இறுதி கட்ட பணிகளில் அருண் விஜய்யின் “சினம்” !

வேகத்திற்கும், சுறுசுறுப்பிற்கும் கடும் உழைப்பின் வழியே, புதிய இலக்கணம் வகுத்திருக்கிறது “சினம்” படக்குழு. அருண் விஜய் நடிப்பில் GNR குமரவேலன் இயக்க  சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட “சினம்” படம் தொடர் படப்பிடிப்பில் ஈடுபட்டு திரையுலகமே ஆச்சயப்படும் வேகத்தில் மொத்த படப்பிடிப்பையும் முடித்திருக்கிறது. இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் மிகப்பெரும்  பொருட்செலவில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட அரங்கில், ஆக்ரோஷமான சண்டைக்காட்சியை  எடுத்து முடித்துள்ளது படக்குழு. தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளை துவக்கவுள்ளது “சினம்” படக்குழு. இது குறித்து இயக்குநர் GNR குமரவேலன் கூறியதாவது… நடிகர் அருண் விஜய்யின் ஒத்துழைப்பு இல்லையெனில் இது எதுவுமே சாத்தியமாகியிருக்காது. அவர் தற்போது தொடர் வெற்றிகளுடன், ஒரே கட்டமாக பல படங்களில் நடித்து வருகிறார். அவரது சமீபத்து வெளியீடான “மாஃபியா” படத்தின் வெளியீட்டு பணிகளுக்கும் அவர் நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது. ஆனால் இத்தனை இடையராத பணிகளுக்கு மத்தியிலும் இப்படத்திற்கு…

Read More

டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது

சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிற டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.  இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே அசரடிக்கும் அளவில் இருக்கிறது. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படம் மூலம் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனகா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக இளைஞர்கள் நெஞ்சில் தஞ்சம் அடைந்த  ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இன்றைய தமிழ்சினிமாவின் எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தனம் கலந்த காமெடியால் ஆடியன்ஸை சுவாரசியப்படுத்தும் ஆனந்த்ராஜ், குணச்சித்திரம் காமெடி என அந்தக் கேரக்டருக்கான முக்கியத்துவத்தை நடிப்பில் கொண்டு வரும் முனிஷ்காந்த், அனுபவம் வாய்ந்த நடிகர்களான நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மேலும் காமெடிக்கு வலு சேர்க்க மொட்டை ராஜேந்திரன், ஷாரா…

Read More

நேரம் தவறாத சிலம்பரசன் T R ; விறுவிறுப்பாக படமாகும் மாநாடு பாடல் காட்சி

அமைதிப்படை-2′, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது வெங்கட் பிரபு டைரக்சனில் சிலம்பரசன் T R நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. கதா நாயகியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.. இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் எஸ் ஏ சி , ஒய் ஜி மகேந்திரன், எஸ்.ஜே. சூர்யா, உதயா, கருணாகரன், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், பஞ்சு சுப்பு, டேனியல் ஆகியோர் கொண்ட ஒரு நடிகப் பட்டாளமே இந்தப் படத்தில் பங்கேற்று நடிக்கின்றனர்.. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரவீண் கே. எல் எடிட்டிங் செய்கிறார். ஸ்டண்ட் சில்வா சண்டைப் பயிற்சியைக் கவனிக்க படம் வேக வேகமாக உருவாகி வருகிறது. “மாநாடு” படத்திற்காக தற்போது…

Read More