கலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு “குருக்ஷேத்ரம்”!

மாபெரும் இதிகாசங்களில் ஒன்று மஹாபாரதம் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கிடையேயான குருக்ஷேத்ரா போராட்டத்தை விவரிக்கும், இந்த காவியத்தின் குருக்ஷேத்ர போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பிரமாண்ட படம் ‘குருக்ஷேத்ரம்’. உலகளவில் 3D முறையில் உருவாகியுள்ள இந்த படத்தை விருஷபாத்ரி புரொடக்ஷன் அளிக்கும், வி கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு  வழங்கும் பிரம்மாண்ட  படைப்பு இந்தப் படம். தமிழ் , தெலுங்கு , ஹிந்தி ,  கன்னடம் , மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நாகன்னா இயக்கியிருக்கும் இந்த மகாபாரத இதிகாசம் உருவாக முக்கிய காரணம் இருந்தவர்கள் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள்.  இந்தப் படத்தில் பீஷ்மராக அம்பிரிஷ்,  துரியோதனன் ஆக தர்ஷன்,கர்ணன் ஆக அர்ஜுன்  சார்ஜா,  பீஷ்மர் ஆக அம்பரீஷ்,கிருஷ்ணர் ஆக வி. ரவிச்சந்தர், அர்ஜுனன் ஆக சோனு சூட், சகுனி ஆக ரவி ஷங்கர், சையியா ஆக ராக்லைன் வெங்கடேஷ், திரௌபதி…

Read More

சைமா குறும்பட போட்டியில் விருது பெற்ற இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ்!

தென்னிந்திய திரைப்பட விருதுகளில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சைமா’. இதன் குறும்பட விருது விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல குறும்பட தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த இசைக்கான விருது ‘மேகம் செல்லும் தூரம்’ என்ற தனி இசை குறும்பட பாடலுக்கு இசையமைத்த ஜாட்ரிக்ஸ் என்கிற சூர்யாவிற்கு வழங்கப்பட்டது. பிரபல டைரக்டர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ்குமார் நடித்து இயக்கிய குறும்படம் ‘மேகம் செல்லும் தூரம்’ தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகி வெளியானது. இந்த படத்துக்கு 17 வயது நிரம்பிய இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ் இசையமைத்திருந்தார். சரண் ஒளிப்பதிவு செய்திருந்தார். மா.மோகன் பாடல் எழுதியிருந்தார். ஏற்கனவே இந்த குறும்படம் திரையுலகினர் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதன் இசையும் பாடலும் மனதை தொடுவதாகவும் திரும்ப திரும்ப கேட்க…

Read More

முந்திரிக்காடு பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும்! – சீமான் நம்பிக்கை!

ஆதி திரைக்களம் தயாரிப்பில் மு.களஞ்சியம் இயக்கியுள்ள படம் முந்திரிக்காடு. நேற்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.  விழாவில் இயக்குநர் மு.களஞ்சியம் பேசியதாவது, “அண்ணன் சீமான் சாதிய கட்டமைப்பிற்கு எதிரான எங்கள் முந்திரிக்காடு படத்தை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொண்டார். அண்ணன் சீமான் அவர்களுக்கு இப்பட டீம் மிகவும் நன்றியினை தெரிவித்து கொள்கிறது. சசி சார் என்றால் எங்களுக்குப் பயம் உண்டு. அவர் எனக்கு ஒரு சகோதரர் போல. விவேகானந்தன்  சார் எனக்கு முதல் படம் கொடுத்ததிற்கான காரணம் என்னுடைய செயல்பாடுகளை அவர் கவனித்து வந்தது தான். இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றியினைக் கூறிக்கொள்கிறேன்” என்றார்  அய்யா நல்லக்கண்ணு பேசியதாவது, “எனக்கு களஞ்சியத்தைப் பார்க்கும் போதெல்லாம் படத்தைப் பற்றி கேட்பேன். ஏனென்றால் இன்று சினிமாவில் நிறையப் போட்டியிக்கிறது. நாங்களும் கொள்கை ரீதியாக நாடகம் போட்டோம். சீமான் சசி ராஜு முருகன் எல்லாம்…

Read More

என்னோட ஜாக்பாட் சூர்யா தான்!- ஜோதிகா பெருமிதம்!

