இயக்குனர் முருகதாஸ் கனவு நிறைவேறுமா?

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனர், இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் கதை திருட்டு குற்றசாட்டுக்கு உள்ளாகும், தமிழ்சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் என மறைந்த இயக்குனர் பாலசந்தரால் பாராட்டப்பட்டவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் நட்சத்திர நடிகர்கள் கால்ஷீட்டுக்காக காத்துகொண்டிருக்கிறார் இல்லை இனி அப்படி ஒரு வாய்ப்பு A.R.முருகதாஷ்க்கு கிடைப்பது அரிதுஎன்கின்றனர் தமிழ் சினிமா வட்டாரத்தில்.ரஜினி நடித்த தர்பார் படம்தான்A.R.முருகதாஸ் கடைசியாக (2020 ஜனவரி) இயக்கிய படம் அதன்பின்,விஜய்யின் 65 ஆவது படத்தைஇயக்கஒப்பந்தமாகியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த படத்தை இயக்கும்  பொறுப்பிலிருந்து விலகினார்.அதைத் தொடர்ந்து அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.பல நாட்கள் பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு அனிமேஷன் படமொன்றை இயக்குவதுஎன்றுமுடிவெடுத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் என்கின்றனர் அவரது வட்டாரத்தில் இந்தப்படத்தில் முதன்மைப் பாத்திரம் ஏற்கவிருப்பது…

Read More

அப்துல்கலாம் வழிகாட்டலால் கலைதுறையில் இருந்து கல்வி துறைக்கு மாறிய நடிகர் தாமு

கே.பாலச்சந்தரின் வானமே எல்லை திரைப்படத்தின் மூலம் 1992ல் நடிகரானவர் தாமு. அதன்பின் இருபது ஆண்டுகள் முழுநேர நகைச்சுவை நடிகராக ஏராளமான படங்களில் நடித்தார். திடீரென அவரைத் திரைப்படங்களில் காணமுடியவில்லை. அதற்கு என்ன காரணம்? என்பதைப் பத்தாண்டுகளுக்குப் பின்னர் அவரே வெளிப்படுத்தியிருக்கிறார். திரைப்படங்களில் இருந்து விலகி கடந்த பத்து ஆண்டுகளாக, நடிகர் தாமு கல்விச்சேவைஆற்றிவருகிறார். இதுமக்களுக்குத் தெரியாமல் இருந்தாலும் அரசாங்கத்துக்கு அது தெரிந்திருக்கிறது. இதனால்,கல்வித்துறையில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக, தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் (CEGR National Council) சார்பில் “ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021” என்கிற தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது கிடைத்துள்ளது. ஏப்ரல் 19, அன்று, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக காணொளி மூலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வித்துறையில் நடிகர் தாமு செய்த பங்களிப்புக்காக, அவருக்கு ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புராஸ்கர்…

Read More