கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம்! மத்திய வெளியுறவுத்துறை அரிவுறுத்தல்!

கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம் என அறிவுறுத்துகிறோம் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது!! நாட்டில் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2020-யை நடத்துவதற்கு எதிராக ஆலோசனை வழங்குவதாக வெளிவிவகார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. MEA செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வியாழக்கிழமை ஊடகங்களில் உரையாற்றினார், 2020 ஆம் ஆண்டில் IPL நடத்த விரும்புகிறீர்களா என்பதை IPL அமைப்பாளர்கள் தீர்மானிக்க வேண்டும். ஆனால், பணக்கார T-20 போட்டியுடன் முன்னேற வேண்டாம் என்பது அமைச்சின் ஆலோசனையாகும் என்றார். இருப்பினும், இறுதி முடிவை IPL அமைப்பாளர்களிடம் விட்டுவிடுவதாகவும் MEA கூறியது. “இதை முன்னெடுத்துச் செல்லலாமா வேண்டாமா என்பதை அமைப்பாளர்கள் தீர்மானிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த நேரத்தில் அதைச் செய்யக்கூடாது என்பதே எங்கள் ஆலோசனை, ஆனால் அவர்கள் முன்னேற விரும்பினால்…

Read More

Karate Twins Srivishakan Sriharini

*Mr.Muruganandham belongs to Karaikal of Pudhuchery District and his wife is Priya. These couples were blessed with twins around 9 (2010) years ago. In that twins one is a baby boy and a baby girl. The boy was christened as SriVishakan and the girl as Sriharini. During the childhood Muruganandham was very much interested in sports. But he thought that his siblings should make great achievements which he was unable to do in his yesteryears. Then, he admitted both the kids to make exercise. When both were very cute and…

Read More

VELAMMAL’S SWIMMING CHAMPION!

Miss. Praseedha V, Class 8 of Velamal Main School, Mogappair Campus bagged the Silver Medal in U-14 category 50 mts freestyle swimming in a span of 32 seconds at the Republic Day Sports organized by the Government of School Education, Tamil Nadu held at SDAT, Tiruvannamalai on 09.01.2020. The Management congratulates her exemplary achievement.

Read More

உலகக் கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் மீது எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியை பாகிஸ்தான் இதுவரை வென்றதே இல்லை என்பதால் இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. லீக் சுற்றின் 22ஆவது ஆட்டத்தில் நேற்று (ஜூன் 16) பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாடியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. ஷிகர் தவனுக்குப் பதிலாகத் தொடக்க வீரராகக் களமிறக்கப்பட்ட லோகேஷ் ராகுல், ரோஹித் ஷர்மாவுக்கு பக்கபலமாக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார். 34 பந்துகளில் அரைசதம் கடந்த ரோஹித் ஷர்மா ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில்…

Read More

தங்க மகளை தங்கம் வழங்கி பாராட்டிய விஜய் சேதுபதி!

தங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கியது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்றம்.  சென்னை கோயம்பேடு சந்தையில் கூலி தொழிலாளியின் மகள், மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த தங்கமங்கையை மேலும் உற்சாக படுத்தும் விதமாக அகில இந்திய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் குமரன் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் தேவா ஆகியோர் இலக்கியாவுக்கு நேரில் சென்று தங்கத்தை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துள்ளனர் .

Read More

ஆசிய தடகளம்: ததமிழக வீராங்கனை ங்கம் வென்றார் !

ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 23ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான நேற்று (ஏப்ரல் 22) நடைபெற்ற பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 30 வயதான இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 2 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். நடப்பு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின் தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும். திருச்சி மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த கோமதி, தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார். ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் தேஜிந்தர் பால்சிங் 20.22 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். ஈட்டி எறிதலில்…

Read More

உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தின் இறுதி போட்டி:பிரான்ஸ் கோப்பைய வென்றது!

கடந்த சிலவாரங்களாக ஸ்போர்ட்ஸ் செய்திகளில் டாப்பாக இடம் பிடித்திருந்த உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தின் இறுதி போட்டியில், 2 கோல் வித்தியாசத்தில் குரோஷியாவை வென்றிருக்கிறது பிரான்ஸ். வழக்கத்துக்கு மாறாக, நட்சத்திர வீரர்கள் இருக்கும் பிரான்ஸ் அணியைவிட, சிறிய அணியாக இருந்தாலும் திறமைகளைப் பயன்படுத்தி இறுதி ஆட்டம் வரை வந்திருக்கும் குரோஷியா உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என்ற எண்ணம் தான் ரசிகர்களிடையே அதிகம் காணப்பட்டது. இரண்டு அணிகளுமே தங்களது முழு பலத்துடன் களமிறங்கின. துருப்புச் சீட்டாக எந்த பலமான வீரரையும் பிறகு பயன்படுத்த எத்தனிக்காமல், தொடக்கத்திலிருந்தே அட்டாக்கிங் முறையை பின்பற்றின. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பிரான்ஸைவிட குரோஷியாவே ஏறுமுகமாக இருந்தது. பந்தினை உதைத்துக்கொண்டு துள்ளிவரும் குரோஷியா வீரர்களை தேக்கப்படுத்துவதே பிரான்ஸ் வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால்… சிறந்த டிஃபன்ஸ் என்பதே மிகச்சிறந்த அஃபன்ஸ் என்பார்களே அதுபோல, குரோஷியா வீரர்களின்…

Read More

இந்தியா 2- வது வெற்றி

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். ரகானே (55), விராட் கோலி (92) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 50 ஓவரில் 252 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி சார்பில் கவுல்டர்-நைல், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். அரைசதம் அடித்த ஸ்மித் பின்னர் 253 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. ஆடுகளம் பந்து வீச்சுக்கு அதிக அளவு ஒத்துழைத்ததை பயன்படுத்தி புவனேஸ்வர் குமார் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். யார்க்கர் மன்னன் பும்ரா சரியாக பந்து வீசவில்லை. இதை புவனேஸ்வர் குமார் சமாளித்துக் கொண்டார். ஸ்மித் அடித்த பந்தை…

Read More

முதல் ஒருநாள் கிரிக்கெட்: 26 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி

இந்திய அணி சமீபத்தில் இலங்கை மண்ணில் அனைத்து ஆட்டத்திலும் வென்று முழுமையாக தொடரை கைப்பற்றி இருந்தது. டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கிலும், ஒரே ஒரு 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கிலும் வென்றது. இதைதொடர்ந்து, ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா 83 ரன்களும், முன்னாள் கேப்டன் டோனி 79…

Read More