வங்கியில் சேமிப்பது நல்லது என்ற கருத்தை உடைத்து நொறுக்கி இருக்கும் படம். நம் பணத்தை நcமக்கே தெரியாமல் வங்கி ஊழியர்களே எடுத்தாண்டு இருக்கும் காட்சிகள் அடி வயிறு வரை நம்மை கலங்க வைக்கின்றன. நாயகன் சத்யதேவ் ஒரு வங்கியில் பணிபுரிகிறார். அங்கு தன் தேவைக்காக ரூ. 4 லட்சத்தை மோசடியாக எடுக்கிறார். அதே ரூட்டில் வங்கியில் 5 கோடி பணம் எடுக்கப்படுகிறது. அதை எடுத்தது யார்? அதன் மூலம் நாயகனுக்கு நேர்ந்த பாதிப்பு என்ன? கேள்விக்கான விடை பரபர கிளைமாக்ஸ். அவசர தேவைக்கு ஒரு தப்பை செய்துவிட்டு அதனால் ஏற்படும் இன் னல்களால் பாதிக்கப்படும் காட்சிகளில் சத்யதேவ் நடிப்பில் அனுபவம் பூத்துக் குலுங்குகிறது. நாயகியாக வரும் பிரியா பவானி சங்கர் கொஞ்சம் காதல் நிறைய பயம் என்று காட்சிகளில் நிரம்பி நிற்கிறார். நாயகனை சிக்கலில் மாட்டி விடும்…
Read MoreDay: November 24, 2024
லைன் மேன் – திரை விமர்சனம்
சாதனை படைக்கத் துடிக்கும் ஒரு விஞ்ஞானி சாதாரணனாக இருந்து விட்டால்… அவன் கனவு கடைசி வரை கனவு தானா… அல்லது நனவாகுமா? தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் உள்ள உப்பள மின் மையத்தில் லயன்மேனாக இருக்கிறார் சார்லி. மின் பொறியியல் பட்டதாரியான அவரது மகன் ஜெகன் பாலாஜி இளம் விஞ்ஞானி. தனது கண்டுபிடிப்புகள் மூலம் மக்களுக்கு உதவ எண்ணுகிறார். மின்விளக்குகளை கண்ட்ரோல் செய்ய தானியங்கி கருவி ஒன்றை கண்டு பிடிப்பவர், அதற்கு அரசு அங்கீகாரம் கிடைக்க பகீரத பிரயத்தனம் செய்கிறார். ஆனால் அவரது அத்தனை முயற்சியும் பணால் ஆக, துவண்டு போகிறார். அவரது கண்டுபிடிப்புக்கு எதிராக சில சதி வேலைகள் நடக்க, சதிகளை தகர்த்து அவரால் தனது படைப்பை அரசு அங்கீகாரத்துடன்மக்களிடம் கொண்டு சேர்க்க முடிந்ததா என்பது எதிர் பார்ப்புக்குரிய கதைக் களம். உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு…
Read More