நம்ம நாட்டு எம்.ஐ 17 ரக சிறிய ஹெலிகாப்டரை, ஜம்முவில் சுட்டு வீழ்த்தியது நம்ம ஆளுங்கதான்!

கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ 17 ரக சிறிய ஹெலி காப்டரை, ஜம்முவில் சுட்டு வீழ்த்தியது யார் என்ற அதிர்ச்சித் தகவல் ஏழு மாதங்களுக்கு பின் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்காம் பகுதியில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதியன்று இந்திய விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ 17 ரக சிறிய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தபட்டது. அதே மாதம் 14-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட புலவாமா  தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்திய மற்றும் பாகிஸ்தான் படைகளிடையே தீவிரமான வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து வந்த சூழ்நிலையில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்போது  அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணையும் நடை பெற்று வந்தது. இந்நிலையில் எம்.ஐ 17 ரக சிறிய ஹெலிகாப்டரை, ஜம்முவில் சுட்டு வீழ்த்தியது யார் என்ற அதிர்ச்சித் தகவல் ஏழு மாதங்களுக்கு பின் வெளியாகியுள்ளது.

இந்திய விமானப் படையின் வருடாந்திர பத்திரிகையாளர் சந்திப்பு தில்லியில் வெள்ளியன்று  நடைபெற்றது.இதில் விமானப்படை தலைமைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் ஆர்.கே.சிங் பதவுரியா கலந்து கொண்டு பேசினார்  அப்போது இந்த சம்பவம் குறித்து அவர் கூறியதாவது:

இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான, தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை ஒன்றின் மூலமாகத்தான் எம்.ஐ 17 ரக சிறிய ஹெலிகாப்டர் ஜம்முவில்  தாக்கி வீழ்த்தப்பட்டுள்ளது. இது நாம் செய்த மிகப்பெரிய தவறாகும். இதுதொடர்பாக ராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இரண்டு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது நம்முடைய மிகப்பெரிய தவறு என்பதை நாம் ஒப்புக் கொள்ளும் அதே தருணத்தில், எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment