ஹீரோ அன்பு தனது தந்தை மயிலசாமியிடம் இருக்கும் பல நல்ல விஷங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் – நடிகர் விஜய் சேதுபதி

அல்டி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது:- ‘டத்தோ’ ராதாரவி பேசும்போது, சினிமா என்றாலே பரபரப்பாக இருப்பது ஒரு காலம் தான். அப்படி பரபரப்பாக இருக்கக்கூடிய காலத்திலும் படம் துவங்கியது முதல் இன்று வரை ஆதரவு அளித்திருக்கிறார். இன்று நேரில் வந்து வாழ்த்தும் உயர்ந்த உள்ளம் கொண்ட விஜய்சேதுபதியை பாராட்டுகிறேன். சினிமா இப்போது சிரமத்தில் இருக்கிறது. பார்த்திபன் நடித்த ‘ஒத்த செருப்பு’ படத்தை திரையரங்கிற்குச் சென்று பார்த்தேன். கைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். திரையரங்கில் கூட்டம் வந்தாலும் மறுநாளே எடுக்கச் சொல்லிவிட்டார்கள். அதனை நினைத்து பார்த்திபன் மிகுந்த வேதனையடைந்தார். பார்க்க பார்க்க தான் மக்களுக்கு படம் பிடிக்கும். உடனே, தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்று இன்னும் நீடிக்கச் செய்ய வேண்டுமென்று கூறி வந்தேன். சிறு…

Read More

இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி : ஆனா இது பொது தேர்தலுக்கான முன்னோட்டமா?..?

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளை அதிமுக கைப்பற்றியதால் அக்கட்சியின் பலம் சட்டப்பேரவையில் 125 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்குத்தான் என்ற பொதுவான கருத்து இருந்தாலும்கூட 5 மாதங்களுக்கு முன் மக்களவைத் தேர்தலில் அதிமுகவை படுதோல்விக்குத் தள்ளிய மக்கள் இப்போது திமுக, காங்கிரஸைப் புறக்கணித்திருப்பது பல்வேறு வாதங்களை எழுப்பியுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் ஒரு நியமன உறுப்பினரைச் சேர்த்து மொத்தம் 235 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், தற்போதைய நிலவரப்படி, தமிழக சட்டமன்றத்தில், அதிமுகவின் பலம், 123 ஆக இருந்தது. விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ-வான தி.மு.க-வைச் சேர்ந்த ராதாமணி உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் மாதம் உயிரிழந்ததால், பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் பலம், 101 லிருந்து 100 ஆக குறைந்தது. இதே போல், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஹெச். வசந்தகுமார், மக்களவைக்கு தேர்வானதால், 8 உறுப்பினர்களை தன்வசம்…

Read More