‘மதில்’ சினிமா விமர்சனம்

உரிமைக்காக குரல் கொடுத்து, அது கிடைக்காமல் போகும்போது போராட்டத்தைக் கையிலெடுப்பவனுக்கு நேர்கிற கஷ்ட நஷ்டங்களை மையப்படுத்தி எக்கச்சக்க படங்கள் வந்தாயிற்று. அந்த வரிசையில் இன்னொரு படம்… படத்தின் நாயகன் எந்த உரிமைக்காக போராடுகிறான் என்பதுதான் ‘மதில்’ படத்தின் தனித்துவம். தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் தொடாத சப்ஜெக்ட்! இந்த படம் ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் நேரடியாக, ‘ஜி 5’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது. சிறுவயதிலிருந்தே சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற லட்சியத்துடன் கடுமையாக உழைத்து, பணம் சேர்த்து தனது 58-வது வயதில் தனது விருப்படி வீட்டைக் கட்டி முடிக்கிறார் படத்தின் ஹீரோவான கே.எஸ். ரவிக்குமார். புதுமனை புகுவிழா நடந்த சில நாட்களிலேயே அவர் வீட்டு சுவற்றில் அந்த பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரபலத்தின் படம் வரையப்பட்டு பிரசார வாசகங்கள் எழுதப்படுகிறது. அதைக் கண்டு…

Read More