இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளம்

ராம் கோபால் வர்மாவின் நேக்கட் திரைப்படம், ஒரு தம்பதியின் உருக்குலைந்த தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய கதையை அலசுகிறது. ராம் கோபால் வர்மாவின் ஈர்க்கக்கூடிய கேமரா கோணங்களும் காட்சியமைப்பும் படம் முழுக்க பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது. https://rgvworld.the-ally.com என்ற தளத்தில் நேக்கட் படத்தை காணலாம். 30,000க்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ள இப்படம் தொடர்ந்து பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இது படைப்பாளிகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தடையற்ற ஸ்ட்ரீமிங்கை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க உதவுகிறது. வாங்குபவர்களுக்கு, உரிமையாளர்களுக்கு பயன் தரும் வகையில் இந்த நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தின் காப்புரிமையை கொண்டுள்ளது. படைப்பாளிகளை பொறுத்தவரை, மேம்பட்ட பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட டிஆர்எம், நெறிப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட உள்ளடக்க விநியோகம் மற்றும் நிகழ்நேர பரிவர்த்தனைகளில்…

Read More

நகைச்சுவை நடிகர் சூரி :வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்!

“வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்” மற்றும் “மாற்றம் பவுண்டேஷன்” மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும், நடிகர் சூரி அவர்கள் முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்.அப்போது வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் மனிதாபிமான செயலை அவர் பாராட்டினார். நடிகர் சூரி பேசுகையில், “எனது அக்கா, தங்கைகளான திருநங்கையர்களுக்கும், எனது அண்ணன் தம்பிகளான மாற்றுதிறனாளிகளுக்கும் எனது வணக்கங்கள். எல்லோரும் நல்லா இருக்கீங்கன்னு நம்புறேன். இந்த நேரத்தில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் எனக்கு சந்தோஷம், அதே நேரத்தில் எனக்கு கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது. நாமெல்லாம் சந்திப்பதற்கு இப்படி ஒரு காலகட்டம் உருவாகியிருக்கக்கூடாது. கடந்த 3 மாதத்தில் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சேர்ந்து படித்த ஒரே பாடம் இந்த கொரோனாதான். ‘தேவையின்றி வெளியே வராதீர்கள், உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்’ என நமக்கு அடிக்கடி…

Read More

சூப்பர்ஸ்டார் ரஜினி பங்கு பெறும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ; டிஸ்கவரி தொலைகாட்சி தயாரிப்பு!l

அகில உலக அளவில் புகழ் பெற்ற டிஸ்கவரி தொலைகாட்சி குழுமம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்துள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சியில் Man Vs Wild என்கிற நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று. இதில் Bear Grylls என்னும் சாகச வீரர், மயிர் கூச்செறியும் அற்புத சாகசங்களை அடர்ந்த காடுகளிலும், விலங்குகளுக்கு மத்தியிலும் செய்து, உலக முக்கிய பிரமுகர்களிடம் பேட்டி கண்டு நிகழ்ச்சியை நடுத்துவார். இதுவரை இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஹாலிவுட் நடிகைகள் ஜூலியா ராபர்ட்ஸ், கேட் வின்ஸ்லெட் ,டென்னிஸ் வீரர் ராஜர் பெடரர் , மற்றும் சென்ற வருடம் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்றுள்ளனர் . பிரதமர் மோடியுடன் நடந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்றது. உத்தர காண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய சரணாலயத்தில் இந்நிகழ்ச்சி…

