நிர்பயா – குற்றவாளிகளுக்கு தூக்கு ; 4வது முறையாக புதிய தேதி அறிவிப்பு!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம், கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 20ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மூன்று முறை தேதி குறிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில்,  குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை பிறப்பிக்கக் கோரி திகார் சிறை நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீது பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ராண இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில்,  முகேஷ் சிங், வினய், பவன் குமார், அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. *எனினும் தூக்கு தண்டனையை தாமதப்படுத்தும் நோக்கத்தில், குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி வந்தனர். இதனால்,…

Read More

வாஜ்பாயின் 95-வது பிறந்த நாள்: லக்னோவில் 25 அடி உயர சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 95வது பிறந்தநாளையொட்டி, லக்னோவில் 25 அடி உயர வாஜ்பாய் சிலையை பிரதமர் மோடி திறந்து  வைத்தார். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த  ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி காலமானார். இவரின் நினைவைப் போற்றும் வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய ராய்ப்பூரின் பெயரை அடல் நகர்’  எனப் பெயர் மாற்றம் செய்து அம்மாநில அரசு அறிவித்தது. மத்தியப் பிரதேச அரசு, வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்றைப் பள்ளிப் பாடத்திட்டத்தில்  சேர்க்கப்போவதாகவும் தங்கள் மாநிலத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்போவதாகவும் அறிவித்திருந்தது. இதனை யடுத்து, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஆண்டு வாஜ்பாய்க்கு தன்னுடைய மாநிலத்திலும் சிலை நிறுவப்படும் என   அறிவித்திருந்தார். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம்…

Read More

மகாராஷ்டிராவில் பாஜக-வின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்!

மகாராஷ்ட்ராவில் அதிரடி திருப்பமாக, பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்  சராக மீண்டும் பதவியேற்றார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியமைப்பது குறித்து கடந்த ஒரு மாதமாக நிலவிய இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கூட்டணி ஆட்சியமைப்பது குறித்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இடையே பல்வேறு கட்டங்களாக பேச்சுக்கள் நடந்த நிலையில், மும்பையில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 3 கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்ற இக்கூட்டத்திற்கு பின் நேற்று பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உத்தவ் தாக்கரேவை முதலமைச்சராக ஏற்பதில் 3 கட்சிகள் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். 3 கட்சிகளின் சார்பில் மும்பையில் செய்தியாளர் சந்திப்பு நடக்க உள்ளதாகவும் இதில் ஆட்சியமைப்பது தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் சரத் பவார் கூறியிருந்தார். இச்சந்திப்புக்கு பின் பேசிய சிவசேனா…

Read More

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி: முஸ்லிம்களுக்கு மாற்று இடம்: சுப்ரீம்கோர்ட் அதிரடி தீர்ப்பு!

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம்  இந்துக்களுக்கு சொந்தமானது. அங்கு ராமர் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை மாற்று இடமாக வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இன்று காலை அதிரடியாக தீர்ப்பளித்து உத்தரவிட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமஜென்ம பூமி பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய 2. 77 ஏக்கர் நிலத்திற்கு சன்னி வஃக்பு போர்டு, நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதுதொடர்பாக முதலில் பல ஆண்டுகளாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. கடந்த 2010ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2. 77 ஏக்கர் நிலத்தை மேற்கண்ட மூன்று அமைப்புகளும் சமமாகப் பிரித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது. ஆனால், அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை மூன்று அமைப்புகளும் ஏற்கவில்லை. டெல்லி…

Read More

இந்தியாவின் பார்வையற்ற முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பிரஞ்சால் பட்டீல்!

பார்வை குறைபாடு உள்ள முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரியாக பிராஞ்சால் பட்டீல் பதவியேற்றுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் உல்ஹாஸ் நகரை சேர்ந்தவர் பிராஞ்சால் பட்டீல்(31). இவர் தனது ஆறாவது வயதில் பார்வை குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டார். சிறு வயது முதலே கல்வியின் மீது தீரா தாகம் கொண்ட பிராஞ்ஜல் பாட்டில் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சர்வதேச உறவுகள் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் யுபிஎஸ்சி தேர்வுகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். விடா முயற்சியால் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் தனது முதல் முயற்சிலேயே 773 வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் அவருக்கு இந்திய ரயில்வே துறையில் பணி கிடைத்தது. எனினும் இவருக்கு பார்வை குறைபாடு இருந்ததால் அந்தப் பணி ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மனம் தளராத பிராஞ்ஜல்…

Read More

மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ-வுக்காக மரங்களை வெட்டக் கூடாது – சுப்ரீம் கோர்ட்

மும்பையின் மையத்தில் அமைந்துள்ள ஆரே பகுதியில் இனி மரங்களை ஏதும் வெட்டக் கூடாது என்று உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு  தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை ஆரே காலனி மரங்கள் நிறைந்த வனம் போன்ற ஒரு பகுதியாகும். இங்கு மூன்றாவது மெட்ரோ பணிமனையை அமைக்க ரயில்வே திட்டமிட்டிருந்தது. இதற்காக அப்பகுதியில் இருக்கும் மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி மெட்ரோ நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் மரங்களை வெட்ட அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த வெள்ளியன்று மகாராஷ்டிரா அரசு மரங்களை வெட்டத் தொடங்கியது. இதை எதிர்த்து மாணவர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் என பலத் தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தது. இதில் 29…

Read More

நம்ம நாட்டு எம்.ஐ 17 ரக சிறிய ஹெலிகாப்டரை, ஜம்முவில் சுட்டு வீழ்த்தியது நம்ம ஆளுங்கதான்!

கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ 17 ரக சிறிய ஹெலி காப்டரை, ஜம்முவில் சுட்டு வீழ்த்தியது யார் என்ற அதிர்ச்சித் தகவல் ஏழு மாதங்களுக்கு பின் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்காம் பகுதியில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதியன்று இந்திய விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ 17 ரக சிறிய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தபட்டது. அதே மாதம் 14-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட புலவாமா  தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்திய மற்றும் பாகிஸ்தான் படைகளிடையே தீவிரமான வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து வந்த சூழ்நிலையில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்போது  அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணையும் நடை பெற்று வந்தது. இந்நிலையில் எம்.ஐ 17 ரக சிறிய ஹெலிகாப்டரை, ஜம்முவில் சுட்டு வீழ்த்தியது யார் என்ற அதிர்ச்சித் தகவல் ஏழு மாதங்களுக்கு பின் வெளியாகியுள்ளது.…

Read More

பாஜக எம்.பி.க்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ்!- மோடி & அமித் ஷா டீச்சராகிரார்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகச் சிறப்பு வகுப்புகளுக்கு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வார இறுதியில் பாஜக எம்.பி.க்களுக்குப் பயிற்சி வகுப்புகளுக்காக ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்புகளில் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க வேண்டுமென்று கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜகவின் நாடாளுமன்றக் குழு அலுவலகத்திலிருந்து அனைத்து எம்.பி.க்களுக்கும் செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது. அச்செய்தியில், ‘அப்யாஸ் வர்கா’ என தலைப்பிடப்பட்டுள்ள பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளில் எம்.பி.க்கள் மட்டுமல்லாமல் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான அமித் ஷா, பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு விவகாரங்கள், தலைப்புகள் குறித்து எம்.பி.க்களுக்கு நரேந்திர மோடியும், அமித் ஷாவும் விரிவுரையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

ஷீலா தீட்சித் காலமானார்: பிரதமர் மோடி, சோனியா நேரில் அஞ்சலி

முன்னாள் முதல்வரும், முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி தலைமையிலான அமைச்சரவையில் இணை அமைச்சருமான ஷீலா தீட்சித் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் மூத்த தலைவரும், தில்லி முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித்(81) மாரடைப்பு ஏற்பட்டு இன்று சனிக்கிழமை காலமானார். அவரின் மறைவுக்கு தலைவா்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனா். தில்லியில் உள்ள போர்டிஸ் எஸ்காட்ஸ் மருத்துவமனையில் ஷீலா தீட்சித் இன்று சனிக்கிழமை காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி, மருத்துவமனையில் மதியம் 3.55 மணியளவில் ஷீலா தீட்சித்தின் உடலில் இருந்து உயிர் பிரிந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மிகவும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் ஷீலா தீட்சித் சனிக்கிழமை…

Read More

‘ஓடும் ரயில்கள் & ரயில்வே ஸ்டேஷன்களில் ‘செல்பி’ எடுத்தால் 2,000 ரூபாய்அபராதம்

‘ஓடும் ரயில்கள் மற்றும் ரயில்வே ஸ்டேஷன்களில், ‘செல்பி’ எடுத்தால், 2,000 ரூபாய்அபராதம் விதிக்கப்படும்’ என, ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர். செல்பி மோகத்தால், ஓடும் ரயில்களில்தொங்கியும், பயணம் செய்யும் போதும், தண்டவாளத்தின் அருகேநின்று, ரயில்கள் செல்லும் போதும், இளைஞர்கள் செல்பி எடுத்துக் கொள்கின்றனர்; இதனால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதைதடுக்க, ‘செல்பி எடுத்தால், 2,000 ரூபாய்அபராதம் விதிக்கப்படும்’ என, ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். ரூ 2000 அபராதம் இது குறித்து ரயில்வே போலீசார் மேலும் கூறியதாவது: ரயில்களில்ஆபத்தான முறையில், செல்பி எடுப்பதால், வாரத்துக்கு, 10 பேராவது, ரயிலில்சிக்கி பலியாகின்றனர். இதனால், ரயில்வே ஸ்டேஷன்கள், ஓடும் ரயில்களில்செல்பி எடுத்தால், 2,000 ரூபாய்அபராதம் விதிக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, ரயில்வே ஸ்டேஷன்களில், ஒலிபெருக்கியில் பயணியருக்கு தகவல் தெரிவித்து, எச்சரிக்கை செய்யப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Read More