சர்வதேச மணல் சிற்ப போட்டியில் இந்தியாவை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் சாம்பியன்!

இந்தியாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு அமெரிக்காவில் வழங்கப்படும் ‘மக்களின் தேர்வு விருது’ வழங்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக். இவர் நாட்டின் முக்கிய நிகழ்வுகளை மணல் சிற்பமாக உருவாக்கி, மக்களின் மனதில் இடம் பிடித்தவர். அமெரிக்காவின் பாஸ்டனில் ரிவெரி கடற்கரையில் சர்வதேச மணல் சிற்ப போட்டி நடைபெற்றது. இதில், உலகம் முழுவதிலும் இருந்து தலைச் சிறந்த மணல் சிற்ப கலைஞர்கள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து சுதர்சன் மட்டுமே பங்கேற்றார். இந்த போட்டியில், ‘பிளாஸ்டிக் மாசுபாட்டில் இருந்து நமது கடலை காப்பாற்றுங்கள்’ என்ற தலைப்பிலான மணல் சிற்பத்தை சுதர்சன் உருவாக்கினார். கடலில் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் மாசு, கடல் உணவுகள் மூலமாக மனிதனையும் பாதிக்கிறது என்பதை விளக்கும் வகையில் இந்த சிற்பம் அமைந்திருந்தது. இந்த சிற்பம் அமெரிக்காவின், ‘மக்களின்…

Read More

ராமதாஸ் முத்துவிழாவில் காடுவெட்டி குரு மகன்!

பாமக நிறுவனர் ராமதாஸின் முத்துவிழாவில் காடுவெட்டி குரு மகன் கனலரசன் தனது தாயாருடன் கலந்துகொண்டார். வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மறைவுக்குப் பிறகு தைலாபுரம் தோட்டத்திற்கும் குருவின் உறவினர்களுக்கும் இடையே வெளிப்படையாக மோதல் வெடித்தது. பாமக தலைமையின் எதிர்ப்பையும் மீறி குருவின் மகள் விருதாம்பிகை, தனது அத்தை மகன் மனோஜை கடந்த நவம்பர் 28ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு குருவின் மகன் கனலரசன் மற்றும் குருவின் சகோதரிகள், பாமக தலைமை மீது கடும் குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். கடந்த டிசம்பர் மாதம் காடுவெட்டியில் நடைபெற்ற குரு மணிமண்டப அடிக்கல் நாட்டு விழாவில் குருவின் குடும்பத்திலிருந்து அவரது மனைவி சொர்ணலதா தவிர யாரும் கலந்து கொள்ள வில்லை. மக்களவைத் தேர்தல் சமயத்திலும் கூட பாமகவுக்கு எதிரான நிலைப்பாட்டையே குரு குடும்பத்தினர் எடுத்திருந்தனர். இந்த நிலையில் பாமக நிறுவனர்…

Read More