‘வாழை’ படத்தில் எனது நடிப்பிற்கு வழங்கிய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி, நல்ல படங்களில் தொடர்ந்து நடிப்பேன்: தயாரிப்பாளர்-இயக்குநர்-நடிகர் ஜே எஸ் கே சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பல்வேறு தரப்புகளில் இருந்து பெரும் பாராட்டுகளை பெற்ற ‘வாழை’ திரைப்படத்தில் வியாபாரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் விநியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்று பல்வேறு பரிமாணங்களில் தொடர்ந்து ஜொலித்து வரும் ஜே எஸ் கே. இது குறித்து பேசிய அவர், “இந்த சிறந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கும், திரைப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர் திலீப் சுப்பராயன் மாஸ்டர் அவர்களுக்கும் ‘வாழை’ படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த திரைப்படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் தங்களது விமர்சனங்களில்…
Read MoreDay: September 4, 2024
எதிர்பார்ப்பை எகிற வைத்த மார்டின் படத்தின் “ஜீவன் நீயே”, பாடல் வெளியானது!!
இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள, “மார்டின்” படத்திலிருந்து, முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. “ஜீவன் நீயே”, எனும் இப்பாடல், மனதை துளைத்து இன்பம் பொங்கச் செய்வதுடன், கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் அசத்துகிறது. ஆக்ரா, ஜோத்பூர், காஷ்மீர் மற்றும் பாதாமி போன்ற இந்தியாவின் மிக மிக முக்கியமான இடங்களில், படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல், சத்யா ஹெக்டேயின் ஒளிப்பதிவில், கண்களுக்கு விருந்தாக உள்ளது. இம்ரான் சர்தாரியாவின் அற்புதமான நடன இயக்கத்தில், இந்தப் பாடலில், காதலின் சாரத்தை அழகாகப் படம்பிடித்து காட்டுகிறது. புகழ்பெற்ற இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைப்பில், ஐந்து மொழிகளிலும் இசை ரசிகர்களை, மயக்கும்படி இந்தப்பாடல் அமைந்துள்ளது. பாடலாசிரியர் விவேகாவின் அருமையான வரிகள், காதலின் பல கோணங்களை அழகாக எடுத்துக்காட்டுகிறது. ஹரிசரண் மற்றும் ஸ்ருத்திகா ஆகியோரின் அற்புதமான குரல்களில், இப்பாடல் மனதை மயக்குகிறது. துருவா சர்ஜா நடிப்பில் உருவாகியுள்ள…
Read More