ரயில் – வடமாநிலத் தொழிலாளர் வாழ்வும் வலியும்.. ஆஹா ஓடிடி யில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல்

வடக்கன் பெயர், சென்சார் தடையால் மாற்றப்பட்டு, சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பரவலான கவனம் பெற்ற, திரைப்படம் ரயில். பெரு முதலாளிகள் சாதி, மதங்களைக் கடந்து, சுயநலத்துக்காக எப்போதும் கைக்கோர்த்துக்கொண்டு செயல்படுகிறார்கள். ஆனால். உழைக்கும் மக்கள் எப்போதும் தங்களுக்குள் பகைமை பாராட்டி, அடிப்படைவாதிகளால் அடித்துக்கொள்ளத் தூண்டப்படுகிறார்கள் என்ற கருத்தை மிகவும் அழுத்தமான திரைக்கதையில் ரயில் திரைப்படம் வெளியாகி இருந்தது. உழைக்கும் தமிழர்கள் குடிநோய்க்கு அடிமையான நிலையில், அவர்களின் வேலை வாய்ப்புகள் பரிக்கப்பட்டு, அந்த இடத்தில் வடநாட்டு கூலிகளை அனுமதிக்கும் தமிழ்நாட்டுச் சூழல் ஒருபக்கம் என்றால், அடையாள அரசியல்வாதிகளின் காட்டமான எதிர்வினை இன்னொரு பக்கம் என அனைத்தையும் கடந்து, ரயில் திரைப்படம், பொதுமக்களாலும் ஊடகங்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டது. மேலும், சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையம் ரயில் திரைப்படக் குழுவிற்கு பாராட்டு விழா நடத்தி வரவேற்றது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில்,…

Read More

டெட்பூல் & வால்வரின்’ திரைப்படத்தின் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் – ரூ. 3650 கோடி பெற்று சாதனை

‘டெட்பூல் & வால்வரின்’ திரைப்படத்தின் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் ரூ. 3650 கோடி பெற்று சாதனை படைத்துள்ளது! உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் ‘டெட்பூல் & வால்வரின்’ படத்தை திரையரங்குகளில் கொண்டாடி அதிரடி காட்டி வருகின்றனர். இதற்கு சான்று இந்தப் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல்தான். இந்த படம், அதன் தொடக்க வார இறுதியில் உலகெங்கிலும் ரூ. 3650 கோடிகள் வசூலித்து, 2024 ஆம் ஆண்டின் நம்பர் 1 ஓப்பனிங் திரைப்படமாக வரலாறு படைத்துள்ளது. இந்தியாவில் ‘டெட்பூல் 1’ (40.79 கோடி ஜிபிஓசி) மற்றும் ‘டெட்பூல் 2’ (69.94 கிஆர் ஜிபிஓசி) ஆகிய இரண்டின் வாழ்நாள் வசூலை, ‘டெட்பூல் & வால்வரின்’ திரைப்படத்தின் முதல் வார இறுதி வசூல் முறியடித்துள்ளது. அதாவது, ரூ. 83.28 கோடி வசூலித்துள்ளது. இது வரவிருக்கும் நாட்களில் இன்னும் அதிகமாகும் என்பதை எதிர்பார்க்கலாம்.…

Read More