ஊரக உள்ளாட்சிக்கு பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் முதல் கட்ட தேர்தல்…!

தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. 4,700 ஊராட்சி தலைவர் பதவி உள்பட 45,336 பதவிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.இதற்காக அந்தந்த மாவட்டங்களில் வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 27ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களிலும், 2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடக்கிறது. 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 2546 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 4700 ஊராட்சி தலைவர் பதவி, 37830 ஊராட்சி உறுப்பினர் பதவி…

Read More

சபரிமலையில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்!

சபரிமலையில் நாளை மறுதினம் மண்டலபூஜை நடைபெற உள்ளதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 40 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 15-ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப் பட்டது. நடை திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே தமிழகம், கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் 10 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் 26-ம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதற்காக கோயில் நடை 4 மணி நேரம் அடைக்கப்படுகிறது. மறுநாள் 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுவதால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால்…

Read More

வாஜ்பாயின் 95-வது பிறந்த நாள்: லக்னோவில் 25 அடி உயர சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 95வது பிறந்தநாளையொட்டி, லக்னோவில் 25 அடி உயர வாஜ்பாய் சிலையை பிரதமர் மோடி திறந்து  வைத்தார். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த  ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி காலமானார். இவரின் நினைவைப் போற்றும் வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய ராய்ப்பூரின் பெயரை அடல் நகர்’  எனப் பெயர் மாற்றம் செய்து அம்மாநில அரசு அறிவித்தது. மத்தியப் பிரதேச அரசு, வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்றைப் பள்ளிப் பாடத்திட்டத்தில்  சேர்க்கப்போவதாகவும் தங்கள் மாநிலத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்போவதாகவும் அறிவித்திருந்தது. இதனை யடுத்து, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஆண்டு வாஜ்பாய்க்கு தன்னுடைய மாநிலத்திலும் சிலை நிறுவப்படும் என   அறிவித்திருந்தார். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம்…

Read More

வெறும் 10 நாட்களில் உருவாகியிருக்கும் ‘டோலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

இரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகி யிருக்கும் ‘டோலா’ படத்தின் வெளியீட்டு விழா இன்று (25.12.2019) நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்கள் மற்றும் சிறப்பு விருந்திருனர்கள் பேசியதாவது தயாரிப்பாளர் டாக்டர் ஷாம் குமார் பேசும்போது, நான் இந்த இடத்திற்கு வருவதற்கு காரணம் என் நண்பர்கள் தான். ஊக்குவிக்க முடியவில்லையென்றாலும் கைதட்டி விடாமலாவது இருங்கள். தயாரிப்பாளர்களை வரவேற்க வேண்டும். அப்போது தான் பெரிய படங்கள் உருவாகும். ஒரு ஜிம் பாயாக வந்தவன் இன்று தயாரிப்பாளராக நிற்கிறேன். அதுதான் சினிமா. சினிமாவை நேசியுங்கள், அதேபோல் குடும்பத்திலுள்ளவர்களையும் நேசியுங்கள். நான் இந்த நிலைக்கு வருவதற்கு என் குடும்பமும் ஒரு காரணம். ஒரு நல்ல படம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்துதான் இப்படத்தை எடுத்தேன். இப்படத்திற்குப் பிறகு ‘ரகுடு’ என்ற கேங்ஸ்டர் படம்…

Read More