தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தமிழ்நாடு அரசியலில் களமிறங்குவதாக அறிவித்து “தமிழக வெற்றிக் கழகம்” என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். இதற்கான அறிவிப்புகள் வெளியான நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சின்னம் மற்றும் கட்சி பாடல் உள்ளிட்டவை வெளியிடப்பட்டன. இந்த வரிசையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு, “வெற்றிக் கொள்கைத் திருவிழா” என்ற பெயரில் விக்கிரவாண்டியை அடுத்த வி சாலையில் நடைபெற இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பலர் த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பலர் மாநாடு சிறப்பாக நடைபெற…
Read MoreDay: October 26, 2024
விஜய்யின் த.வெ.க. மாநில மாநாடு.. வி சாலை நோக்கி சைக்கிள் பேரணியை தொடங்கிய நடிகர் சௌந்தரராஜா
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சௌந்தரராஜா. இவர் சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, பூஜை, தெறி, தர்மதுரை, றெக்க, கத்தி சண்டை, பிகில் மற்றும் பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிகில் படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்த பிறகு அவருக்கு நெருக்கமான இவர், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளில் சௌந்தரராஜா ஈடுபட்டு வருகிறார். அதன்படி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெயர் அறிவிக்கப்பட்டு, கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்ட மறுநாளே தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியுடன் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்ற நடிகர் சௌந்தரராஜா கோவில் சன்னதியில் கட்சி கொடியை வைத்து சிறப்பு பூஜைகளை செய்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் குறித்து தொலைகாட்சி…
Read More