கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும் மற்றும் சந்துரு தயாரிப்பில் வைபவ் நடிக்கும் பிரம்மாண்டமான பேண்டஸி படம் ஆலம்பனா!

தமிழ்சினிமாவில் அரிதாக வரும் பேண்டஸி படங்கள் எல்லாம் பெரிதாக கவனம் ஈர்ப்பதுண்டு. அப்படி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தயாராகும் படம் ஆலம்பனா. அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடி இருக்கிறார்கள். அதைப் போன்ற ஒரு அபூர்வ கதையம்சத்தில் இன்றுள்ள குழந்தைகளுக்கும் இப்போதுள்ள ட்ரெண்டுக்கும் ஏற்ற வகையில் ஆலம்பனா எனும் படம் தயாராகிறது. ஆலம்பனா எனும் பெயரிடப்பட்டுள்ள இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கவனம் ஈர்க்கக்கூடிய படமாக பேண்டஸி கான்செப்ட்டோடும் பிரம்மாண்டமாக தயாராகிறது. விஸ்வாசம் படத்தை பெரியளவில் வெளியீட்டு பெரு வெற்றியை கண்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோ ஸும் தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பேண்டஸி படமாக இப்படத்தை எழுதி இயக்குகிறார் பாரி.கே.விஜய். இவர் முண்டாசுப் பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக…

Read More

நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனம்..! சட்ட ரீதியாக சந்திக்க நடிகர்கள் முடிவு!

நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் தமிழக அரசு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தது குறித்து சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் நாசர், கார்த்தி, மனோபாலா, சச்சு, பூச்சி முருகன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விபரம் வருமாறு:- தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த தேர்தல் முதல் எங்கள் அணி சட்ட ரீதியாகவே அணுகி வருகிறது. முந்தைய அணிகள் செய்த தவறுகளை நாங்கள் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இம்முறை தேர்தலுக்கு பல பிரச்சனைகள் வந்த போதிலும் அவற்றை சட்ட ரீதியாகவே சந்தித்தோம். இப்போது சங்கத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிக்கு எங்கள் ஒத்துழைப்பை அளிப்போம். அது எங்கள் கடமை. ஆனால், எங்கள் மீது எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் வைக்க முடியாத நிலையில் இதனை ஜனநாயக படுகொலையாகவே பார்க்கிறோம். ஆனால்,…

Read More

விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்!

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும் தேமுதிக கட்சியின் வளர்ச்சி பணிகள் தொடர்பாகவும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர்கள் சதீஸ் மற்றும் பார்த்தசாரதி ஆகிய முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேமுதிக-வின் கட்சி அலுவலகம் கோயம்பேட்டில் உள்ளது. அந்த தலைமை அலுவலகத்தில் தான் கூட்டமானது நடைபெற்றது. இதில் தேமுதிக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் 67 பேரும் பங்கேற்றனர். தொடர்ந்து தேமுதிக- வின் கட்சி வளர்ச்சி பணிகளை அனைத்து மாவட்டங்களிலும் விரிவாக முன்னெடுப்பது தொடர்பாகவும், அடுத்து வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கருத்துக்களை கேட்க இந்த கூட்டமானது நடைபெற்றது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் என்பது…

Read More

SRUTI சீசன் 2 ஆன்லைன் பாட்டுப் போட்டி நிகழ்ச்சி துவக்கம்!

SRUTI சீசன் 1 என்பது உலகளவில் நடத்தப்பட்ட ஒரு வித்தியாசமான பாட்டு போட்டியாகும். அதுவும் குறிப்பாக தமிழ் சினிமா பாடல்களுக்காகவே இந்நிகழ்ச்சியை உருவாக்கி அதனை வெற்றிகரமாக நடத்துபவர்கள் வினோத் வேணுகோபால் மற்றும் ரேஷ்மி. இவர்கள் இருவரும் பிரபல பாடகர்கள் மட்டுமின்றி Zee TVயில் நடத்தப்பட்ட சரிகமபா நிகழ்ச்சியின் போட்டிக்கு ஜூரியாக இருந்து திறம்பட செயல்பட்டவர்கள். இந்த இருவர்களால் SRUTI சீசன் 1 என்ற பாட்டுப்போட்டி நிகழ்ச்சி சென்ற வருடம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு புகழ்பெற்றது. 60 நாட்கள் நடந்த இப்போட்டியில் 4 வகையாக பிரிக்கப்பட்டு 5 சுற்று போட்டிகள் வைத்து நடத்தப்பட்டது. இந்த பாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தவர்களின் குழு – இசையமைப் பாளரும், தமிழ் சினிமா இசையமைப்பாளர் சங்கத்தின் தலைவருமான தினா, பின்னனி பாடகர்கள் அனந்து மற்றும் கங்கா, இசை மழலையின் தலைவர்…

Read More