Read More

சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020

2013ல் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சித் ஸ்ரீராம், தனது தனித்துவமான குரல்வளம் மற்றும் நேர்த்தியான பாடல் பங்களிப்பின் மூலம் வெகுவான ரசிகர்களை வென்றிருக்கிறார். அவர் முதன்முறையாக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். மண்ணின் மைந்தரான அவர், பிரம்மாண்டமான இந்த இசை நிகழ்ச்சியை வருகின்ற பிப்ரவரி மாதம் 08ம் தேதி சென்னையில் இருந்துத் துவங்குகிறார். ‘Noise and Grains’, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நேரடி நிகழ்ச்சிகள், உண்மை நிகழ்ச்சிகள், மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளுக்கு உருவாக்கம், தயாரித்து வழங்குவதில் ஈடுபட்டுவரும் ஒரு தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ஏ ஆர் ரஹ்மானின் ‘நெஞ்சே எழு’, இளையராஜாவின் ‘இளையராஜா 75’, அனிருத்தின் ‘சிங்கப்பூர் லைவ்’, நடிகர் விஜய் சேதுபதியுடன்…

Read More

விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சாலிகிராமத்தில் சென்னை விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், குழந்தையின்மை, அக்குபஞ்சர் ஆகியவற்றுக்கான பரிசோதனைகளும் மற்றும் ரத்ததான முகாமும் நடைபெற்றது. மேலும் இவ்விழாவின் சிறப்பம்சமாக அகர்வால் மருத்துவமனையுடன் இணைந்து இன்று கண் பரிசோதனை செய்ததில் 7 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை செய்யப்படவிருக்கிறது. அதன் முதல் கட்டமாக ஒருவருக்கு நாளைய தினமே கண் சிகிச்சை இலவசமாக அளிக்க இருக்கிறது விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி மன்றம். தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் விஜய்சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு நற்பணிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

Read More

விஜய் சேதுபதி பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் மாபெரும் உடல் உறுப்பு தானம்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி திருச்சியில்  நடைபெற்றது.202 ரசிகர் நற்பணி இயக்க உறுப்பினர்கள் குடும்பத்தில் அனுமதி பெற்று திருச்சி ரசிகர் நற்பணி இயக்க அலுவலகத்தில் அரசு மருத்துவமனை உடல் உறுப்பு தானம் பிரிவு அதிகாரியிடம் உடல் உறுப்பு தான செய்த சான்றிதழ்களை சமர்பித்தனர். இது இந்திய வரலாற்றில் முதல் முறையாக திருச்சி மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் நற்பணி இயக்க நிர்வாகிகள் வழங்கினர்கள். வருடாந்திர உடல் உறுப்பு தானம் செய்பவர் தமிழ்நாட்டு கணக்கெடுப்பில் 2016இல் 185 பெயரே அதிகமானது.மேலும் இதுநாள் வரையில் தமிழ்நாட்டில் உடலுறுப்பு செய்தவர்கள் எண்ணிக்கை 1338. இந்நிலையில் ஒரே நாளில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி நிர்வாகிகள் 202 நபர்கள் உடல் உறுப்பு தானம் செய்து அசத்தினர்

Read More

மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி கின்னஸ் உலக சாதனை முயற்சி !

சாதனைப் புத்தகங்களின் பக்கங்களில் சரித்திரம் படைக்கும் செயலாக அதில் மாணவர்களின் பெயர்களைப் பதிவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுவரும் மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி, தனது பள்ளியின் மழலை மனம் மாறா முதல் வகுப்பு மாணவி சி. சாராவின் ரூபிக்ஸ் கியூப் சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தகம் இந்திய சாதனை புத்தகம் மற்றும் தமிழ்நாடு சாதனை புத்தகங்களின் பக்கங்களின் பொன் எழுத்துக்களால் பொறிக்கும் முயற்சியினை திறம்பட நிறைவேற்றியது. இதனை யொட்டி பள்ளி தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன் தலைமையில் மாணவி சி.சாரா கண்களை கட்டியபடி ஐந்து ரூபிக்ஸ் கியூப் புதிர்களை கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை ஒப்புவித்த படியே 3 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் விடுவித்து உலகின் இளம் சாதனையாளர் விருதினை வென்று சாதனை படைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வருகைதந்த திரைப்பட நடிகையும் முன்னாள் செய்தி வாசிப்பாளருமான…

Read More

100 ஜோடி இரட்டையர்கள் உடன் இணைந்து கைபேசி இல்லாத ஒரு நாள்!

