” தர்பார் “வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக  திரைக்கு வருகிறது! .

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்  இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம்  “தர்பார்” .  2.0 எனும் பிரமாண்ட படத்தின் வெற்றிக்கு பின் ரஜினிகாந்துடன் இரண்டாவது முறையாக இணைந்து இப்படத்தினை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸ்டார்  நயன்தாரா நடிக்கிறார் . பிரபல பாலிவுட் நடிகர் சுனில்ஷெட்டி வில்லனாகவும் , முக்கிய கதாபாத்திரங்களில் நிவேதா தாமஸ் , யோகிபாபு , தம்பி ராமய்யா , ஸ்ரீமன் , பிரதிக் பாபர் , ஜட்டின் ஷர்னா  , நவாப் ஷா , தலிப் தஹில் மற்றும் பலர் நடிக்கிறார்கள் . அனிரூத் இசையில் இப்படத்திலிருந்து சும்மா கிழி எனும் பாடல் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மீதமுள்ள பாடல்களுக்கும் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது . ஸ்ரீகர் பிரசாத்   படத்தொகுப்பு  செய்ய  சந்தோஷ் சிவன்…

Read More

பட்டைய கிளப்பும் “பட்டாஸ்” படத்தின் “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல்!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “பட்டாஸ்” படம் அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல்கள் மூலம் கொண்டாட்ட அதிர்வலைகளை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. முதல் சிங்கிளான “ஜில் ப்ரோ” மற்றும் இரண்டாவதாக வெளியான “மொரட்டு தமிழன்டா” இரண்டும் பெரு வெற்றி பெற்ற நிலையில் இப்போது மூன்றாவதாக அனிருத் குரலில் வெளியாகியிருக்கும் “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல்  ஒரே இரவில்  ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களை கவர்ந்திழுத்து பெரு வெற்றியடைந்துள்ளது.  “பட்டாஸ்” படத்தின் மூன்று பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறியது இசையமைப்பாளர்களான விவேக், மெர்வின் குழுவை இன்பத்தின் உச்சிக்கு அழைத்து சென்றிருக்கிறது. மேலும் அவர்களது நெருங்கிய நண்பரான அனிருத்துடன் இணைந்து இப்பாடல் உருவாகியிருப்பது, அவர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அனிருத்துடன்  இணைந்து பணியாற்றியது குறித்து இசையமைப்பாளர் விவேக் கூறியதாவது… அனிருத் எப்போதும் எங்களுக்கு நண்பருக்கு மேலானவர். அவர் எங்களின் சகோதரர்…

Read More

மீடியா, மக்கள், விமர்சகர்கள் என அனைவர் மனதையும் கொள்ளையடித்த “சில்லுக்கருப்பட்டி” !

கடந்த பல வருடங்களில் பல புதிய பரிசோதனை முயற்சிகளை நிகழ்த்தி திரையில் சாதனை படைத்து வந்திருக்கிறது  தமிழ் சினிமா. ஆனால் ஆந்தாலஜி எனும் வகை தமிழ்சினிமாவில் பலகாலமாக முழுமையாக நிகழாமல் இருக்கிறது. இந்த வகை படங்களை ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின்  ராம் கோபால் வர்மாவின்  ‘தர்னா மானா ஹை முதல் பாம்பே டாக்கீஸ்’ வரை கொண்டாடி தீர்க்கும் தமிழ் ரசிகர்கள் தமிழிலும் இது போல் படம் எப்போது நிகழும் எனும் ஏக்கத்தில் இருந்தனர். அவர்களின் ஏக்கத்தை துடைத்து அனைவரும் கொண்டாடும் ஒரு படைப்பாக வந்திருக்கிறது ஹலிதா சமீமின் “சில்லுக்கருப்பட்டி”. ஆந்தாலஜி முறையில் நகர பின்னணியில் அன்பை பேசும் நான்கு கதைகளை சொல்லும் படமாக உருவாகியிருக்கிறது “சில்லுக்கருப்பட்டி”. பத்திரிகை முன் திரையீடுகளில் நேர்மறை விமர்சனங்களால் பாராட்டை குவித்த “சில்லுக்கருப்பட்டி” படம் இப்போது நகரம் மட்டுமல்லாது தமிழகம் முழுதும் அதிகளவு…

Read More

புத்தாண்டில் கொடியேற்றத்துடன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா தொடக்கம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத திருவாதிரை ஆருத்ரா தரிசன விழா வருகிற புத்தாண்டு தினத்தன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்குவது கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில். சபாநாயகர் கோயில் எனப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மற்றும் ஆனி மாதங்களில் தேரோட்ட திருவிழா மற்றும் தரிசன விழா சிறப்பாக நடைபெறும். மார்கழி மாதத்துக்கான மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசன விழா வருகிற 1ம் தேதி புத்தாண்டு தினத்தன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கோயில் உத்சவ ஆச்சாரியார் சிதம்பர சபாபதி தீட்சிதர் கோயிலின் உள்ளே நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியை ஏற்றி வைத்து திருவிழாவை துவக்கி வைக்கிறார். அதை தொடர்ந்து தினமும் பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா…

Read More

பேசாத படத்தை பேச வைத்தவர் இளையராஜா -. தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா பேச்சு!

SNS MOVIES பட நிறுவனம் சார்பில் கொளசல்யா ராணி பெருமையுடன் தயாரிக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகு நாட்களுக்குப் பிறகு  இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பது தான். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். நேற்று இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா அடையாரில் மிகப்பிரம்மாண்டமாக நடந்ததுடன் அதில் வெளியிடப்பட்டது. விழாவில் இசை ஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா, நாயகன் விஜய் ஆண்டனி, ராதாரவி,படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, T. சிவா ,படத்தின் நாயகி ரம்யா நம்பீசன், ரோபோ சங்கர், மதுமிதா, மற்றும் பா.ஜ.க கட்சியின் முக்கிய பிரமுகர்களான பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன்ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் *இயக்குநர் பாபு யோகஸ்வரன்* பேசியதாவது,…

Read More