தங்கம் விலை சவரனுக்கு ரூ.392 உயர்வு

தங்கம் விலை கடந்த மாதம் (ஆகஸ்டு) பெரும்பாலான நாட்களும், இம்மாதத்தில் 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையிலும் பவுன் ரூ.23 ஆயிரத்தை தாண்டி விற்றது. அதன் பின்னர் விலை படிபடியாக குறைந்து பவுன் ரூ.23 ஆயிரத்துக்கு விற்பனையாகி வந்தது. நேற்று ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 656 ஆக இருந்தது. அன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.392 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 48 ஆக உள்ளது. இதன்மூலம் தங்கம் விலை 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் பவுன் ரூ.23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அது ஏழை-எளிய நடுத்தர மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கிராமுக்கு ரூ.49 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,881-க்கு விற்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைவு மற்றும் சர்வதேச சந்தை நிலவரம் காரணமாக தங்கம் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு…

Read More

கேரள முதல்-மந்திரியிடம் சூரியஒளி தகடு ஊழல் குறித்த விசாரணை அறிக்கை தாக்கல்

கேரளாவில் முந்தைய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியின்போது, சூரியஒளி தகடுகள் வாங்குவதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகவும் அப்போதைய முதல்-மந்திரி உம்மன் சாண்டிக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இதுபற்றி விசாரிக்க 2013-ம் ஆண்டு கேரள அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையிலான விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தது. இந்த கமிஷன் முன்பாக உம்மன் சாண்டி பல்வேறு நாட்களில் மொத்தம் 53 மணிநேரம் வாக்குமூலம் அளித்தார். இதனால் இந்த வழக்கு பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சிவராஜன் நேற்று கமிஷனின் அறிக்கையை முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் அளித்தார். இதுபற்றி நீதிபதி சிவராஜன் நிருபர்களிடம் கூறுகையில், “முதல்-மந்திரியை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து, விசாரணையின் அறிக்கையை நான்கு தொகுதிகளாக கொடுத்திருக்கிறேன்” என்றார். அதேநேரம் அறிக்கையில் என்ன கூறப்பட்டு உள்ளது என்பது…

Read More