மோசடி – விமர்சனம்!

2017-ஆம் ஆண்டு டிமானிடேசன் என்ற ஒன்று நாட்டை அதகளப்படுத்தியது. அந்த மேட்டரை கதையோடு கோர்த்து விட்டதில் மோசடியின் இயக்குநர் ட்ராஸடி இல்லா பயணத்தைத் தொடங்கி விட்டார். படத்தின் ஆரம்பக் காட்சிகள் சதுரங்கவேட்டை படத்தை கண்முன் கொண்டு வந்து காயப்படுத்தினாலும் நாயகன் போலீஸ்டேசனில் தான் மக்களை ஏமாற்றுவதற்கான காரணத்தைச் சொல்லும் இடம் ஆறுதலைத் தருகிறது. போகிற போக்கில் இதுவும் ஒருபடம் என்ற அலுப்பைத் தரும் விசயங்கள் படத்தில் இல்லாமல் இல்லை. அதே சமயம் வொர்த்தான சில விசயங்களும் படத்தில் இருக்கவே செய்கறது.

முக்கியமாய் கருப்புப் பணத்திற்கு எதிராக நாயகன் க்ளைமாக்ஸில் சொல்லும் விசயங்கள் எல்லாம் யோசிக்கக் கூடியவை.

நடிகர்களின் நடிப்பு உள்பட பின்னணி இசை, டப்பிங், சவுண்ட் எஃபெக்ட் போன்ற விசயங்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். கூடுமான வரை இடைவேளைக்குப் பிறகான காட்சிகள் படத்தைக் காப்பாற்றி கரை சேர்த்து விடுகிறது. சதுரங்கவேட்டை படம் எல்லோருக்கும் பிடித்திருந்தது. சில பல லாஜிக் லூப்ஸ்கள் இருந்தாலும் ஓங்கிச் சொன்ன ஒரு கருத்துக்காக இந்த மோசடியும் உங்களை கவரும்.

Related posts

Leave a Comment