வதந்திகளை நம்ப வேண்டாம் – தி.மு.க.

தமிழகத்தில் அனைத்து காவல் சிறப்பு படைகளும் இன்றும், நாளையும் தயார் நிலையில் இருக்குமாறு போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியானது. 19 மாவட்டங்களில் இன்றும், நாளையும் நகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் மற்றும் அனைத்து சிறப்பு காவல் படைகளும் தயார் நிலையில் இருக்குமாறும், விடுப்பில் சென்றுள்ள காவலர்கள் உடனடியாக முகாம்களுக்கு திரும்புமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்தும் வதந்திகள் பரவத் தொடங்கின. இதுபற்றி விளக்கம் அளித்த கனிமொழி எம்.பி., “தி.மு.க. தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார். அவரது உடல்நலம் குறித்து பரவும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்” என்றார். இதற்கிடையே, பாதுகாப்பு பணிகளுக்காக அனுப்பப்பட்ட காவலர்கள் முகாமிற்கு திரும்புவது வழக்கமான ஒன்றுதான் என்றும், டிஜிபி உத்தரவு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் காவல்துறை உயர்…

Read More

அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு இந்திய டாக்டர் தம்பதியர் ரூ.1,300 கோடி நன்கொடை

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள டாம்பா துறைமுக நகரில், ‘பிரிடம் ஹெல்த்’ என்ற பெயரில் சுகாதார நிறுவனம் நடத்தி வருபவர் டாக்டர் கிரண் பட்டேல். இந்திய வம்சாவளியான இவர் இதய நோய் மருத்துவ நிபுணராகவும் தொழில் செய்துள்ளார். இவரது மனைவி, பல்லவி பட்டேல். இவர் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர். இவர்கள் தாங்கள் நடத்தி வருகிற பட்டேல் குடும்ப அறக்கட்டளையின் சார்பில், மியாமி அருகே அமைந்துள்ள நோவா தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,300 கோடி) நன்கொடை அளித்துள்ளனர். இதில் 50 மில்லியன் டாலரை ரொக்கமாகவும், மீதி 150 மில்லியன் டாலரை 3¼ லட்சம் சதுர அடி நிலமாகவும் வழங்கி உள்ளனர். இந்த நன்கொடையை பயன்படுத்தி அந்த பல்கலைக்கழகம், ஒரு பிராந்திய வளாகத்தை தொடங்கும். அதன்மூலம் இந்தியாவில் இருந்து வருகிற டாக்டர்களுக்கு ஓராண்டு காலம்…

Read More