மாஸ்டர்’ சினிமா விமர்சனம்

‘மாஸ்டர்’ சினிமா விமர்சனம். வெள்ளித் திரைக்கு வந்துசேர, கடந்த சித்திரையிலிருந்து காத்திருந்த ‘மாஸ்டர்.’ கொரோனா மெர்சலுக்குபின், தளபதி ரசிகர்களுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வைத்திருக்கும் உற்சாகப் ‘பொங்கல்!’ தனது அநியாய அடாவடி கொலைபாதகச் செயல்களுக்கு, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் கைதியாக இருக்கிற சிறுவர்களை, இளைஞர்களைப் பயன்படுத்துகிறார் விஜய் சேதுபதி. அந்த பள்ளிக்கு வாத்தியாராக வருகிற விஜய் போதைக்கு அடிமையாகிக் கிடக்கும் அந்த சிறுவர்களுக்கு விழிப்புணர்வூட்டி திருத்தி, விஜய் சேதுபதிக்கு ரிவிட் அடித்து RIPபன் கட்டுகிறார். வழக்கமான ஹீரோயிஸக் கதை லோகேஷ் கனகராஜின் திரைக்கதை, விஜய் – விஜய் சேதுபதி என்ற இரண்டு பெரிய ஹீரோக்களின் அதகள அட்டகாசத்தால் வேகமெடுக்கிறது. தளபதி விஜய் முகத்தில் ஸ்டூடண்டு கலை, பார்ப்பது புரொபசர் வேலை என ‘தெறி’க்க விடுகிறார். அசத்தல் என்ட்ரீ, ஆக்ரோஷ சண்டை என அவர் வருகிற காட்சிகளில் விசிலால் அதிர்கிறது…

Read More