மகாராஷ்டிராவில் பாஜக-வின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்!

மகாராஷ்ட்ராவில் அதிரடி திருப்பமாக, பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்  சராக மீண்டும் பதவியேற்றார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியமைப்பது குறித்து கடந்த ஒரு மாதமாக நிலவிய இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கூட்டணி ஆட்சியமைப்பது குறித்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இடையே பல்வேறு கட்டங்களாக பேச்சுக்கள் நடந்த நிலையில், மும்பையில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 3 கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்ற இக்கூட்டத்திற்கு பின் நேற்று பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உத்தவ் தாக்கரேவை முதலமைச்சராக ஏற்பதில் 3 கட்சிகள் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். 3 கட்சிகளின் சார்பில் மும்பையில் செய்தியாளர் சந்திப்பு நடக்க உள்ளதாகவும் இதில் ஆட்சியமைப்பது தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் சரத் பவார் கூறியிருந்தார். இச்சந்திப்புக்கு பின் பேசிய சிவசேனா…

Read More

முத்தக் காட்சி எடுப்பது தவறில்லை – ஆர்.கே.சுரேஷ்!

தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் படம் எதிர்வினையாற்று. இதில் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத்ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நாயகன் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், சம்பத்ராம், லட்சுமி பிரியா ஒளிப்பதிவாளர் மனோஜ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினரும், தயாரிப்பாளர் தனஞ்செயன், விஜிபி சந்தோஷம், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். விழாவில் அலெக்ஸ் பேசிம்போது, ‘இந்தப்படம் கடந்த ஆறு மாதமாக எப்படி கடந்தது என்றே தெரியவில்லை. இந்தப்படத்தில் உழைத்த அனைவருக்கும் பெரிய நன்றி. டாக்டராக இருந்தவன் எப்படி நடிகராக மாறினார் என்று…

Read More

காலாகாலத்திற்கும் தமிழ் மக்களால் போற்ற வேண்டிய ஒரு வரலாற்று ஆவணமாக மெரினா புரட்சி விளங்கும் – தொல் திருமாவளவன்!

2017 ஜனவரியில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் நடத்திய அறவழி போராட்டத்தைப் பற்றிய புலனாய்வு ஆவண திரைப்படம் ‘மெரினா புரட்சி’. ஏற்கனவே 13 நாடுகளில் திரையிடப்பட்டு உலகத் தமிழர்களின் பாராட்டைப் பெற்ற மெரினா புரட்சி, நார்வே தமிழ் திரைப்பட விழா விருதையும், கொரிய தமிழ் சங்கத்தின் விருதையும் வென்றுள்ளது. இயக்குனர் M.S.ராஜ் இயக்கத்தில் நாச்சியாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள மெரினா புரட்சி வரும் நவம்பர் 29 அன்று திரைக்கு வருகிறது. இந்த திரைப்படத்தை சிறப்புக் காட்சியில் அரசியல் தலைவர்கள் திரு தொல் திருமாவளவன் MP, திரு தனியரசு MLA, திரு வேல்முருகன் EX MLA,  திரு திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பார்த்து படக்குழுவை வெகுவாக பாராட்டினர். தொல் திருமாவளவன் அவர்கள் பேசும்போது “மத்தியில் ஆளக்கூடியவர்கள் பீட்டா என்ற விலங்கு நல அமைப்போடு இணைந்து நம்முடைய பண்பாட்டு…

Read More

‘கபடதாரி’ படப்பிடிப்பில் சிபிராஜ் மற்றும் படக்குழுவினருடன் இணைந்தார் நந்திதா!

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் ‘கபடதாரி’யை, கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் சார்பில் லலிதா தனஞ்சயன் தயாரிக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் கதையின் நாயகனாக சிபிராஜ் இதுவரை நடித்திராத முற்றிலும் வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக நந்திதா ஒப்பந்தமாகியிருந்தார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி, சிறிதும் சிதையாமல் நடிக்கும் திறமை வாய்ந்த நந்திதா, ஒரே கட்டமாக முழுவீச்சில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் படக்குழுவினருடன் இணைந்தார். இவர்களுடன் விஸ்வரூபம் புகழ் பூஜா குமார், நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் மற்றும் இன்னும் சில பிரபலங்களும் நடிக்கிறார்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள் :- கதையை எம். ஹேமந்த் ராவ் எழுத, திரைக்கதை & வசனத்தை ஜான்  மகேந்திரன் & டாக்டர்.ஜி. தனஞ்சயன் கவனிக்கிறார்கள். ஒளிப்பதிவை ராசமதியும், கலை இயக்குநராக விதேஷும் பணியாற்றுகிறர்கள். சைமன் கே கிங் இசையமைக்கும்…

Read More

மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி கின்னஸ் உலக சாதனை முயற்சி !

சாதனைப் புத்தகங்களின் பக்கங்களில் சரித்திரம் படைக்கும் செயலாக அதில் மாணவர்களின் பெயர்களைப் பதிவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுவரும் மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி, தனது பள்ளியின் மழலை மனம் மாறா முதல் வகுப்பு மாணவி சி. சாராவின் ரூபிக்ஸ் கியூப் சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தகம் இந்திய சாதனை புத்தகம் மற்றும் தமிழ்நாடு சாதனை புத்தகங்களின் பக்கங்களின் பொன் எழுத்துக்களால் பொறிக்கும் முயற்சியினை திறம்பட நிறைவேற்றியது. இதனை யொட்டி பள்ளி தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன் தலைமையில் மாணவி சி.சாரா கண்களை கட்டியபடி ஐந்து ரூபிக்ஸ் கியூப் புதிர்களை கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை ஒப்புவித்த படியே 3 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் விடுவித்து உலகின் இளம் சாதனையாளர் விருதினை வென்று சாதனை படைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வருகைதந்த திரைப்பட நடிகையும் முன்னாள் செய்தி வாசிப்பாளருமான…

Read More