பைக்கில் வந்து விழிப்புணர்வை ஏற்படுத்திய அமைச்சர் ஜெயக்குமார்

எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி சென்னை அண்ணாசாலை. இரவும் பகலும் ஓயாமல் வாகனங்கள் செல்லும் சாலை தான் இது.காலை 11 மணி இருக்கும் வெள்ளை வேட்டி, சட்டை அதுவும் அதிமுக கரை வேட்டியுடன் பைக்கில் ஒருவர் ஹெல்மெட் அணிந்துகொண்டு வேகமாய் வந்து ஸ்பென்சர் சிக்னலில் நிற்கிறார். அக்கம் பக்கத்தில் இருந்த வாகன ஓட்டிகள் இவர் யார் என்று சிறிய சந்தேகத்துடன் உற்று நோக்குகின்றனர்.அவர்களைப் பார்த்து கையசைத்து சிரிக்கிறார் அவர். அப்போது தான் அவர்களுக்கு தெரிகிறது அவர் அமைச்சர் ஜெயக்குமார் என்பது. காரில் இருந்த சிலர் பைக்கில் இருந்த சிலர் இறங்கி அவரை சூழ்ந்துகொண்டு செல்பி எடுத்துக் கொள்கின்றனர். “என்ன சார் எங்கே போறீங்க?கார்ல ஏன் வரல? பைக்கில் வந்து இருக்கீங்களே” என்று கேட்கிறார்கள். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் சிரித்துக்கொண்டே, ஹெல்மெட் என்பது மிக மிக அவசியம் இன்றைக்கு…

Read More

மீனவர்களுக்காக கண்ணீர் வடித்த அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை ராயபுரத்தை சேர்ந்த ஐந்து பேர் காசிமேடு பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடல் அலையின் சீற்றத்தில் சிக்கி உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாயமான 5 பேரையும் உயிருடன் மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார். ஆனால், எவ்வளவோ போராடியும் துரதிர்ஷ்டவசமாக அவர்களை சடலமாகவே மீட்க முடிந்தது. இதையடுத்து இறந்தவர்களின் வீடுகளுக்கு அமைச்சர் நேரில் சென்று இறுதிச் சடங்கு செய்ய தனது சொந்த பணத்தில் இருந்து தலா 10 ஆயிரம் வீதம் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அதுமட்டுமல்லாது அவர்களின் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார் அவர். உயிரோடு மீட்டு விடலாம் என்று நினைத்தால் இப்படி பார்க்க வேண்டிய சூழல் வந்து விட்டதை எண்ணி கண்கலங்கி அவர் இறந்தவர்களின்…

Read More

135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..!

கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் கரோனா பெருந்தொற்று பரவியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அதனைக் கட்டுப்படுத்தும்விதமாக அங்கு இயங்கிவந்த கனிகள் மற்றும் மலர் அங்காடிகள் கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும், காய்கறிகள் மற்றும் மொத்த தானிய விற்பனை அங்காடிகள் மே மாதம் முதல் வாரத்திலும் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள் மற்றும் கனிகள் பொதுமக்களுக்குத் தொடர்ந்து தங்கு தடையின்றி கிடைக்க தற்காலிகமாக மொத்த காய்கறி அங்காடி திருமழிசையிலும், கனி அங்காடி மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலும் செயல்படத் தொடங்கின. சில்லறை காய்கறி விற்பனையானது ஆங்காங்கே உள்ள மாநகராட்சி மைதானங்களிலும், பேருந்து நிலைங்களிலும், சில சாலையோரப் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. மலர் அங்காடி வானகரம் பகுதியில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் மற்றும் வைகுந்த பெருமாள் திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தில் தற்காலிகமாக நடைபெற்று வருகிறது. தற்போது அனைத்துவித…

Read More

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அமமுக தயார் – டி டி வி தினகரன்

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான கட்டிடத்தில் அமமுக தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், இசக்கி சுப்பையா, அதிமுகவுடன் இணைந்தார். இதனால், கட்சிக்கு புதிய அலுவலகம் அமைக்கும் பணியில் தினகரன் தீவிரமாக ஈடுபட்டார். இந்நிலையில், சென்னை, ராயப்பேட்டை வெஸ்ட்காட் சாலையில் அமமுகவின் புதிய தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து கட்சி அலுவலகம் முன்பு 50 அடி கொடி கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அமமுக தயாராகி வருகிறது. சிறந்த கூட்டணி அமைத்து போட்டியிட்டு சிறப்பான வெற்றியை ஈட்டுவோம். அமமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் போன்றோர் தேவையில்லை. நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவு என்பது எங்களுக்கு ஓர் அனுபவம். ஒரு சிலர்…

Read More

நான் அப்செட் ; மா. செ. கூட்டத்திற்கு பின் ரஜினி பேட்டி – முழு விபரம்!

தமிழகத்தில், 2021ல், நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்துள்ள நடிகர் ரஜினி, அதற்கான முன்னேற்பாடாக ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். திரைமறைவில், கூட்டணி குறித்தும், துாதர்கள் வாயிலாக, பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு ஆதரவாக பேசி வந்த ரஜினி, டில்லியில் நடந்த வன்முறைக்கு, மத்திய உள்துறை அமைச்சகமும், உளவுத்துறை தோல்வியும் தான் காரணம் என, காட்டமாக பேட்டி அளித்தார். மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக, மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கத் தயார் என்றும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, முஸ்லிம் அமைப்புகள், மத குருமார்களையும் அழைத்து பேசி வருகிறார். சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் தேர்தல் குறித்தும், கட்சி அறிவிப்பது பற்றி விவாதித்து உள்ளனர். மன்ற…

Read More

நம்மவர் மோடி பைக் ரேலி முன்னோட்டத்தால் ஸ்தம்பித்த கேளம்பாக்கம்!

பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசர் அபியான் அமைப்பின் சென்னை & காஞ்சிபுரம் நிர்வாகிகளை அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெய் கணேஷ் நியமனம் செய்து இந்த ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வல முன்னோட்டத்தையும் அறிமுகப்படு வைத்தார். இந்த நிகழ்வில் கண்ணன் கேசவன் காஞ்சிபுர மாவட்ட நிர்வாகி. செந்தில், பால்ராஜ், ஜீவரத்தினம் ஆகியோர் மத்திய சென்னை நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். நம்மவர் மோடி எனும் இருசக்கர ஊர்வலத்தை அதன் தேசிய தலைவர் திரு.ஜெய் கோஷ் திவேதி கொடி அசைத்து துவங்கி வைத்தார். இந்த ஊர்வலம் முன்னோட்டம் சென்ற கேளம்பாக்கம் மற்றும் படூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. நம்மவர் மோடி இரு சக்கர வாகன ஊர்வலம் முன்னோட்டத்தின் நோக்கம்… மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை பற்றிய விழப்புணர்வை…

Read More

விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்!

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும் தேமுதிக கட்சியின் வளர்ச்சி பணிகள் தொடர்பாகவும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர்கள் சதீஸ் மற்றும் பார்த்தசாரதி ஆகிய முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேமுதிக-வின் கட்சி அலுவலகம் கோயம்பேட்டில் உள்ளது. அந்த தலைமை அலுவலகத்தில் தான் கூட்டமானது நடைபெற்றது. இதில் தேமுதிக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் 67 பேரும் பங்கேற்றனர். தொடர்ந்து தேமுதிக- வின் கட்சி வளர்ச்சி பணிகளை அனைத்து மாவட்டங்களிலும் விரிவாக முன்னெடுப்பது தொடர்பாகவும், அடுத்து வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கருத்துக்களை கேட்க இந்த கூட்டமானது நடைபெற்றது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் என்பது…

Read More

இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி : ஆனா இது பொது தேர்தலுக்கான முன்னோட்டமா?..?

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளை அதிமுக கைப்பற்றியதால் அக்கட்சியின் பலம் சட்டப்பேரவையில் 125 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்குத்தான் என்ற பொதுவான கருத்து இருந்தாலும்கூட 5 மாதங்களுக்கு முன் மக்களவைத் தேர்தலில் அதிமுகவை படுதோல்விக்குத் தள்ளிய மக்கள் இப்போது திமுக, காங்கிரஸைப் புறக்கணித்திருப்பது பல்வேறு வாதங்களை எழுப்பியுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் ஒரு நியமன உறுப்பினரைச் சேர்த்து மொத்தம் 235 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், தற்போதைய நிலவரப்படி, தமிழக சட்டமன்றத்தில், அதிமுகவின் பலம், 123 ஆக இருந்தது. விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ-வான தி.மு.க-வைச் சேர்ந்த ராதாமணி உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் மாதம் உயிரிழந்ததால், பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் பலம், 101 லிருந்து 100 ஆக குறைந்தது. இதே போல், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஹெச். வசந்தகுமார், மக்களவைக்கு தேர்வானதால், 8 உறுப்பினர்களை தன்வசம்…

Read More

ராதாபுரம் மறுவாக்கு ரிசல்டை ரிலீஸ் செய்ய சுப்ரீம் கோர்ட் தடை!

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரை, திமுக சார்பில் அப்பாவு ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இந்த முடிவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு தாக்கல் செய்த மனுவில், தபால் மூலம் பதிவான 203 வாக்குகளை அதிகாரிகள் எண்ணவில்லை என குறிப்பிட்டிருந்தார். 19, 20 மற்றும் 21 ஆவது சுற்றுகளை எண்ணும்போது காவல்துறையினர் தங்களை வெளியேற்றி விட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தபால் வாக்குகள் மற்றும் 3 சுற்று வாக்குகளின் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்கு…

Read More

ராமதாஸ் முத்துவிழாவில் காடுவெட்டி குரு மகன்!

பாமக நிறுவனர் ராமதாஸின் முத்துவிழாவில் காடுவெட்டி குரு மகன் கனலரசன் தனது தாயாருடன் கலந்துகொண்டார். வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மறைவுக்குப் பிறகு தைலாபுரம் தோட்டத்திற்கும் குருவின் உறவினர்களுக்கும் இடையே வெளிப்படையாக மோதல் வெடித்தது. பாமக தலைமையின் எதிர்ப்பையும் மீறி குருவின் மகள் விருதாம்பிகை, தனது அத்தை மகன் மனோஜை கடந்த நவம்பர் 28ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு குருவின் மகன் கனலரசன் மற்றும் குருவின் சகோதரிகள், பாமக தலைமை மீது கடும் குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். கடந்த டிசம்பர் மாதம் காடுவெட்டியில் நடைபெற்ற குரு மணிமண்டப அடிக்கல் நாட்டு விழாவில் குருவின் குடும்பத்திலிருந்து அவரது மனைவி சொர்ணலதா தவிர யாரும் கலந்து கொள்ள வில்லை. மக்களவைத் தேர்தல் சமயத்திலும் கூட பாமகவுக்கு எதிரான நிலைப்பாட்டையே குரு குடும்பத்தினர் எடுத்திருந்தனர். இந்த நிலையில் பாமக நிறுவனர்…

Read More