கேப்மாரி- விமர்சனம்!

எத்தனையோ சமுதாய கருத்துள்ள படங்களை இயக்கி புரட்சி இயக்குநர் எனப்பெயரெடுத்த எஸ்.ஏ சந்திரசேகர் சென்ற வருடம் ட்ராபிக் ராமசாமி என்ற கருத்தாழமிக்க படத்தை எடுத்திருந்தார். இளைஞர்களிடையே அது போதுமான வரவேற்பைப் பெறவில்லை. தற்போது இளைஞர்களின் பல்ஸ் பிடித்து ஒருபடம் எடுத்துள்ளார். அதுதான் கேப்மாரி. நான் இப்பவும் யூத்டா என்று யூத்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு படமெங்கும் துள்ளலான விசயங்களை அடுக்கி இருக்கிறார் எஸ்.ஏ.சி. நாயகன் ஜெய் நாயகி வைபவி சாண்ட்லியா இருவரும் ரயிலில் மீட் செய்து ஒருவருக்கொருவர் தங்களையே பரிமாறிக்கொள்கிறார்கள். அதோடு இரு வருடம் கழித்து இருவரும் மறுபடியும் மீட் பண்ண அவர்களுக்கு கல்யாணம் நடக்கிறது. இவர்களின் இல்லறத்திற்குள் படத்தின் இன்னொரு நாயகி அதுல்யாரவி நுழைகிறார். அதன் பின் ஜெய்யின் கல்யாண லைப் என்னானது என்பது தான் கேப்மாரி கதை. கேப் கிடைக்கிற இடத்தில் எல்லாம் மாறிமாறி…

Read More

‘குவீன்’ இணையத் தொடரின் செய்தியாளர்கள் சந்திப்பு!

ஓடிடி தளமான எம்.எக்ஸ். பிளேயர் ஆச்சரியப்படத்தக்க வகையிலான பிரமாண் டங்களை தரத் தயாராகி வருகிறது. இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும், ‘கிராடரி படத்தை இயக்கிய பிரசாத் முருகேசனும் ஒன்றிணைந்து ‘குவீன்’ என்று பெயரிடப்பட்ட இணையதளத் தொடர் ஒன்றை வழங்கவிருக்கின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை விவரிக்கும் இந்த இணையத் தொடர் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பும், முதல் எபிசோட் திரையிடலும் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், “உண்மையில் நான் மிகவும் அனுபவித்து இந்தப் பணியைச் செய்தேன். காரணம் காலக் கட்டுபாடு எதுவும் இதில் இல்லை. மேலும் இந்த ஓடிடி தளமே, கதை சொல்லலுக்கேற்ற நல்ல மற்றும் சரியான வடிவம் என்று நினைக்கிறேன். முதல் சீசன் பதினோரு பாகங்களாக ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இப்போது இரண்டாம் சீசனுக்கான பணிகளைத்…

Read More