தமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா!

தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெரு வுடையார் கோயில் என்று  அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட  இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. இந்த கோயிலின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை -பிப்ரவரி 5 ஆம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது. தமிழர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் இக்கோயில் அமைந்திருக்கும் தஞ்சை மண்ணில் பிறந்த பலர், தமிழகத்திற்கு மட்டும் இன்றி இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக பல்வேறு துறையில் பணியாற்றி வருகிறார்கள். அரசியல், கலை, சினிமா, தொழில்த்துறை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தஞ்சை மண்ணை சேர்ந்தவர்கள் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்கள். இசைத் துறைக்கு எம்.கே. தியாகராஜ பாகவதரை கொடுத்த தஞ்சை, நடிப்புக்கு சிவாஜி கணேசனை…

Read More

புத்தாண்டில் கொடியேற்றத்துடன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா தொடக்கம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத திருவாதிரை ஆருத்ரா தரிசன விழா வருகிற புத்தாண்டு தினத்தன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்குவது கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில். சபாநாயகர் கோயில் எனப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மற்றும் ஆனி மாதங்களில் தேரோட்ட திருவிழா மற்றும் தரிசன விழா சிறப்பாக நடைபெறும். மார்கழி மாதத்துக்கான மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசன விழா வருகிற 1ம் தேதி புத்தாண்டு தினத்தன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கோயில் உத்சவ ஆச்சாரியார் சிதம்பர சபாபதி தீட்சிதர் கோயிலின் உள்ளே நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியை ஏற்றி வைத்து திருவிழாவை துவக்கி வைக்கிறார். அதை தொடர்ந்து தினமும் பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா…

Read More

சபரிமலையில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்!

சபரிமலையில் நாளை மறுதினம் மண்டலபூஜை நடைபெற உள்ளதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 40 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 15-ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப் பட்டது. நடை திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே தமிழகம், கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் 10 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் 26-ம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதற்காக கோயில் நடை 4 மணி நேரம் அடைக்கப்படுகிறது. மறுநாள் 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுவதால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால்…

Read More

ஆக., 1 முதல், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அத்தி வரதர்!

”அத்தி வரதர் நின்ற கோலம் தரிசனத்திற்கு, பக்தர்கள் அதிகம் பேர் வருவர் என்பதால், கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களும் பலப்படுத்தப்படும்,” என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும், அத்தி வரதர் வைபவம், 1ம் தேதி முதல் நடைபெறுகிறது. தற்போது, சயன கோலத்தில் இருக்கும் அத்தி வரதர், ஆகஸ்ட், 1ம் தேதி முதல், நின்ற கோலத்தில் அருள்பாலிக்க உள்ளார். அத்தி வரதர் நின்ற கோலத்தை காண, பக்தர்கள் அதிகம் வருவர் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கை குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர், பொன்னையா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: அத்தி வரதர் வைபவம், 28 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று, ஏகாதசி என்பதால், 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர், அத்தி வரதரை தரிசித்திருப்பர். காலை, கூட்டம் அதிகமாக இருந்ததால், பக்தர்களை தடுத்து நிறுத்தி, உள்ளே…

Read More

காஞ்சி: அத்திவரதர் தரிசன வைபவம்- கோலாகல தொடக்கம்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பின் அத்திவரதர் பக்தர்களுக்கு இன்று (ஜூலை 1) முதல் காட்சி தருகிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருந்த பக்தர்கள் இன்று முதல் வரதராஜ பெருமாள் கோவில் நோக்கி படையெடுக்க துவங்கி உள்ளனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் இன்று துவங்குகிறது. அனந்தசரஸ் குளத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் அத்தி வரதர் எழுந்தருளினார். வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அத்தி வரதர் சிலைக்கு கோவில் பட்டாச்சாரியார்கள் ஜல சம்ப்ரோக்ஷணம், புண்ணியாவதனம் ஹோமம் ஆகியவை நேற்று நடத்தினர். இதைத் தொடர்ந்து அத்தி வரதருக்கு தைல காப்பு அணிவிக்கப்பட்டன. ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தப்பட்டு வசந்த மண்டபத்தில் இன்று காலை 5:00 மணிக்கு அத்தி வரதர் காட்சிதருகிறார். பொதுமக்கள் காலை 5:00 மணிக்கு…

Read More

கும்பமேளா நிகழ்ச்சி, மகா சிவராத்திரியான இன்றுடன் முடிகிறது!

உத்தரப் பிரதேசம், அலகாபாத்தில் கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி புகழ் பெற்ற கும்பமேளா விழா தொடங்கியது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து புனித நீராடினர். சில விசேஷ நாட்களில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பதால், அதிக அளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள். கடந்த ஜனவரி 15 மகா சங்கராந்தி, ஜனவரி 21ல் பவுஷ் பூர்ணிமா, பிப்ரவரி 4 மவுனி அமாவாசை, பிப்ரவரி 10ம் தேதி பசந்த் பஞ்சமி, பிப்ரவரி 19 மகி பூர்ணிமா ஆகிய விஷேச தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இதுவரை 22 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில தலைவர்கள் இதில் நீராடினர். இந்நிலையில், இந்த கும்பமேளா விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. மேலும், மகா சிவராத்திரியான…

Read More

பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையொட்டியோ கொண்டாடப்படுகின்றது. இந்தநாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறும். அறுபடைவீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு வருவார்கள். இந்நிலையில், பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று தொடங்கியது. இன்று தொடங்கிய தைப்பூசத் திருவிழா, ஜனவரி 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 6-ம் நாளான ஜனவரி 20-ம் தேதியும், தைப்பூசத் தேரோட்டம் 7-ம் நாளான ஜனவரி 21-ம் தேதியும்…

Read More

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் ஜரூர்!

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 7ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 18ஆம் தேதியன்று சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்படுகிறது. ஏகாதசி என்றால் பதினொன்று என்று பொருள். ஞானேந்திரியம் ஐந்து; கர்மேந்திரியம் ஐந்து; மனம் ஒன்று என்னும் பதினொன்றும் பகவானிடம் ஈடுபடுவதே ஏகாதசி விரதம். மாதங்களில் நான் மார்கழி என்கிறார் மகாவிஷ்ணு. அத்தகைய சிறப்பு வாய்ந்த மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும். அதுவே மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. அந்நாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி விரதமிருந்தால், மனக் கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் எல்லாம் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி திருவிழாவாகும். பகல் பத்து,…

Read More

சபரிமலை கோயில் திறப்பு : போட்டாச்சு 144 தடையுத்தரவு!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மீண்டும் திறக்க உள்ள நிலையில் இங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவை பெண்கள் அமைப்புகள் சில வரவேற்றாலும், அய்யப்ப பக்தர்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க முடிவு செய்திருப்பதாக கேரள அரசு அறிவித்தது. இதற்கிடையில், நவ.17 அன்று சபரிமலை செல்ல உள்ளதாக அறிவித்திருந்த திருப்தி தேசாயும் இன்று கொச்சி வந்துள்ளார். இதனால் கேரளாவில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஏற்கனவே போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில்,…

Read More

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல்!

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28-ந் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனுதாக்கல் செய்யப்போவதில்லை என்று முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்த நிலையில், இந்து அமைப்புகள் சார்பில் கேரளாவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போது தேசிய ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரள அரசுக்கு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில்…

Read More