மகாமுனி- விமர்சனம்

ஒரு துறவி மனநிலை கொண்டவனின் வாழ்வும், கூலிப்படை மனநிலை கொண்ட மற்றொருவனின் வாழ்வும் ஒரு நேர்க்கோட்டில் சந்திக்கும் போது நிறைய சுவாரசியமான நிகழ்வுகள் அரங்கேறும் தானே! அதுதான் மகாமுனி.

இயக்குநர் சாந்தகுமாரின் எட்டாண்டு உழைப்பு படத்தின் மேக்கிங்கில் அற்புதமாக தெரிகிறது. மேலும் படத்தின் கூர்மையான வசனங்கள் அவரின் பயண அனுபவத்தை பறை சாற்றுகிறது.

ஏ மச்சான்… என இழுத்து ஒரே ஸ்லாங்கில் பேசி நம்மை கடுப்படித்து வந்த ஆர்யாவா இது? அடடா என்னாவொரு நடிப்பு!! மகா+முனி இரண்டு கேரக்டர்களிலும் துல்லியமான நடிப்பை வழங்கி இருக்கிறார். அவருக்கு சற்றும் சளைக்காத ஹீரோயின்கள் இந்துஜா மற்றும் மகிமா நம்பியார். வெளுத்து கட்டி இருக்கிறார்கள். இளவரசு, அவரது மச்சான் கேரக்டர் என படத்தில் வரும் எல்லாக் கேரக்டர்களும் வெகுவாக ஈர்க்கிறார்கள்.

தமனின் மெல்லிய மற்றும் அதிரடியான இசையும் அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவும் மகாமுனிக்கு கிடைத்த பெருவரம். இடைவேளை வரை விழும் முடிச்சுகளுக்கு எல்லாம் பின்பாதியில் விடை கிடைப்பது போன்ற திரைக்கதைகளைப் நாம் நிறைய பார்த்திருப்போம். ஆனால் இப்படத்தின் திரைக்கதை தன்னை மேலில் வைத்துக்கொண்டு நம்மை வழிநடத்தவில்லை. நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது. இந்த இடத்தில் தான் மகாமுனி கெத்து காட்டுகிறது. மெளனகுருவிற்கு பின் மெளனவிரதம் இருந்து இயக்குநர் சாந்தகுமார் பெரிதாக சாதித்து இருக்கிறார். அவரின் மெளனபலன் ஆர்யாவிற்கும் பலம் சேர்த்திருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி. மகாமுனி தரமான படம்

Related posts

Leave a Comment