தகவல் தொடர்பு சாதனங்கள் நம்முடைய வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்துள்ள நிலையில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி அபூர்வமாக கொண்டாட உள்ள 100 ஜோடி இரட்டையர்கள் உடன் இணைந்து கைபேசி இல்லாத ஒரு நாளை 16 11 19 அன்று வெற்றிகரமாக கொண்டாடினர் இதனை முன்னிட்டு சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் தேர்வு குழு இயக்குனர் அருள் மற்றும் அரவிந்த் ஆகியோர் வருகை தந்து நிகழ்வினை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்வில் ஒவேஷன் கொண்டாட உள்ள 100 ஜோடி இரட்டையர்கள் உடன் இணைந்து கை பேசி இல்லாத ஒரு நாளை 16 11 19 அன்று வெற்றிகரமாக கொண்டாடினர் . இந்த நிகழ்வில் ஒவேஷன் ஹிட்ஸ் மேளாவில் பரிசு பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு மனதை மயக்கும் வகையில் 100 இரட்டையர்களின் நடன நிகழ்ச்சி வியப்பையும் ஆச்சரியத்தையும் உள்ளத்தைக்…

Read More

நடனமாடுவதால் குழந்தைகளின் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாகும் – நடன இயக்குநர் ஸ்ரீதர்

சினிமா நடன இயக்குநர் ஸ்ரீதர் நடன பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார். இவரது நடன பள்ளியில் பல சினிமா பிரபலங்களின் குழந்தைகளும் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த பள்ளியின் மூலம் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். அதற்காக சினிமா பிரபலங்களை அழைத்து சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில் அவர் பேசியதாவது:- ஸ்மார்ட் ஃபோன் வந்த பிறகு பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் அதிகமாக உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் குழந்தைகளின் படிப்பு, விளையாட்டு, செயல்திறன் போன்றவற்றில் கவனம் குறைந்து அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆகையால், குழந்தைகளின் கவனத்தை கைபேசியிலிருந்து திசை திருப்பும் நோக்கத்தோடு நடனத்தைப் பயிற்றுவிக்கிறோம். அதுமட்டுமில்லாமல், நடனம் உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும். உடலின் சக்தி அதிகரிக்கும். மன அழுத்தமும் குறையும். இதை குழந்தைகளோடு சேர்ந்து பெற்றோர்களும் ஆடலாம், அப்படி ஆடும்…

Read More

SRUTI சீசன் 2 ஆன்லைன் பாட்டுப் போட்டி நிகழ்ச்சி துவக்கம்!

SRUTI சீசன் 1 என்பது உலகளவில் நடத்தப்பட்ட ஒரு வித்தியாசமான பாட்டு போட்டியாகும். அதுவும் குறிப்பாக தமிழ் சினிமா பாடல்களுக்காகவே இந்நிகழ்ச்சியை உருவாக்கி அதனை வெற்றிகரமாக நடத்துபவர்கள் வினோத் வேணுகோபால் மற்றும் ரேஷ்மி. இவர்கள் இருவரும் பிரபல பாடகர்கள் மட்டுமின்றி Zee TVயில் நடத்தப்பட்ட சரிகமபா நிகழ்ச்சியின் போட்டிக்கு ஜூரியாக இருந்து திறம்பட செயல்பட்டவர்கள். இந்த இருவர்களால் SRUTI சீசன் 1 என்ற பாட்டுப்போட்டி நிகழ்ச்சி சென்ற வருடம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு புகழ்பெற்றது. 60 நாட்கள் நடந்த இப்போட்டியில் 4 வகையாக பிரிக்கப்பட்டு 5 சுற்று போட்டிகள் வைத்து நடத்தப்பட்டது. இந்த பாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தவர்களின் குழு – இசையமைப் பாளரும், தமிழ் சினிமா இசையமைப்பாளர் சங்கத்தின் தலைவருமான தினா, பின்னனி பாடகர்கள் அனந்து மற்றும் கங்கா, இசை மழலையின் தலைவர்…

Read More