‘ஹே மணி கம் டுடே Go டுமாரோ’ – படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

சோஷியல் மீடியாவின் யூ ட்யூப் சேனல் மூலம் எக்கச்சக்கமான ரசிகர்களின் தனி அபிமானத்தைப் பெற்றவர்கள் கோபி – சுதாகர். இந்த இரட்டையர்கள் தங்களது தயாரிப்பு நிறுவனத்திற்கு “பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ்” எனப் பெயரிட்டு, தங்கள் தளத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் ஆகியோரைக் கிண்டல் செய்து வீடியோக்களை உருவாக்கி ரிலீஸ் பண்ணுவதும் அது உடனடியாக ட்ரெண்டிங்காகி விடுவதும் வாடிக்கை’. அண்மையில்  கூட நித்தியானந்தா, வெங்காய விலை ஆகியவைப் பற்றி இவர்கள் வெளியிட்ட வீடியோக்கள் கூட வழக்கம் போல் ட்ரெண்ட்டானது தனிக் கதை.

இந்த ஆன்லைன் அல்ப்பறை  கோஷ்டி சில மாதங்களுக்கு முன்பு, யூ டியூப் சேனல் போரடிக்குது.. அதனால் வெள்ளித் திரையில் முழு நீள சினிமா எடுக்க தயாராகி விட்டோம் என்று அறிவித்து அதுக்கு நிறைய துட்டு வேணும்.. அது எங்ககிட்டே இல்லை என்பதால் கிரவுட் ஃபண்டிங் முறைப் படி படம் எடுக்க முடிவு செஞ்சிருக்கோம் என்றார்கள். அதை ஒட்டி தங்கள் ஐடியா-வையும் ஓப்பனாக ஒரு (யூ டியூப்) எபிசோட்டில் சொல்லி புத்தம் புதியப் படத்தை உருவாக்க 8 கோடி ரூபாய் தேவையென்றும், அப்பணம் முழுமையாக வந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் அறிவித் தார்கள். மேலும் இந்தப் படம் எடுக்க பணம் அளித்தவர்களுக்கென்று பிரத்யேக மொபைல் செயலி ஒன்றையும் உருவாக்கி இருப்பதாகவும் அதில் படத்துக்கு ஆகும் செலவு என்ன என்பது உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறினார்கள். அத்துடன் படத்தை பற்றிய முக்கிய தகவல்களும், இப்படம் உருவாகும் ஒவ்வொரு கட்டத்தை பற்றிய தகவலும் அதே செயலி மூலம் உடனுக்குடன் சொல்லப்படும் எனவும் தெரிவித்திருந்தார்கள்.

அப்படி கேட்டு கொண்ட சில மாதங்களில், இந்த பரிதாபங்கள் குழுவே எதிர்பாராத அளவான 61/2 கோடி ரூபாய் வசூலாகி ஆசியாவின் பெரிய கிரவுட் ஃபண்டிங் படமாக இவர்கள் உருவாக்கும் படம் என்ற பெருமையை  அடைய உள்ளது. தேவையான ஃபண்ட் வந்து விட்டதால்  தங்கள் படத்தின் தலைப்பு உள்ளிட்ட விவரங்களை அதிகாரப் பூர்வமாக அறிவித்து கோலிவிட்டை அதிர வைத்துள்ளனர்.

அதுவும் தங்கள் புது படத்துக்கு ‘ஹே மணி கம் டுடே Go டுமாரோ’ என்ற பெயர் வைத்திருப்பதாக நேற்று சென்னையில் நடந்த அறிமுக விழாவில் அறிவித்தார்கள்.  அந்த அறிவிப்பைத் தொடர்ந்து நடந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் அதிக பணம் போட்ட 100 தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவர், கோபி, சுதாகருக்கு வாழ்த்து சொல்லி விட்டு, பின்னர், ஜாம்பி படம் மாதிரி தயவு செய்து படம் பண்ணாதீங்க, தியேட்டரில் பார்க்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு படு மொக்கை என ஓபன்னாக நோஸ் கட் செய்தார். இலியானா படத்தின் நாயகி நயன்தாராவா, தமன்னாவா என கேட்ட ஒரு தயாரிப்பாளருக்கு இலியானா டி க்ரூஸிடம் பேசிகிட்டு இருக்கோம் என பரிதாபங்கள் கோபி தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் கவுன்ட்டர் கொடுத்தார்.

இந்நிகழ்ச்சியில்ல் இயக்குநர் கே.பாக்யராஜ், ராதாரவி மற்றும் யூ-டியூப் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.

Related posts

Leave a Comment