ஊரக உள்ளாட்சிக்கு பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் முதல் கட்ட தேர்தல்…!

தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. 4,700 ஊராட்சி தலைவர் பதவி உள்பட 45,336 பதவிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.இதற்காக அந்தந்த மாவட்டங்களில் வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 27ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களிலும், 2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடக்கிறது. 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 2546 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 4700 ஊராட்சி தலைவர் பதவி, 37830 ஊராட்சி உறுப்பினர் பதவி…

Read More