இயக்குனர் ஷங்கரை சுற்றி தொடரும் வழக்கு – சர்ச்சை

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்தே பல தடைகளைச் சந்தித்து வருகிறது. கொரானா பரவல், படப்பிடிப்பில் விபத்து, உயிரிழப்பு, காவல்துறை வழக்கு எனப் பல தடைகளைச் சந்தித்து இப்போது நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியான அறிவிப்பில், இயக்குநர் ஷங்கர் – நடிகர் ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் புதிய படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது என்று சொல்லப்பட்டிருந்தது. இதனால் இந்தியன் 2 படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் இயக்குநர் ஷங்கருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில், தங்கள் நிறுவனத்தின் தயாாரிப்பான ‘இந்தியன் -2’ படத்தை…

Read More

கர்னாடகாவில் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதித்தது அரசு

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரானாவின் பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் திரையரங்குகள்  மூடப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு அமுலில் இருந்ததுகொரானாவின் தாக்கம் குறைந்ததும், ஊரடங்குகள் தளர்த்தப்பட்டதின் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு அது 100 சதவிகித அனுமதியாக மாற்றப்பட்டது. தமிழ் படங்களுக்கு வியாபார ரீதியாகவும், பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பக்கபலமாக இருக்கும் மாநிலங்களில் கர்னாடகம் முக்கியமானது புதிய படங்கள் வெளியாகும்போது டிக்கட் கட்டணத்தை மாற்றியமைத்து கொள்ள அம்மாநில அரசு அனுமதிக்கிறது இந்த நிலையில் கொரானாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்கிற செய்தி பரவி வரும் சூழலில் கர்னாடக மாநிலத்தில்பெங்களூரு, மைசூரு, கலபுரகி, தட்சிண கன்னடா, உடுப்பி, பீதர் மற்றும் தர்வார் மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களில் 50…

Read More