண்டு மருத்துவ கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வில்லியம் ஜி.கேலின், சர் பீட்டர்  ராட்கிளிஃப், கிரேக் எல்.செமன்ஸா ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித உடலில் உள்ள செல்கள் எப்படி பிராணவாயு அளவுக்கு ஏற்ப தகவமைத்து கொள்கின்றன என்பதை கண்டறிந்ததற்கும் மேலும் செல்களின் வளர்சிதை மாற்றத்திற்கும், ஆக்சிஜன் அளவுக்குமான தொடர்பை கண்டறிந்ததற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மூவரின் கண்டுபிடிப்புகள் மூலம் ரத்த சோகை, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை எதிர்க்க புதிய…

Read More

சர்வதேச மணல் சிற்ப போட்டியில் இந்தியாவை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் சாம்பியன்!

இந்தியாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு அமெரிக்காவில் வழங்கப்படும் ‘மக்களின் தேர்வு விருது’ வழங்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக். இவர் நாட்டின் முக்கிய நிகழ்வுகளை மணல் சிற்பமாக உருவாக்கி, மக்களின் மனதில் இடம் பிடித்தவர். அமெரிக்காவின் பாஸ்டனில் ரிவெரி கடற்கரையில் சர்வதேச மணல் சிற்ப போட்டி நடைபெற்றது. இதில், உலகம் முழுவதிலும் இருந்து தலைச் சிறந்த மணல் சிற்ப கலைஞர்கள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து சுதர்சன் மட்டுமே பங்கேற்றார். இந்த போட்டியில், ‘பிளாஸ்டிக் மாசுபாட்டில் இருந்து நமது கடலை காப்பாற்றுங்கள்’ என்ற தலைப்பிலான மணல் சிற்பத்தை சுதர்சன் உருவாக்கினார். கடலில் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் மாசு, கடல் உணவுகள் மூலமாக மனிதனையும் பாதிக்கிறது என்பதை விளக்கும் வகையில் இந்த சிற்பம் அமைந்திருந்தது. இந்த சிற்பம் அமெரிக்காவின், ‘மக்களின்…

Read More

வீட்டுக்கு வீடு பசுமைத்தோட்டம்,..படகுகளில் மாட்டுக் கொட்டகை!- அசத்தும் நெதர்லாந்து!

ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்து மக்கள் நெருக்கடி நிறைந்த நாடு. 41,543 கிமீ பரப்பளவு கொண்ட இந்த சிறிய‌ நாட்டில் 17,308,133க்கும் அதிகமான மக்கள் உள்ளனர். மக்கள் தொகை 2050ல் 9.6 பில்லியனை தொடும் என எதிர்பார்க்கிறார்கள். எனினும், ம‌க்கள் தொகை அதிகளவை கொண்ட சிறிய‌ நாடான நெதர்லாந்து விவசாய உணவு உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. உலக அளவில் காய்கறி ஏற்றுமதியில் முதல் நான்கு இடங்களில் ஒன்றாக திகழ்கிறது. வீட்டுக்கு வீடு விவசாய குடில்களை அமைத்துள்ளனர். குறிப்பாக பசுமை குடில்கள் அதிகளவில் உள்ள நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்றாகும் உலகின் தக்காளி உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் நாடும் நெதர்லாந்துதான். இந்நாட்டில் மனிதர்கள் வசிக்கும் வீடுகளைவிடப் பசுமை வீடுகளின் எண்ணிக்கை அதிகம்.2017ல் 92 பில்லியன் டாலர் விவசாயம் பொருள்களை ஏற்றுமதி செய்து அமெரிக்காவுக்கு சவால் விட்டது.…

Read More

ஸ்டால் ஓட்டல்களில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்ட பிரதமர் மனைவி குற்றவாளி: இஸ்ரேல் நீதிமன்றம் தீர்ப்பு!

இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு கடந்த 2009 முதல் பதவி  வகித்து வருகிறார். இவர் மீது நிதி மோசடி, ஊழல் உள்ளிட்ட பல்வேறு  குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனிடையே, பிரதமருக்கான  அதிகாரப்பூர்வ இல்லத்தில் சமையலுக்கு முழு நேர தலைமை சமையல்காரர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் வரிப் பணத்தை பயன்படுத்தி, பல்வேறு உணவு வகைகளை பிரபல சொகுசு ஓட்டல்களில் இருந்து ₹70 லட்சத்துக்கு வாங்கி சாப்பிட்டதாக அவரது மனைவி சாரா நெதன்யாகு  மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டு குறைந்தப்பட்ச தண்டனை அளிக்கும்படி சாரா  கேட்டுக்  கொண்டார். இதையடுத்து, அவரை நேற்று குற்றவாளியாக அறிவித்த ஜெருசலேம் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு ₹1.95 லட்சம் அபராதம்  விதித்தார். மேலும், முறைகேடாக செலவு செய்த மக்களின் வரிப் பணமான ₹8.80 லட்சத்தை, 9 தவணைகளாக அரசு…

Read More

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கும் டூர் போக தயாரா?

