முன்ஜென்ம கதையை தீவுவாசிகள் பின்னணி யில் சொல்லி இருக்கிறார்கள். 2024 இல் நிகழ் காலத்தில் கதை தொடங்குகிறது. போலீசால் கண்டுபிடிக்க முடியாத நபர்களை தனது தீவிர வேட்டையாடல் மூலம் கண்டுபிடித்து கொடுத்து அதற்கான அன்பளிப்பை காவல்துறையில் பெற்றுக்கொள்ளும் சூர்யா. அவருக்கு உதவியாக யோகி பாபு. இதே வேலையை பிழைப்பாக நாயகி திஷா பதானியும் செய்து வருகிறார். அவருக்கு உதவியாக ரெடின் கிங்ஸ்லி. இதற்கிடையே ஆய்வுக் கூடம் ஒன்றில் சிறுவர்களின் மூளைத் திறனை அதிகரிப்பதற்கான ஆய்வு நடக்கிறது. இந்த ஆய்வுக் கூடத்தில் இருந்து அதிசய மூளைத் திறன் கொண்ட சிறுவன் ஒருவன் தப்பி விட, ஆய்வுக்கூடம் அனுப்பி வைத்த அடியாட்கள் சிறுவனை வெறியுடன் தேட, அவனுக்கோ சூர்யாவை பார்த்த மாத்திரத்தில் இன்ப அதிர்ச்சி. சூர்யாவும் அவனைப் பார்த்த மாத்திரத்தில் அவனுக்கும் தனக்குமான இனம் புரியாத அன்யோன்யத்தை உணர்கிறார்.…
Read More