2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி ஜோதிகா நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா  சென்னையில் உள்ள  ஒரு நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. விழாவில் எடிட்டர் விஜய் வேலுகுட்டி பேசியதாவது, “இந்தப்படத்தில் வேலை செய்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்  சாருக்கு நன்றி. ஒரு சின்ன வேலை சொன்னாலும் அதற்கான ரிப்ளே உடனே கொடுப்பார். ஜாக்பாட் ட்ரைலரைப் பார்த்த அனைவரும் ரஜினி சார் படத்தின் ட்ரைலர் போல இருக்கிறது என்றார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கு” என்றார் ஒளிப்பதிவாளர் ஆனந்த் பேசியதாவது, “படம் ரொம்ப ஜாலியா இருந்தது. கிரேன்ல இருக்கும் போது சூட்டிங்கில் பலமுறை சிரித்து இருக்கிறோம்.…

Read More

சர்வதேச மணல் சிற்ப போட்டியில் இந்தியாவை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் சாம்பியன்!

இந்தியாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு அமெரிக்காவில் வழங்கப்படும் ‘மக்களின் தேர்வு விருது’ வழங்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக். இவர் நாட்டின் முக்கிய நிகழ்வுகளை மணல் சிற்பமாக உருவாக்கி, மக்களின் மனதில் இடம் பிடித்தவர். அமெரிக்காவின் பாஸ்டனில் ரிவெரி கடற்கரையில் சர்வதேச மணல் சிற்ப போட்டி நடைபெற்றது. இதில், உலகம் முழுவதிலும் இருந்து தலைச் சிறந்த மணல் சிற்ப கலைஞர்கள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து சுதர்சன் மட்டுமே பங்கேற்றார். இந்த போட்டியில், ‘பிளாஸ்டிக் மாசுபாட்டில் இருந்து நமது கடலை காப்பாற்றுங்கள்’ என்ற தலைப்பிலான மணல் சிற்பத்தை சுதர்சன் உருவாக்கினார். கடலில் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் மாசு, கடல் உணவுகள் மூலமாக மனிதனையும் பாதிக்கிறது என்பதை விளக்கும் வகையில் இந்த சிற்பம் அமைந்திருந்தது. இந்த சிற்பம் அமெரிக்காவின், ‘மக்களின்…

Read More

ராமதாஸ் முத்துவிழாவில் காடுவெட்டி குரு மகன்!

பாமக நிறுவனர் ராமதாஸின் முத்துவிழாவில் காடுவெட்டி குரு மகன் கனலரசன் தனது தாயாருடன் கலந்துகொண்டார். வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மறைவுக்குப் பிறகு தைலாபுரம் தோட்டத்திற்கும் குருவின் உறவினர்களுக்கும் இடையே வெளிப்படையாக மோதல் வெடித்தது. பாமக தலைமையின் எதிர்ப்பையும் மீறி குருவின் மகள் விருதாம்பிகை, தனது அத்தை மகன் மனோஜை கடந்த நவம்பர் 28ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு குருவின் மகன் கனலரசன் மற்றும் குருவின் சகோதரிகள், பாமக தலைமை மீது கடும் குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். கடந்த டிசம்பர் மாதம் காடுவெட்டியில் நடைபெற்ற குரு மணிமண்டப அடிக்கல் நாட்டு விழாவில் குருவின் குடும்பத்திலிருந்து அவரது மனைவி சொர்ணலதா தவிர யாரும் கலந்து கொள்ள வில்லை. மக்களவைத் தேர்தல் சமயத்திலும் கூட பாமகவுக்கு எதிரான நிலைப்பாட்டையே குரு குடும்பத்தினர் எடுத்திருந்தனர். இந்த நிலையில் பாமக நிறுவனர்…

Read More

’கென்னடி கிளப்’ படத்தின் நாயகன் நான் இல்லை!- அடக்கி வாசித்த சசிகுமார்!

