அமெரிக்க பாதுகாப்பு செயலர் இந்தியா வருகை: பிரதமருடன் இன்று சந்திப்பு

அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜிம் மேட்டீஸ் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். தலைநகர் டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கும் அவரை இந்திய உயரதிகாரிகள் வரவேற்கின்றனர். பின்னர், பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். தெற்காசியாவில் அமெரிக்காவின் உற்ற நட்பு நாடாக இந்தியா உள்ளதாகவும், தீவிரவாதம் தொடர்பாக அமெரிக்கா எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் இந்தியா ஆதரவு அளித்து வருவதாகவும் அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதத்தை வேரோடு ஒழிப்பதற்காக இந்தியா சிறந்த பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த ஆப்கானிஸ்தான் கொள்கையை இந்தியா கருத்து வேறுபாடின்றி ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Read More

மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்

தேசிய மனித உரிமை ஆணையம் இரு மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் மற்றும் இவற்றின் அருகாமையில் உள்ள பகுதிகளில் சிறுமிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்முறை குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்தும் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு புகார் வந்து உள்ளன. மேற்கண்ட இரு மாவட்டங்கள் மற்றும் சுற்றுப்பகுதிகளில், வேண்டுதலின்படி சிறுமிகளை வலுக்கட்டாயமாக மாத்தம்மன் கோவிலுக்கு நேர்ந்து விடுவதாக கூறப்படுகிறது. இது தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே பல ஆண்டுகளாக இருந்து வந்த தேவதாசி முறையின் வேறொரு வடிவம் ஆகும். இது குறித்து ஆணையத்துக்கு பல்வேறு புகார்கள் வந்து இருக்கின்றன. பத்திரிகைகளிலும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த மாவட்டங்களில் சிறுமிகள் மணமகள்களை போல் அலங்கரிக்கப்பட்டு இதற்கான சடங்கில் ஈடுபடுத்தப்படுவதாகவும், சடங்கு மற்றும் பூஜை முடிவடைந்த…

Read More