சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் யுவன்சங்கர் ராஜா, ஹர்பஜன் சிங்!

எத்தனை சுழற்சி வந்தாலும் ரசிகர்களை தன் இசையால் கட்டிப்போடும் யுவன்சங்கர் ராஜாவும், சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து வரும் டிக்கிலோனா படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தை பல வெற்றிகரமான படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்த கார்த்திக் யோகி இயக்குகிறார். சென்றமாதம் வெளியான இப்படத்தின் தலைப்பு எப்படி வெகுஜனத்தை வெகுவாக ஈர்த்தது.  அதேபோல் தற்போதும் சினிமா ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இசை அமைப்பாளாராக யுவன் சங்கர் ராஜாவும் நடிகராக ஹர்பஜன் சிங்கும் இப்படத்தில் இணைகிறார்கள் என்ற   இனிப்பான செய்தியை  இப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். டிக்கிலோனா என்ற தலைப்பும், முதன்முதலாக சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்பதும் எப்படி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோ அதேபோல் யுவங்சங்கர் ராஜா இசை அமைக்கிறார் என்ற செய்தியும், ஹர்பஜன் சிங்…

Read More

மலேசிய கலை விழா வெற்றி : சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் ரவிவர்மா நன்றி!

அண்மையில் மலேசியாவில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் பிரம்மாண்டமான கலை விழா நடைபெற்றது .வெற்றிகரமாக நடந்த அவ் விழாவையொட்டி அந்தச் சங்கத்தின் தலைவர் ரவிவர்மா நன்றி தெரிவித்து ஓர் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தொலைக்காட்சிகள் மூலம் இல்லந்தோறும் சென்றடைந்திருக்கும் சின்னத்திரை கலைஞர்களின் புகழை நாடறியும் .ஆனால் அவர்களின் உரிமைகளுக்காகச் சங்கம் என்ற ஒன்று இல்லாமல் இருந்தது. நினைவில் வாழும் நடிகர் எஸ்.என். வசந்த் அவர்களின் முயற்சியால் 2003இல் சின்னத்திரை நடிகர் சங்கம் உருவானது. சங்கம் உருவாகிப் பல ஆண்டுகள் ஆனாலும் சங்க வளர்ச்சிக்கு என்று பெரிதாக எதுவும் திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் இருந்தது . நான் 2019-ல்  பதவியேற்ற பிறகு சின்னத்திரை நடிகர் சங்கத்தின் நலனுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று யோசித்தேன். அதன் விளைவாகச் சங்க நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்கப்பட்டது. அதன்படி சின்னத்திரை கலைஞர்களுக்கென்று ஒரு கலை…

Read More

விஜய் நடித்த ‘பிகில்’ – நியூ ஸ்டில்ஸ்!

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அட்லி  இயக்கியுள்ள  பிரமாண்டமான படம் “பிகில் ” தீபாவளிக்கு வர ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. தளபதி விஜய் நடிப்பில் ,அட்லி இயக்கத்தில் ,இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கல்பாத்தி S அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் “பிகில் ” படத்தை பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர் .. இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரித்துள்ளனர் . கிரியேட்டிவி தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி . வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா இந்தப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் . மேலும் விவேக் , கதிர் ,ஜாக்கி ஷெரஃப், டேனியல் பாலாஜி , ஆனந்த் ராஜ் , தேவதர்ஷினி , யோகிபாபு ,மனோபாலா ,LM விஜயன் ,…

Read More

பாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கத்தில் நடிகை சாந்தினி!

ஒரு திறமையான நடிகைக்கு தன் கண்களும் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் மிக முக்கியம். அது நடிகை சாந்தினிக்கு மிக இயல்பாக அமைந்துள்ளது. அவரின் நடிப்புப் பயணத்தில் கண்களாலும் நடிப்பாலும் மிரட்டிய படங்கள் உண்டு. நீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கும் நடிகைகள் வெகு சிலரே .. அந்த வகையில் தன் திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை சாந்தினி க்கு தனி இடம் உண்டு. சித்து +2 வில் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு சமீபத்தில் வெளியான ராஜா ரங்குஸ்கி வரை இவரின் கலைப் பயணம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ராஜா ரங்குஸ்கி படத்தில் இவர் ஏற்று நடித்த வில்லி கதாபாத்திரம் பலரின் புருவங் களை உயர்த்தியது. இவருக்கு நடிப்பில் பெரிய நல்ல பெயரையும் பெற்று கொடுத்தது. இவரது நடிப்பை கண்டு வியந்த பாலாஜி சக்திவேல்…

Read More

இந்தியாவின் பார்வையற்ற முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பிரஞ்சால் பட்டீல்!

பார்வை குறைபாடு உள்ள முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரியாக பிராஞ்சால் பட்டீல் பதவியேற்றுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் உல்ஹாஸ் நகரை சேர்ந்தவர் பிராஞ்சால் பட்டீல்(31). இவர் தனது ஆறாவது வயதில் பார்வை குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டார். சிறு வயது முதலே கல்வியின் மீது தீரா தாகம் கொண்ட பிராஞ்ஜல் பாட்டில் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சர்வதேச உறவுகள் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் யுபிஎஸ்சி தேர்வுகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். விடா முயற்சியால் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் தனது முதல் முயற்சிலேயே 773 வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் அவருக்கு இந்திய ரயில்வே துறையில் பணி கிடைத்தது. எனினும் இவருக்கு பார்வை குறைபாடு இருந்ததால் அந்தப் பணி ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மனம் தளராத பிராஞ்ஜல்…

Read More

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரித்து வரும் ஒய்வுபெற்ற அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்அனுப்பியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.இந்த ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி தூத்துக்குடியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் நாளை ஆஜராகி கேள்விகளுக்கு விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏவும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.அவர் இந்த வாரம் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணியின்போது வன்முறை ஏற்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்த…

Read More

“ராஜாவுக்கு செக் படம் பெண் குழந்தைகளுக்கான பத்து புத்தகங்களுக்கு சமம்” ; சிலாகிக்கும் சேரன்

பல்லாட் கொக்காட் பிலிம் ஹவுஸ் சார்பில் மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் தயாரித்துள்ள படம் ‘ராஜாவுக்கு செக்.. மழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் சேரன் கதாநாயகனாக நடித்துள்ளார் சிருஷ்டி டாங்கே சரயூ மோகன், நந்தனா வர்மா சுண்டாட்டம், ஆகியோருடன் விஜய் டிவி புகழ் இர்பான் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். குற்றம் கடிதல் படத்தின் எடிட்டிங்கிற்காக பேசப்பட பிரேம் இந்த படத்தின் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். ஆக்சன் காட்சிகளை டேஞ்சர் மணி வடிவமைத்துள்ளார். ஒட்டுமொத்த படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம் பெற்றுள்ளது. தெலுங்கில் முன்னூறுக்கும் அதிகமான படங்களில் பணியாற்றி, தனது பின்னணி இசைக்காகவே பிரபலமான வினோத் யஜமானியா இந்தப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக…

Read More