நடிகர் அவதாரம் எடுத்திருக்கும் ஜேஎஸ்கே!

தரமணி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஜேஎஸ்கே, மம்மூட்டி நடித்த ‘பேரன்பு’ படத்தில் கெளரவ வேடமொன்றில் நடித்திருந்தார். தற்போது அருண் விஜய், விஜய் ஆன்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் பிரதான வேடங்களில் நடிக்கும் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் வலுவான பாத்திரமொன்றில் நடித்து வருகிறார். இயக்குநர் நவீன் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் நடிக்க அணுகியபோது, கதையிலும் தன் பாத்திரப் படைப்பிலும் வெகுவாக கவரப்பட்ட ஜேஎஸ்கே இப்போது அப்படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த பெரும்பாலான காட்சிகள், படத்தில் நடிக்கும் பிரதான பாத்திரங்களுடன் ரஷ்யாவில் படமாக்கப்பட்டன. அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் சிவா தயாரிக்கும் ‘அக்னி சிறகுகள்’ படத்துடன், சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’, ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படம் ஆகியவற்றிலும் நல்ல வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கும் நிலையில், தனக்கு முக்கியத்துவமுள்ள…

Read More

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி: முஸ்லிம்களுக்கு மாற்று இடம்: சுப்ரீம்கோர்ட் அதிரடி தீர்ப்பு!

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம்  இந்துக்களுக்கு சொந்தமானது. அங்கு ராமர் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை மாற்று இடமாக வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இன்று காலை அதிரடியாக தீர்ப்பளித்து உத்தரவிட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமஜென்ம பூமி பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய 2. 77 ஏக்கர் நிலத்திற்கு சன்னி வஃக்பு போர்டு, நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதுதொடர்பாக முதலில் பல ஆண்டுகளாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. கடந்த 2010ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2. 77 ஏக்கர் நிலத்தை மேற்கண்ட மூன்று அமைப்புகளும் சமமாகப் பிரித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது. ஆனால், அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை மூன்று அமைப்புகளும் ஏற்கவில்லை. டெல்லி…

Read More

எஸ்.பி. சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ” மிஸ்டர் டபிள்யூ”! – புது இயக்குனர் நிரோஜன் பிரபாகரன் அறிமுகம் |

சத்தி என் பிலிம்ஸ் சார்பில் மிஸ்டர் சத்தி தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் தான் ” மிஸ்டர் டபிள்யூ”. எஸ்.பி. சித்தார்த் கதையின் நாயகனாக அறிமுகமாக சின்னத்திரை புகழ் வாணி போஜன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இதில் லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர், பைனலிபாரத், வி.ஜே.சித்து, அனுபமா பிரகாஷ், அருள்கோவன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை பற்றி இயக்குனர் நிரோஜன் பிரபாகரன் கூறியதாவது, ” ஒருவன் உழைப்புக்கு ஊதியம் அழகு. உடலுக்கு உடை அழகு. முகத்திற்கு மீசை அழகு. பாடலுக்கு நடனம் அழகு என்று கூறி வரும் சமுதாயத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் சூப்பர் ஹிட் பாடலான “ஊர்வசி . . ஊர்வசி … பாடலில் வரும் “வழுக்கை தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈஸி பாலிசி ” என்று எழுதிய வைரமுத்துவின் அந்த வரிகளில் உள்ள…

Read More

நாகஷேகர் மூவிஸ் – ஜோனி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’

நாகஷேகர் மூவிஸ் – ஜோனி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ கன்னட திரையுலகில் பல வெற்றித் திரைப்படங்களை தந்த வெற்றிகரமான இயக்குனர் நாகஷேகர். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான நாகஷேகர் மூவிஸ் மூலம், ஜோனி பிலிம்ஸ் சார்பாக ஜோனி ஹர்ஷா, ஷிவு எஸ் யசோதரா ஆகியோருடன் நாகஷேகர் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’. இப்படத்தை கதை எழுதி, இயக்கும் அவர், முக்கிய வேடத்திலும் நடிக்கிறார். ‘அரண்மனை’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக உயர்ந்த நாகஷேகர், அதனைத் தொடர்ந்து ‘சஞ்சு வெட்ஸ் கீதா’, ‘மைனா’ ஆகிய வெற்றிப் படங்களைத் தந்த ஒரு ஜனரஞ்சகமான இயக்குனர். ‘ரெபல் ஸ்டார்’ அம்பரீஷ் – சுமலதா தம்பதியின் வாரிசான அபிஷேக்கை ‘அமர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தி,…

Read More