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனிநபர்களையும் சுற்றுலா அழைத்து செல்லும் வர்த்தகத்தை துவக்க உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதுவரை விண்வெளி ஆராய்ச்சியாளர்களை மட்டும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்து சென்ற நாசா, இனி தனிநபர்களையும் சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது. முதல் சுற்றுலா பயணத்தை அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆரம்பிக்கவும் நாசா திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நாசா நேற்று (ஜூன் 07) அன்று வெளியிட்டது.சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சுற்றுலா சென்று, திரும்புவதற்கான கட்டணம் 58 மில்லியன் அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 கோடி). சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஒரு இரவு தங்குவதற்கு 35,000 டாலர்கள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 நாட்கள் கொண்ட இந்த பயணத்தில் அமெரிக்கர்கள் மட்டுமின்றி மற்ற நாட்டினரும் அனுமதிக்கப்பட உள்ளனர். விண்வெளி ஆய்வு மையத்திற்கு விஞ்ஞானிகள்…

Read More

உலக சுற்றுச்சூழல் தினம்!

உலகமெங்கும் வருடா வருடம் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது நாம் வசிக்கும் பூமியின் தேவையை, பாதுகாப்பை உணர்த்தும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட வாசகத்துடன் ஒவ்வொரு வருடமும் சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த வருடத்துக்கான சுற்றுச்சூழல் தின வாசகம் ”காற்று மாசுக்கு எதிராக கைகோர்க்க வேண்டும்” என்பதே. உணவில்லாமல், நீர் இல்லாமல் கூட சில நாட்களுக்கு உயிர் வாழ்ந்துவிட முடியும் .ஆனால் மூச்சு இல்லாமல் உயிர் வாழ முடியுமா? காற்று என்பது தான் அனைத்து உயிரினங்களின் அடிப்படை. உயிரினங்களையும் இந்த உலகத்தையும் இயக்கும் காற்று, நாளுக்கு நாள் மாசடைந்து வருவது வருத்தத்துக்கு உரியது. காற்று மாசு என்பது உயிரினங்கள் மீதான மிகப்பெரிய தாக்குதல். அந்த தாக்குதலுக்கு காரணமும் நாம் தான் என்பது மறுப்பதற்கில்லை. காற்று மாசு சத்தமில்லாமல் ஒவ்வொரு வருடமும் 7…

Read More

சீனாவில் ஆன்லைன் வணிக சேவையை நிறுத்திக்கொள்ளப் போகும் அமேசான்!

உள்நாட்டு போட்டிகளின் காரணமாக சீனாவில் ஆன்லைன் வணிகத்தை அமேசான் நிறுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானுக்கு போட்டியாக சீனாவில் உள்நாட்டு நிறுவனங்களான அலிபாபா, ஜே.டி.காம் உள்ளிட்டவை வேகமாக வளர்ந்து வருகின்றன. வர்த்தக ரீதியான போட்டிகள் காரணமாகவும, கடுமையான விதிமுறைகள் காரணமாகவும் 15 வருடங்களாக அந்நாட்டில் ஆன்லைன் வணிகம் செய்து வரும் அமேசான், அதனை வரும் ஜூன் மாதம் 18ம் தேதியோடு நிறுத்திக்கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே அன்று முதல் சீனாவில் உள்ளவர்கள் வெளிநாட்டில் செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே அமேசான் மூலம் வாங்க முடியும். மேலும் அமேசானின் வெப் சேவைகள், கிண்டில் இ-புத்தகங்கள் மற்றும் கிராஸ்-பார்டர் (cross-border) செயல்பாடுகளை சீனாவில் தொடரவும் அமேசான் முடிவு செய்துள்ளது.

Read More

இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்பு!

கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட மனித உயிர்களைக் குடித்த, இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இலங்கையில் கடந்த ஈஸ்ட்ர் தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை 45 குழந்தைகள் உள்பட 321 பேர் பலியாகி உள்ளனர். அதிலும் 35 வெளிநாட்டவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர், படுகாயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோருக்காக அந்நாட்டு மக்கள் செவ்வாய் கிழமை அன்று 3 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவசர நிலை பிரகடனம் மற்றும் ஊரடங்கு உத்தரவால், இலங்கையில் சாலைகள் வெறிச்சோடின. தாக்குதல் தொடர்பாக தற்போது வரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக இண்டர்போலின் ஒரு குழுவும் இலங்கை சென்றுள்ளது.இதனிடையே கட்டுவப்பிட்டியா…

Read More

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் நிறுவனர் மசூத் அசார் பலி?!

இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் நிறுவனர் மசூத் அசாரை பாகிஸ்தான்அரசு கொன்று விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம், பாலகோட் முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த அவனுக்கு ரகசிய இடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அது பலனின்றி நேற்று இறந்ததாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானதற்கு, பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள அந்த அமைப்பின் முக்கிய முகாம் மீது இந்திய போர் விமானங்கள் கடந்த 26ம் தேதி குண்டுவீசி தாக்குதல் நடத்தின. இதில், 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில்,…

Read More

எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இன்று பொறுப்பேற்றார்.

புதிய எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார். அதன்படி சமய வழிபாடுகளை தொடர்ந்து இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், தனது கடமைகளை பொற்றுப்பேற்றுள்ளார். புதிய எதிர்க்கட்சி தலைவர் நியமனம் பல்வேறு விமர்சனங்களை தோற்றுவித்திருந்த நிலையில், விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மஹிந்த ராஜபக்ஷ இன்று கடமைகளை பொறுப்பேற்றார். எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட போதிலும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தை ஒப்படைக்காத நிலையில் புதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்பதில் தாமதம் நிலவி வந்தது. அந்தவகையில், மஹிந்த தற்போது அலுவலகத்தை பொறுப்பேற்று கடமைகளை ஆரம்பித்தார்.

Read More