சர்வதேச மணல் சிற்ப போட்டியில் இந்தியாவை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் சாம்பியன்!

இந்தியாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு அமெரிக்காவில் வழங்கப்படும் ‘மக்களின் தேர்வு விருது’ வழங்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக். இவர் நாட்டின் முக்கிய நிகழ்வுகளை மணல் சிற்பமாக உருவாக்கி, மக்களின் மனதில் இடம் பிடித்தவர். அமெரிக்காவின் பாஸ்டனில் ரிவெரி கடற்கரையில் சர்வதேச மணல் சிற்ப போட்டி நடைபெற்றது. இதில், உலகம் முழுவதிலும் இருந்து தலைச் சிறந்த மணல் சிற்ப கலைஞர்கள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து சுதர்சன் மட்டுமே பங்கேற்றார். இந்த போட்டியில், ‘பிளாஸ்டிக் மாசுபாட்டில் இருந்து நமது கடலை காப்பாற்றுங்கள்’ என்ற தலைப்பிலான மணல் சிற்பத்தை சுதர்சன் உருவாக்கினார். கடலில் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் மாசு, கடல் உணவுகள் மூலமாக மனிதனையும் பாதிக்கிறது என்பதை விளக்கும் வகையில் இந்த சிற்பம் அமைந்திருந்தது. இந்த சிற்பம் அமெரிக்காவின், ‘மக்களின்…

Read More

வீட்டுக்கு வீடு பசுமைத்தோட்டம்,..படகுகளில் மாட்டுக் கொட்டகை!- அசத்தும் நெதர்லாந்து!

ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்து மக்கள் நெருக்கடி நிறைந்த நாடு. 41,543 கிமீ பரப்பளவு கொண்ட இந்த சிறிய‌ நாட்டில் 17,308,133க்கும் அதிகமான மக்கள் உள்ளனர். மக்கள் தொகை 2050ல் 9.6 பில்லியனை தொடும் என எதிர்பார்க்கிறார்கள். எனினும், ம‌க்கள் தொகை அதிகளவை கொண்ட சிறிய‌ நாடான நெதர்லாந்து விவசாய உணவு உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. உலக அளவில் காய்கறி ஏற்றுமதியில் முதல் நான்கு இடங்களில் ஒன்றாக திகழ்கிறது. வீட்டுக்கு வீடு விவசாய குடில்களை அமைத்துள்ளனர். குறிப்பாக பசுமை குடில்கள் அதிகளவில் உள்ள நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்றாகும் உலகின் தக்காளி உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் நாடும் நெதர்லாந்துதான். இந்நாட்டில் மனிதர்கள் வசிக்கும் வீடுகளைவிடப் பசுமை வீடுகளின் எண்ணிக்கை அதிகம்.2017ல் 92 பில்லியன் டாலர் விவசாயம் பொருள்களை ஏற்றுமதி செய்து அமெரிக்காவுக்கு சவால் விட்டது.…

Read More