தளபதி விஜயின் “பிகில் ” ட்ரைலர் அக்டோபர் 12 ஆம் தேதி வெளியீடு !

தளபதி விஜய் நடிப்பில் ,அட்லி இயக்கத்தில் ,இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்   ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் (கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ்) பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்.கிரியேட்டிவி தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி. வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா இந்தப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் . மேலும் இப்படத்தில் விவேக் , கதிர் ,ஜாக்கி ஷெரஃப், டேனியல் பாலாஜி , ஆனந்த் ராஜ் , தேவதர்ஷினி , யோகிபாபு ,மனோபாலா ,LM விஜயன் , இந்துஜா , அமிர்தா ஐயர் , ரெப்பா மோனிகா ஜான் , வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்துள்ளனர் . இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட்டானது . தற்போது பிகில் படத்தின் ட்ரைலர் வருகின்ற அக்டோபர் 12 ஆம் தேதி  மாலை 6…

Read More

மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ-வுக்காக மரங்களை வெட்டக் கூடாது – சுப்ரீம் கோர்ட்

மும்பையின் மையத்தில் அமைந்துள்ள ஆரே பகுதியில் இனி மரங்களை ஏதும் வெட்டக் கூடாது என்று உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு  தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை ஆரே காலனி மரங்கள் நிறைந்த வனம் போன்ற ஒரு பகுதியாகும். இங்கு மூன்றாவது மெட்ரோ பணிமனையை அமைக்க ரயில்வே திட்டமிட்டிருந்தது. இதற்காக அப்பகுதியில் இருக்கும் மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி மெட்ரோ நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் மரங்களை வெட்ட அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த வெள்ளியன்று மகாராஷ்டிரா அரசு மரங்களை வெட்டத் தொடங்கியது. இதை எதிர்த்து மாணவர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் என பலத் தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தது. இதில் 29…

Read More

மகாபலிபுரத்தில் பிரதமர் – சீன அதிபர் சந்திப்பு – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நம் இந்தியப் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்திப்புக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று துவங்கி பிரதமர் சீன அதிபர் வந்து செல்லும் வரை மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து பாரம்பரிய சிற்ப வளாகங் களையும் மூட மாவட்ட கலெக்டர் பொன்னையா தொல்லியல் துறை கண்காணிப்பாளருக்கு பரிந்துரைத்துள்ளார். இந்தியா – சீனா இடையேயான முறைசாரா உச்சி மாநாடு வரும் 11,12 தேதிகளில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. அதில், பிரதமர் மோடி – சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் கலந்துகொண்டு இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இரு நாட்டுத் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள், குப்பைகள் அகற்றப்பட்டு, சுவர்களுக்கு வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. மாமல்லபுரமே புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு…

Read More

தமிழுக்கு புது டைப்பான படம் ‘கைதி’ – தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ஹேப்பி!

கார்த்தி நடிப்பில் Dream Warrior Pictures சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு மற்றும் Vivekananda Pictures சார்பில் திருப்பூர் விவேக் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “கைதி”. மாநாகரம் படப்புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் CS இசையமைத்துள்ளார். பிலோமின்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். N சதீஷ்குமார் கலைஇயக்கம் செய்துள்ளார். அன்பறிவ் சண்டைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். பொன் பார்த்திபன், லோகேஷ் கனகராஜ் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். இப்படத்தில் கார்த்தியுடன் நடிகர்கள் நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் இணைந்து நடித்துள்ளனர். தீபாவளிக்கு வெளியாகும் “கைதி” திரைபடத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி சினிமா உலகத்தையே கலக்கியது. இந்த நிலையில் இன்று அனைவரையும் பேரானந்தத்தில் ஆழ்த்திய “கைதி” படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் வெளியீட்டு விழா பத்திரிகையாளர்கள் முன்னிலையில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள…

Read More

“கோமாளி” வெற்றிக் கொண்டாட்டம் !

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிப்பில் புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள படம் “கோமாளி”. இந்தாண்டில் வெளியான படங்களில் “கோமாளி” படம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரது மனங்களையும் வென்று தற்போதைய தமிழ் திரையுலகில் 50 நாட்களை கடந்து வசூல் சாதனை படைத்து திரையரங்கில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஜெயம் ரவி பலவித தோற்றங்களில் நாயகனாக கலக்க, காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளனர். யோகிபாபு, சாரா, கே எஸ் ரவிக்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா குழு இசையமைத்துள்ளார்கள். இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா தனியார் அரங்கில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட இவ்விழாவில் இயக்குநர்…

Read More

2019-ம் வருடத்துக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2019-ம் ஆண்டு மருத்துவ கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வில்லியம் ஜி.கேலின், சர் பீட்டர்  ராட்கிளிஃப், கிரேக் எல்.செமன்ஸா ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித உடலில் உள்ள செல்கள் எப்படி பிராணவாயு அளவுக்கு ஏற்ப தகவமைத்து கொள்கின்றன என்பதை கண்டறிந்ததற்கும் மேலும் செல்களின் வளர்சிதை மாற்றத்திற்கும், ஆக்சிஜன் அளவுக்குமான தொடர்பை கண்டறிந்ததற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மூவரின் கண்டுபிடிப்புகள் மூலம் ரத்த சோகை, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை எதிர்க்க புதிய…

Read More