மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது சாவில் மர்மம் இல்லை. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த எந்த அறிக்கையிலும் நான் கையெழுத்திடவில்லை. இன்றைக்கு அமைச்சர்கள் தங்களை ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் எங்களிடம் இதுகுறித்து அப்போது கேட்கவில்லை. அதேபோல் டி.டி.வி. தினகரன் ஒருமுறைகூட மருத்துவமனையில் ஜெயலலிதாவை சந்திக்க வரவில்லை. கவர்னர் வித்யாசாகர் ராவ் வந்தபோதும், அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி வந்தபோதும் ஜெயலலிதாவுக்கு சுய நினைவு இல்லை. படிப்படியாக அவர் குணம் அடைந்தபோது டாக்டர் பீலேவுக்கு தனது கட்டை விரலை உயர்த்தி காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தனக்கு பிறகு சசிகலா கட்சி பொறுப்புக்கு வரவேண்டும் என்று ஜெயலலிதா ஒருபோதும் நினைத்தது இல்லை. அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க நான் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டேன். ஆனால் அதற்கு…
Read MoreDay: September 26, 2017
தினகரன் வெளியிட்ட வீடியோ உண்மையாக இருக்க வாய்ப்பில்லை – அன்புமணி ராமதாஸ்
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ஜெயலலிதா சிகிச்சை பெறும் போது அவரை சசிகலா வீடியோ எடுத்ததாகவும், அப்போது ஜெயலலிதா உடல் மெலிந்து இருந்ததால் தான் அந்த வீடியோவை சசிகலா வெளியிடவில்லை என்றும் கூறியிருக்கிறார். மருத்துவ அடிப்படையில் பார்த்தால் தினகரனின் இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. ஒருவேளை தினகரன் கூறுவது போன்று, சசிகலா வீடியோ எடுக்கும்போது ஜெயலலிதா இளைத்து காணப்பட்டிருந்தால் இறக்கும் போதும் அப்படியே தான் இருந்திருக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் அவரது உடல் பருத்திருப்பதற்கு சாத்தியமில்லை. அவ்வாறு இருக்கும் போது தினகரன் கூறியிருப்பது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து அ.தி.மு.க. அணிகளின் நிர்வாகிகள் கூறும் ஒவ்வொரு விளக்கத்திற்கு பின்னணியிலும் ஓர் அரசியல் கணக்கு உள்ளது. இவை எதுவுமே ஜெயலலிதா…
Read More