நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? ரஜினி புதுக் கேள்வியும், பதில்களும்!

இதோ அதோ என்று தன் அரசியல் வாழ்க்கை குறித்து பேசிக் கொண்டிருந்த ரஜினி நேற்று அதிரடியாக இனி தன்னை வருங்கால முதல்வர் என அழைக்க வேண்டாம் என, தன் ரசிகர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த வாரம் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், தன் அரசியல் கண்ணோட்டம் குறித்தும் இன்று (மார்ச் 12) சென்னை, லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து ரஜினிகாந்த் பேசினார்.

அப்போது, தமிழக அரசியலில் மாற்றம் நிகழ்வதற்கு தான் 3 முக்கிய திட்டங்கள் வைத்துள்ளதாகக் கூறினார். கட்சியில் குறைவான பதவிகள், 50 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கு வாய்ப்பு, கட்சித் தலைமை வேறு, ஆட்சித் தலைமை வேறு ஆகிய 3 திட்டங்களை வைத்திருப்பதாக ரஜினி கூறினார். தான் கட்சித் தலைவராக இருப்பேன் எனவும், முதல்வராக இருக்க மாட்டேன் எனவும் ரஜினி கூறினார். மேலும், மக்களிடம் புரட்சி ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அப்போது, “முதல்வர், முதல்வர் என்று என்னை சொல்லக் கூடாது. அதை விடுத்து, மூலை முடுக்கெல்லாம் மக்களிடம் புரட்சியை ஏற்படுத்த, இந்த 3 திட்டங்களைப் போய் சொல்லுங்கள். ‘வருங்கால சி.எம்’, ‘வருங்கால முதல்வர்’ என சொல்வதையெல்லாம் நிறுத்துங்கள். நான் அரசியலுக்கு வருவதை மக்களிடம் சொல்லுங்கள், அந்த எழுச்சி தெரியட்டும், அப்போது நான் அரசியலுக்கு வருவேன்” என ரஜினி தெரிவித்தார்.

Related posts

Leave a Comment