வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் தயாரித்த ஐந்தாயிரம் முகக்கவசங்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது!

ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து, தங்களின் தனிப்பட்ட முயற்சியால் ஐந்தாயிரம் முகக்கவசங்களைத் தைத்துள்ளனர். இந்த நற்பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். சிறந்த ஆசிரியர்கள் மற்றும் சிறந்த பாடத்திட்டம் மூலம் மாணவர்களைச் சாதனையாளர்களாக மாற்றும் வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம், மாணவர்கள் அனைவரும் எடுத்திருக்கும் இந்த முயற்சியால் பெருமிதம் கொள்கிறது. பெற்றோர்களுடன் வீட்டினுள் அடைப்பட்டு கிடக்கும் இந்த வேளையில், ஒரு பொறுப்புள்ள குடிமகனாய் சமூகச் சிந்தனையோடும், தன்னம்பிக்கையோடும், நாட்டுமக்களுக்கு உதவும் வகையில் முகக்கவசம் தயாரித்திருப்பது பெருமை கொள்ளச் செய்கிறது. இதனைத் தொடர்ந்து, பள்ளித் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் அவர்கள் உத்தரவின்பேரில், பருத்திப்பட்டு வேலம்மாள் வித்யலயாவின் முதல்வர் திருமதி. வி.செல்வநாயகி அவர்கள், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அவர்களிடம் ஜுன் 1 அன்று ஆட்சியர் அலுவலகத்தில் இந்த ஐந்தாயிரம் முகக்கவசங்களை வழங்கினார். மாணவர்களின்…

Read More