பிரபல முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள, “கேம் சேஞ்சர்” திரைப்படம், இந்தியாவெங்கும் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரித்துள்ளனர். கேம் சேஞ்சர் படத்தின் தமிழ் பதிப்பினை, எஸ்விசி ஆதித்யராம் மூவீஸ் வழங்குகிறது. இரண்டு மெகா ஸ்டார் தயாரிப்பாளர்களான திரு.தில்ராஜு & திரு.ஆதித்யராம் இந்த மெகா பட்ஜெட் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கேம் சேஞ்சர் திரைப்படம் ஏற்கனவே உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்திய சினிமாவில் முதன்முறையாக, கேம் சேஞ்சர் திரைப்படக்குழு, அமெரிக்காவில் டிசம்பர் 21, 2024 அன்று டெக்சாஸின் கார்லண்டில் உள்ள கர்டிஸ் குல்வெல் மையத்தில், ஆடம்பரமான முன் வெளியீட்டு நிகழ்வை நடத்துகிறது. கரிஸ்மா ட்ரீம்ஸின் ராஜேஷ் கல்லேபள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த…
Read MoreDay: November 28, 2024
‘மிஸ் யூ’. – ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா
7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமாண்டிக் பீல் குட் படமாக உருவாகியுள்ளது. இந்தப்படத்தை ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை இயக்கிய N.ராஜசேகர் இயக்கியுள்ளார். ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தபடத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ‘மிஸ் யூ’ திரைப்படம் வரும் நவ- 29ல் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.…
Read More