பிரபல நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளார். “சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கின்றனர். குணா 369 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக-ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள். தயாரிப்பு நிறுவனம் “சுப்ரமண்யா” படத்தின் அசத்தலான ப்ரீ-லுக்கை வெளியிட்டு படத்தின் விளம்பர பணிகளைத் துவக்கியுள்ளது. இந்த போஸ்டர், திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட கற்பனை உலகத்தின், ஒரு கண்ணோட்டத்தை நமக்கு வழங்குகிறது. போஸ்டரில் கதாநாயகன் ஒரு தீப்பந்தத்தை பிடித்தபடி, ஒரு புதிரான சாம்ராஜ்யத்தின் நுழைவாயிலில் இருப்பதை காணலாம். போஸ்டரின் கலைவடிவமைப்பு பசுமையாகவும், சிக்கலான அமைப்புகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது…
Read MoreDay: September 3, 2024
வெளியீட்டிற்கு முன்னதாகவே சாதனைகள் படைக்கும் தளபதி விஜய்யின் “கோட்” திரைப்படம்!!
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. அமெரிக்காவில் புகழ்பெற்ற முன்னணி பட வெளியீட்டு நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வெளிநாடுகளில் இப்படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில் இப்படம் வெளியீட்டிற்கு முன்னதாக அட்வான்ஸ் புக்கிங் உட்பட, பல சாதனைகளை படைத்து வருகிறது. அமெரிக்காவின் முன்னணி பட வெளியீட்டு நிறுவனம் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட். தென்னிந்திய மொழியின் முன்னணி ஹீரோகளின் பிரம்மாண்ட திரைப்படங்கள் அனைத்தையும் இந்நிறுவனம் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகமெங்கும் வெளியிட்டு வருகிறது. இதுவரையிலும் 140 படங்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. முன்னதாக “மாஸ்டர், பீஸ்ட்” என தளபதி விஜய்யின் பிளாக்பஸ்டர் படங்களை அமெரிக்காவிலும், லியோ படத்தினை ஐரோப்பிவிலும் வெளியிட்டு, வெற்றிப்படங்களாக மாற்றிய இந்நிறுவனம் தற்போது, பெரும் எதிர்பார்ப்பில்…
Read More