அபாய கட்டத்தில் நடிகர் விவேக்

திடீர் மாரடைப்பால் இன்று காலை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நகைச்சுவை நடிகர் விவேக். தற்போது அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விவேக் நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டது பல தரப்பினரிடையேயும், சந்தேகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படவில்லை என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவேக் உடல் நிலை குறித்து மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தனர். மருத்துவர்கள் கூறுகையில் “இன்று காலை மருத்துவமனைக்கு விவேக் குடும்பத்தினர் சுயநினைவின்றி அவரை அழைத்து வந்தனர். உடனடியாக எமெர்ஜென்சி குழுவும், இருதயநோய் மருத்துவ குழுவும் அவசர…

Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா

தான் நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் தன்னை அழகுபடுத்திக்கொள்ளும் நடிகை ஐஸ்வர்யாராஜேஷ் தமிழ், தெலுங்குபடங்களில் நடித்து வரும் இவர்வத்திக்குச்சி’ படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள  “டிரைவர் ஜமுனா” படத்தில் நடிக்கவுள்ளார் இந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக,பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளரான  எஸ்.பி.செளத்ரி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில்  தயாரிக்கின்றார். இந்தப் படத்தின் கதையைக் கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், உடனடியாக இதில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதாக கூறினார் தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்திரி  ‘டிரைவர் ஜமுனா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.  கிரைம்  த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி  டிரைவராக நடிக்கிறார்படத்தின் ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய், சண்டைக் காட்சிகளை அனல் அரசு, எடிட்டராக ‘அசுரன்’ எடிட்டர் ஆர்.ராமர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இன்றைய…

Read More