தமிழில் இன்னொரு பேய்ப்படம். முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிப்பில் வந்துள்ளது ‘காதம்பரி’யின் தனித்துவம். மழை பெய்து கொண்டிருக்கிறது. இரண்டு ஆண்கள், மூன்று பெண்கள் என 5 பேர் காரில் பயணிக்கிறார்கள். ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியையொட்டி அவர்களின் கார் விபத்துக்குள்ளாகிறது. சற்று தூரத்தில் காட்டுக்குள் பரந்து விரிந்த வீடு ஒன்று தென்பட, மழைக்கு ஒதுங்குவதற்காக அந்த வீட்டுக்குள் செல்கிறார்கள். சென்றவர்களில் ஒவ்வொருவராக பலியாகிறார்கள். ஏன்? எதற்காக? அடுத்தடுத்து நகர்கிற காட்சிகள், பேய்ப்படங்களில் இதுவரை பார்க்காத வித்தியாசமான அனுபவத்தை தருகின்றன. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ளது படத்தின் தனித்துவம் என்றால் படத்தில் மொத்தமே 8 கதாபாத்திரங்கள் மட்டுமே என்பது சிறப்பு! விபத்தில் அடிபட்ட காதலியின் மீது காட்டும் பரிதாபம், உடன் வந்தவர்கள் பேயிடம் சிக்கி உயிருக்குப் போராடும்போது இயலாமையில் தவிப்பது என படத்தை இயக்கியதோடு கதாநாயகனாகவும் நடித்திருக்கிற அருள்…
Read MoreDay: March 19, 2021
ஜெயக்குமாருக்கு தான் எப்பவுமே ஓட்டு போடுவோம்…என்ன காரணம்? ராயபுரம் மக்களிடம் எடுத்த சர்வேயில் கிடைத்த ரகசியம் இதோ
தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கும் நேரம். கொளுத்தும் வெயில் அனல் பறக்கும் பிரச்சாரம் என தமிழகம் முழுக்க தேர்தல் களைகட்டியிருக்கும் நேரத்தில் ராயபுரம் தொகுதியின் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக சென்றோம் . கொளுத்தும் வெயிலில் வீதி வீதியாக நடந்தும், தொண்டர்கள் புடைசூழ சைக்கிளில் வலம் வந்தும் அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தோம். ஏழாவது முறையாக ஒரே தொகுதியில் ஜெயக்குமார் போட்டியிடுகிறார் என்பதைக் கேள்விப்பட்டோம். கடந்த 6 முறை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றிருக்கிறார். இப்போது ஏழாவது முறையாக அவரே போட்டியிடுகிறார் எப்படி சாத்தியம் என்பது குறித்து பொதுமக்களிடம் பேச ஆரம்பித்தோம். அப்போது அவர்கள் சொன்ன பதில் இதோ உங்கள் பார்வைக்கு… 68 வயதான தங்கம் என்ற பெண்மணியிடம் ஏன் ஜெயக்குமாருக்கு ஓட்டு…
Read More