கென்னடி கிளப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்படக்குழுவினர்களும், சிறப்பு விருந்தினர்களும் பேசியதாவது:- பாடலாசிரியர் விவேகா பேசும்போது:- ‘வெண்ணிலா கபடி குழு’ படத்திலிருந்து தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கியவர், கபடி விளையாட்டை முன்னிறுத்தும் படமாகவும் வறுமை பூசிய எளிய மனிதர்களின் வாழ்வு, பெண்களின் முன்னேற்றம் போன்ற வலிமையான கருத்துகளை கூறும் படமாக இருக்கும், இமான் மிகச் சிறந்த இசையைக் கொடுத்திருக்கிறார், ஜாம்பவான் பாரதிராஜா இப்படத்தில் இருப்பது மிகப் பெரிய பலம் என்றார். எஸ்.டி.சபா பேசும்போது:- படம் வெளியாவதற்கு முன்பே இயக்குநர் சுசீந்திரன் விருது பெற்று விட்டார், இந்த மாதிரி தரமான படங்களைத் தயாரிப்பதற்கு தாய் சரவணனுக்கு நன்றி. எங்கள் ஆசானான பாரதிராஜாவை வைத்து இரண்டாவது படம் எடுப்பது பாக்கியமாக கருதுகிறேன் என்றார், படதொகுப்பாளர் ஆண்டனி பேசும்போது:- இப்படத்தில் பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி. இப்படத்தில் நடித்த அனைத்துப் பெண்களும்…

Read More

ஆக., 1 முதல், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அத்தி வரதர்!

”அத்தி வரதர் நின்ற கோலம் தரிசனத்திற்கு, பக்தர்கள் அதிகம் பேர் வருவர் என்பதால், கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களும் பலப்படுத்தப்படும்,” என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும், அத்தி வரதர் வைபவம், 1ம் தேதி முதல் நடைபெறுகிறது. தற்போது, சயன கோலத்தில் இருக்கும் அத்தி வரதர், ஆகஸ்ட், 1ம் தேதி முதல், நின்ற கோலத்தில் அருள்பாலிக்க உள்ளார். அத்தி வரதர் நின்ற கோலத்தை காண, பக்தர்கள் அதிகம் வருவர் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கை குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர், பொன்னையா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: அத்தி வரதர் வைபவம், 28 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று, ஏகாதசி என்பதால், 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர், அத்தி வரதரை தரிசித்திருப்பர். காலை, கூட்டம் அதிகமாக இருந்ததால், பக்தர்களை தடுத்து நிறுத்தி, உள்ளே…

Read More

பாஜக எம்.பி.க்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ்!- மோடி & அமித் ஷா டீச்சராகிரார்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகச் சிறப்பு வகுப்புகளுக்கு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வார இறுதியில் பாஜக எம்.பி.க்களுக்குப் பயிற்சி வகுப்புகளுக்காக ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்புகளில் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க வேண்டுமென்று கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜகவின் நாடாளுமன்றக் குழு அலுவலகத்திலிருந்து அனைத்து எம்.பி.க்களுக்கும் செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது. அச்செய்தியில், ‘அப்யாஸ் வர்கா’ என தலைப்பிடப்பட்டுள்ள பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளில் எம்.பி.க்கள் மட்டுமல்லாமல் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான அமித் ஷா, பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு விவகாரங்கள், தலைப்புகள் குறித்து எம்.பி.க்களுக்கு நரேந்திர மோடியும், அமித் ஷாவும் விரிவுரையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

முத்தையா முரளிதரன் ஆக நடிக்கிறார் விஜய் சேதுபதி!

முத்தையா முரளிதரன் ஆக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தைப் பற்றி தயாரிப்பு நிறுவனமான தார் தெரிவிப்பது என்னவென்றால்,”உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையையும் காலங்களையும் வெள்ளித்திரைக்கு கொண்டுவருவதில் நாங்கள் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் அடைகிறோம். இப்படத்தை உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்கு எடுத்து செல்லவிருக்கிறோம். தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான நடிகரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார்.திரு எம் எஸ் ஸ்ரீபதி இப்படத்தை எழுதி இயக்க உள்ளார். தமிழில் உருவாகும் இப்படம், உலகின் பல மொழிகளில்  வெளியிடப்பட இருக்கிறது. ஒரு பிரபல தென்னிந்திய தயாரிப்பு நிறுவனத்துடன் நாங்கள் இணைந்து இப்படத்திற்காக பணியாற்றி கொண்டிருக்கிறோம். இதை பற்றிய அதிகார அறிவிப்பு வெகு விரைவில் வெளியிட உள்ளோம்.” இப்படத்தைப் பற்றி முத்தையா முரளிதரன் கூறுகையில்,”எனது…

Read More