” தர்பார் “வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக  திரைக்கு வருகிறது! .

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்  இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம்  “தர்பார்” .  2.0 எனும் பிரமாண்ட படத்தின் வெற்றிக்கு பின் ரஜினிகாந்துடன் இரண்டாவது முறையாக இணைந்து இப்படத்தினை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸ்டார்  நயன்தாரா நடிக்கிறார் . பிரபல பாலிவுட் நடிகர் சுனில்ஷெட்டி வில்லனாகவும் , முக்கிய கதாபாத்திரங்களில் நிவேதா தாமஸ் , யோகிபாபு , தம்பி ராமய்யா , ஸ்ரீமன் , பிரதிக் பாபர் , ஜட்டின் ஷர்னா  , நவாப் ஷா , தலிப் தஹில் மற்றும் பலர் நடிக்கிறார்கள் . அனிரூத் இசையில் இப்படத்திலிருந்து சும்மா கிழி எனும் பாடல் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மீதமுள்ள பாடல்களுக்கும் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது . ஸ்ரீகர் பிரசாத்   படத்தொகுப்பு  செய்ய  சந்தோஷ் சிவன்…

Read More

பட்டைய கிளப்பும் “பட்டாஸ்” படத்தின் “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல்!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “பட்டாஸ்” படம் அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல்கள் மூலம் கொண்டாட்ட அதிர்வலைகளை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. முதல் சிங்கிளான “ஜில் ப்ரோ” மற்றும் இரண்டாவதாக வெளியான “மொரட்டு தமிழன்டா” இரண்டும் பெரு வெற்றி பெற்ற நிலையில் இப்போது மூன்றாவதாக அனிருத் குரலில் வெளியாகியிருக்கும் “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல்  ஒரே இரவில்  ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களை கவர்ந்திழுத்து பெரு வெற்றியடைந்துள்ளது.  “பட்டாஸ்” படத்தின் மூன்று பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறியது இசையமைப்பாளர்களான விவேக், மெர்வின் குழுவை இன்பத்தின் உச்சிக்கு அழைத்து சென்றிருக்கிறது. மேலும் அவர்களது நெருங்கிய நண்பரான அனிருத்துடன் இணைந்து இப்பாடல் உருவாகியிருப்பது, அவர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அனிருத்துடன்  இணைந்து பணியாற்றியது குறித்து இசையமைப்பாளர் விவேக் கூறியதாவது… அனிருத் எப்போதும் எங்களுக்கு நண்பருக்கு மேலானவர். அவர் எங்களின் சகோதரர்…

Read More