ராதாபுரம் மறுவாக்கு ரிசல்டை ரிலீஸ் செய்ய சுப்ரீம் கோர்ட் தடை!

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரை, திமுக சார்பில் அப்பாவு ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இந்த முடிவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு தாக்கல் செய்த மனுவில், தபால் மூலம் பதிவான 203 வாக்குகளை அதிகாரிகள் எண்ணவில்லை என குறிப்பிட்டிருந்தார். 19, 20 மற்றும் 21 ஆவது சுற்றுகளை எண்ணும்போது காவல்துறையினர் தங்களை வெளியேற்றி விட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தபால் வாக்குகள் மற்றும் 3 சுற்று வாக்குகளின் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்கு…

Read More

அடல்ட் காமெடியாக சொல்லும் படமே “பப்பி”. வரும் வாரம் அக்டோபர் 11ம் தேதி படம் வெளியாகும்!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வருண் முதல்முறையாக கதைநாயகன் வேடமேற்றிருக்கும் படம் “பப்பி”. மொரட்டு சிங்கிள் நட்டு தேவ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். தீபக்குமார் பாடி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிச்சர்ட் எடிட்டிங் செய்துள்ளார். “பப்பி” படத்தில் நாயகனாக வருண் நடிக்க கோமாளி புகழ் சம் யுக்தா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இன்றைய இளைஞர்களின் உறவுச் சிக்கல்களை அடல்ட் காமெடியாக சொல்லும் படமே “பப்பி”. வரும் வாரம் அக்டோபர் 11ம் தேதி படம் வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் பேசிய போது“ வேல்ஸ் ஃபிலிம்ஸ்ஸின் மூன்றாவது படம் “பப்பி”. கடந்த இரண்டு படங்களை போல இந்தப் படமும் மாபெரும் வெற்றி பெறும். காலேஜ் செல்லும் இளைஞர்களுக்காகவே எடுத்திருக்கும் படம். அவர்கள் ரசிக்கும் படி…

Read More

நம்ம நாட்டு எம்.ஐ 17 ரக சிறிய ஹெலிகாப்டரை, ஜம்முவில் சுட்டு வீழ்த்தியது நம்ம ஆளுங்கதான்!

கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ 17 ரக சிறிய ஹெலி காப்டரை, ஜம்முவில் சுட்டு வீழ்த்தியது யார் என்ற அதிர்ச்சித் தகவல் ஏழு மாதங்களுக்கு பின் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்காம் பகுதியில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதியன்று இந்திய விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ 17 ரக சிறிய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தபட்டது. அதே மாதம் 14-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட புலவாமா  தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்திய மற்றும் பாகிஸ்தான் படைகளிடையே தீவிரமான வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து வந்த சூழ்நிலையில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்போது  அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணையும் நடை பெற்று வந்தது. இந்நிலையில் எம்.ஐ 17 ரக சிறிய ஹெலிகாப்டரை, ஜம்முவில் சுட்டு வீழ்த்தியது யார் என்ற அதிர்ச்சித் தகவல் ஏழு மாதங்களுக்கு பின் வெளியாகியுள்ளது.…

Read More