ஹீரோ படம் வெற்றி அடைந்தால் இதன் 2 & 3ம் பாகங்களில் நடிக்க ஆவல் – சிவகார்த்திகேயன்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் நடித்த மிஸ்டர் லோக்கல் படம் கைவிட்ட நிலையில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு பாண்டிராஜ் இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை பெரிய வெற்றி படமாக அமைந்ததில் உற்சாகமாகிவிட்டார். அடுத்தடுத்து படங்களுக்கு தயாராகிக்கொண்டிருப்பதுடன் முகத்தில் மாஸ்க் அணிந்து ஹாலிவுட் ஹீரோ பாணியில் ஹீரோ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை பி. எஸ். மித்ரன் இயக்குகிறார். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. டிரெய்லரை வெளியிட எந்த விஐபி வந்தி ருக்கிறார் என்ற ரசிகர்கள் ஆவலாக பார்த்துக்கொண்டிருந்த நிலையில் ரசிகரே ஒருவர் டிரெய்லரை வெளியிட்டது ஹைலைட்டாக அமைந்தது. ஹீரோ படத்துக்காக நடந்த பிளே ஹீரோ கான்டஸ்ட் என்ற போட்டியில் வெற்றி பெற்ற ஈரோட்டை சேரந்த கோகுல்தான் அந்த ரசிகர். இதில் பேசிய சிவகார்த்திகேயன், ‘நான் கல்லூரிநாட்களில் யுவன் பாடல்கள் கேட்காத நாட்களே கிடையாது. அவர் மிகச்சிறந்த இசை அமைப்பாளர் அவரை யாரும்…

Read More

இந்திய திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக புதுசாக வரப் போகும் ‘’பஞ்சராக்ஷ்ரம்”

இயற்கைக்கு அப்பாற்பட்ட பல த்ரில்லர் படங்கள் தயாரிக்கப்பட்டு அவ்வப்பொழுது வெளியிடப் படுகின்றது. ஆனால், அவை வேறுபட்ட திரைப்படங்களாக இல்லாமல் ஒரே மாதிரியாக வழக்க மான திகில் படங்களாகவே இருக்கிறது. உண்மையில், ‘சூப்பர்நேச்சுரல்’ மற்றும் ‘ஹாரர்’ வகைக்கு இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் சிறந்த எடுத்துக்காட்டு படமாக ‘பஞ்சராக்ஷ்ரம்’ சூப்பர்நேச்சுரல் – சாகசம் நிறைந்த சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும். பாரடாக்ஸ் புரொடக்ஷன்ஸிற்காக வைரமுத்து தயாரிக்கும் இப்படத்தை பாலாஜி வைரமுத்து இயக்குகிறார். ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’, ‘சந்திரமௌலி’  மற்றும் ‘பொது நலம் கருதி’ போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக தனக்கு ஒரு நல்ல வரவேற்பை உருவாக்கிய நடிகர் சந்தோஷ் பிரதாப், இப்படத்தில் நாயகனாக நடிக்க, கோகுல் (சென்னை டூ சிங்கப்பூர், ஜாக் அண்டு ஜில் புகழ்), அஸ்வின் ஜெரோம் (யானும் தீயவன், நட்பே துணை…

Read More